Tag Archives: Farmer Tending the Sapling

Sai Inspires (Tamil Translation): 10th July 2013

Spend your time in the contemplation of the beauties of Nature that are spread out before you in the earth and sky. Enjoy the green expanses of the crops, cool breezes that waft contentment and joy, the panorama of coloured clouds, the music of the birds, etc. Sing the glory of God as you walk in Nature, along the bunds of the fields and the banks of the canals. Avoid polluting the air with vengeful boasts. Do not spend time in hateful talks when you see God has created such wonderful evidences of love! Living in these placid surroundings, you should not disturb the sky with your shouts and curses. Any seed needs water and manure to grow and yield a rich harvest. So too, the tiny sapling of spiritual yearning for liberation from bondage also needs water and manure. Just as a wise farmer will care for his crops dearly, you must take care of your habits to reap the harvest of liberation.

– Divine Discourse, September 2, 1958

நிலத்திலும், ஆகாயத்திலும், உங்கள் முன் பரந்து விரிந்திருக்கிற இயற்கையின் வனப்பை எண்ணிப்பார்ப்பதில் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். பயிர்களின் பச்சை விரிப்புகளை, மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் குளிர்ந்த தென்றலை, வண்ணமயமான மேகங்களின் பரப்பை, பறவைகளின் இசையை அனுபவியுங்கள். வயல் வரப்புகள், கால்வாய் கரைகள், ஆகிய இயற்கைச் சூழலில் நீங்கள் நடந்து கொண்டிருக்கையில் கடவுளின் புகழைப் பாடுங்கள். உங்கள் வெறித்தனமான தற்புகழ்ச்சியால் காற்றுமண்டலத்தை அசுத்தப்படுத்தாதீர்கள். கடவுள் இம்மாதிரியான அன்பின் சான்றுகளை அளித்திருப்பதைப் பார்த்த பின்பும் கூட நீங்கள் வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் பேச்சுகளில் நேரத்தைச் செலவிடாதீர்கள்! இம்மாதிரியான அமைதியான சூழல்களில் இருந்து கொண்டு, உங்கள் கத்தல்களாலும், சாப வார்த்தைகளாலும் ஆகாயத்தின் அமைதியைக் குலைக்காதீர்கள். நன்றாக வளர்ந்து, நல்ல படியான விளைச்சலைத் தருவதற்கு எந்த விதைக்கும் நீரும், உரமும் தேவைப்படுகிறது. அதே போல, பற்றுதலிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்கிற ஆன்மீக விழைதல் எனும் இளஞ்செடிக்கும் நீரும் உரமும் தேவைப்படுகிறது. எவ்வாறு ஒரு புத்திசாலியான உழவன் தன் பயிர்களைக் கவனமாக பார்த்துக் கொள்கிறானோ, அவ்வாறே மோக்ஷம் எனும் நல்ல விளைச்சலை அடைய வேண்டுமெனில், நீங்களும் உங்கள் பழக்கவழக்கங்களை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 2, 1958