Tag Archives: five elements

Sai Inspires (Tamil Translation): 17th January 2013

Desire makes one crave for sabdha (sounds), sparsha (touch), rupa (form), rasa (taste), gandha (smell) – the qualities of the five Elements that constitute the body. One is prompted by the element of Space present within to seek sweet sounds that satisfy the ear; by the element of Air within, to run after smooth and soft things that yield pleasure to the skin, by the element of Fire to pursue things that are beautiful and appealing to the eye; the Water element makes one crave for food and drink that are tasty to the tongue, and the element of Earth urges one to cater to the nose, by trying to enjoy pleasant smells. Just as the high temperatures from the Sun is controlled, modulated and reduced by the systems in your body to a congenial temperature of 98.4 degrees, you must keep the forces of your elemental passions in check and bring it down to tolerable levels, for congenial living.

– Divine Discourse, February 19, 1964

ஆசை இவ்வுடலை அமைக்கும் பஞ்ச பூதங்களின் தன்மைகளான சப்தம் (சத்தம்), ஸ்பர்ஷம் (தொடுதல்), ரூபம் (உருவம்), ரசம் (சுவை) மற்றும் கந்தம் (நறுமணம்) ஆகியவற்றிற்காக ஒருவரை ஏங்க வைக்கிறது. உள்ளே இருக்கும் பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயம் செவிக்கு இனிமையளிக்கும் இனிமையான சப்தங்களைக் கேட்கச் செய்கிறது; காற்று தோலுக்கு இனிமை தரும் மிருதுவான விஷயங்களை நாடச் செய்கிறது; நெருப்பு கண்களுக்கு இனிமையான அழகான விஷயங்களைக் காணச் செய்கிறது; நீர் நாவிற்கு இனிமை தரும் உணவு மற்றும் பானத்தை அருந்தச் செய்கிறது; நிலம் நாசிக்கு இனிமை தரும் இனிமையான நறுமணங்களை நுகரச் செய்கிறது. எவ்வாறு சூரியனிலிருந்து வரும் கடுமையான வெப்பம், உங்கள் உடலின் பாகங்களால் உடலிற்கு ஏற்றவாறு 98.4 டிகிரி  வெப்பத்தில் சீராக்கப்படுகிறதோ அவ்வாறே இந்தப் பஞ்ச பூதங்களின் விழைதல் கட்டுக்குள் வைக்கப்பட்டு, பொறுத்துக் கொள்ளும்படியாக நல்வாழ்கைக்கு ஏற்றவாறு வைத்துக் கொள்ளவும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 19, 1964

Sai Inspires (Tamil Translation): 8th December 2012

Divinity expresses itself infinitely as the five elements – the sky, the wind, the fire, the water and the earth. All creation is but a combination of two or more of these in varying proportions. The characteristic nature of these elements are sound, touch, form, taste and smell, cognized by the ear, the skin, the eye, the tongue and the nose. All the elements are abundant in Nature and are precious and potent with Divinity. So use them in moderation, reverentially, with humility and gratefulness. Excessive or inappropriate usage will injure your well-being just as drinking more or less water than needed is a torture. Inhaling more air is suffocating. Fire in moderation can warm or serve to heat and melt, but beyond a certain limit, it is a holocaust. Even excessive use of sound will distract people and drive them crazy. Hence, learn to use the natural resources intelligently, in moderation, with the idea of loving service to all in the community.

– Divine Discourse, October 15, 1966

ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகிய பஞ்சபூதங்களின் மூலம் பற்பல வடிவங்களில் தெய்வீகம் தன்னை வெளிப்படுத்துகிறது. படைப்பனைத்தும் இவற்றின் கலவையே. செவிகள், தோல், கண், நாக்கு மற்றும் மூக்கு ஆகியவற்றால் உணரப்படும் ஒலி, உருவம், ஒளி, சுவை மற்றும் மணம் ஆகியவை இவற்றின் இயல்பான குணாதிசயங்களே. இவையனைத்தும் இயற்கையில் அதிகான அளவில் உள்ளன. இவை மிகவும் மதிப்பு வாய்ந்தவை, தெய்வீகம் நிறைந்தவையாகும். ஆகையால் இவற்றை மிதமாகவும், மரியாதையுடனும், பணிவுடனும், நன்றியுணர்வுடனும் உபயோகப்படுத்துங்கள். எவ்வாறு தேவைக்கு அதிகமாகவோ குறைவாகவோ நீரைப் பருகினால் அது சித்திரவதையாக இருக்குமோ, அவ்வாறே இவற்றை அளவுக்கு அதிகமாகவோ தேவையில்லாமலோ உபயோகப்படுத்தினால் அவை உங்களுக்கு ஊறு விளைவிக்கும். அதிகமான அளவில் காற்றை சுவாசித்தால் மூச்சடைக்கும். நெருப்பு அளவாக இருந்தால் இதமாகவும், சுட வைக்கவும், இளக்கவும் பயன்படும். ஆனால் ஒரு அளவிற்கு மேல் அதுவே பேரழிவாக மாறிவிடும். அளவிற்கு அதிகமான ஒலியும் கூட மக்களின் கவனத்தைச் சிதரடித்து அவர்களைப் பைத்தியமாக மாற்றும். எனவே புத்திசாலித்தனமாகவும், மிதமாகவும், சமுதாயத்திற்கு சேவை செய்யும் மனப்பான்மையும் கொண்டு இயற்கை வளங்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.

– தெய்வீக உரை, அக்டோபர், 15, 1966

25th March 2012

In the Geeta Lord Krishna emphatically told Arjuna,”Many people anxious to offer uninterrupted worship to God, desire to go into the thick forest; this is an insane step. There is no need to seek the jungle as if I am only there. There is no place where I am not; there is no form which is not Mine. I am the five elements: earth, water, fire, air, ether! Where can you find a place devoid of one or other of these five? The fiery nature of fire is I Myself; I am life in all living beings. I am the strength of the strong, the strength that is free from greed and lust. To experience My presence and My glory, there is no special place, for I am everything, everywhere, ever.”

– Geetha Vahini, Chapter 12

கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆணித்தரமாக அர்ஜுனனிடம் இவ்வாறு கூறினார். “மக்கள் பலர் எனக்கு தடையில்லாமல் என்னை ஆராதிப்பதற்கு அடர்ந்த காட்டிற்குச் செல்ல விரும்புகிறார்கள். இது பைத்தியக்காரத்தனமான நடவடிக்கை ஆகும். நான் ஏனோ காட்டில் இருப்பதாக எண்ணி காட்டிற்குச் செல்லத் தேவை இல்லை. நான் இல்லாத இடம் இல்லை; என்னுடையாதாக இல்லாத எந்த உருவமும் இல்லை. நானே பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆவேன்! இந்த ஐந்தில் ஒன்றில்லாமல் எந்த ஒரு இடத்தை உங்களால் கான முடியும்? நெருப்பின் கொழுந்துவிட்டெரிகின்ற இயல்பு நானே; நான் அனைத்து ஜீவராசிகளின் உயிராக உள்ளேன். நானே பலமானவர்களின் பொறாமையும் காமமும் இல்லாத பலமாக உள்ளேன். நான் இருப்பதையும் என் மகிமையையும் அனுபவிப்பதற்கு நீங்கள் எந்த ஒரு விசேஷமான இடமும் இல்லை, ஏனெனில் நானே எல்லாமாகவும், எல்லா இடத்திலும், எப்பொழுதும் உள்ளேன்.

– கீதா வாஹினி, அத்தியாயம் 12