Tag Archives: Forbearance

Sai Inspires (Short – Tamil) – 9/Feb/2021

Forbearance, compassion and incorruptible virtue are the three pillars of a happy life.

Bhagawan Sri Sathya Sai Baba
Divine Discourse, April 1973

Sai Inspires (Tamil Translation): 24th December 2012

In the world today all those who are held in high esteem as great personages, have earned their good name only by their character and conduct. To accomplish anything, one should have a firm determination. All religions and scriptures agree that helping fellow-beings in times of need and saving them from distress is the greatest virtue. Every human being has equal rights in the world, for Divinity is present in all. To enjoy peace of mind, it is essential to practice forbearance and equanimity. Good and bad, rich and poor, educated and uneducated exist in every country. Even though born in the same family, some are narrow minded and have crooked ideas and indulge in selfish deeds, while others are noble and selfless. To be friendly towards all beings and do good with love is the primary duty of all.

– Divine Discourse, December 25, 1992

இன்றைய உலகில் மாபெரும் மனிதர்களாகக் கருதப்படும் மக்கள், தம் குணத்தாலும் நடத்தையாலும் மட்டுமே அத்தகைய நிலையை எய்தியுள்ளார்கள். எதனை அடைய வேண்டுமானாலும் உறுதியாக இருக்க வேண்டும். அனைத்து மதங்களும், புனித நூல்களும் சக மனிதர்களுக்கு உதவி தேவைப்படும் பொழுது அவர்களுக்கு உதவி அவர்களைத் துயரத்திலிருந்து மீட்பதே மிக உயர்ந்த நற்குணம் என்பதை ஆமோதிக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் இவ்வுலகில் சம உரிமை இருக்கிறது. ஏனெனில் அனைவரிலும் கடவுள் உறைகிறார். மன அமைதியை அனுபவித்திட சகிப்புத்தன்மையும் சம மனப்பாங்கும் கொள்வது அத்தியாவசியமானதாகும். நல்லோரும் தீயோரும், ஏழையும் பணக்காரரும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ளார்கள். ஒரே குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சிலர் குறுகிய மனப்பான்மை கொண்டு, தீய எண்ணங்களுடன், சுயநலமான செயல்களில் ஈடுபடுகிறார்கள், ஆனால் மற்றவர்களோ உயர்ந்த எண்ணத்துடன் தன்னலமற்றவர்களாகவும் இருக்கின்றனர். அனைத்து ஜீவராசிகளிடமும் தோழமை கொண்டு, அவர்கட்கு அன்புடன் நன்மை செய்வதே அனைவரின் தலையாய கடமையாகும்.

– தெய்வீக உரை, டிசம்பர் 25, 1992

Sai Inspires (Tamil Translation): 29th September 2012

The Government, the administration and the people (prabhuthwam, adhikaaris and praja) are like the three blades of an electric fan; when all three rotate together in the same direction and at the same speed, they conduce to comfort. Anger, malice, greed, envy – all these are obstacles in the path of love and cooperation. They lower man from the Divine to the animal level. Bear with others with patience and understanding; practise forbearance and sympathy. Try to discover points of contact rather than that of conflict. Spread brotherliness and deepen kindness through knowledge. Then without fail, life shall become worthwhile.

– Divine Discourse, August 3, 1966

அரசாங்கம், அதிகாரிகள் மற்றும் மக்கள் ஒரு மின்விசிறியின் மூன்று தகடுகளைப் போன்றவர்கள். இம்மூன்றும் ஒரே திசையில் ஒரே வேகத்தில் சுற்றும்பொழுது அவை சுகமளிக்கும். கோபம், காழ்ப்புணர்ச்சி, பேராசை மற்றும் பொறாமை ஆகிய அனைத்தும் அன்பு மற்றும் ஒத்துழைப்பின் பாதையில் தடைகளாக இருக்கின்றன. மனிதனை தெய்வீக நிலையிலிருந்து மிருக நிலைக்குத் தள்ளுகின்றன. பிறரைப் பொறுமை மற்றும் ஒத்திசைவுடன் பொறுத்துக் கொள்ளுங்கள். பொறுமையையும் பரிவையும் பின்பற்றுங்கள். முரண்பாட்டிற்கு பதிலாக ஒத்திசைவிற்கான குறிப்புகளைக் கண்டுபிடிக்க முயலுங்கள். சகோதரத்துவத்தை பரப்பி, அறிவின் மூலம் இரக்கத்தை ஆழமாக்குங்கள். அவ்வாறானால், தவறாமல் வாழ்க்கை பயனுடையதாக அமையும்.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 3, 1966

Sai Inspires (Tamil Translation): 2nd September 2012

Bhagavan Sri Sathya Sai Baba

To tame anger and other negative emotions is a hard and slow process, which requires patience, persistence and time. There was once a huge wrestler who was strutting along a street, proud of his physical strength and victory over many rivals. As he passed by, an innocent middle aged woman laughed at his stature. The wrestler observed this, gnashed his teeth in anger and was about to pounce on her. The woman retorted, “How can you consider yourself strong when you cannot even take a woman’s laughter calmly?” The wrestler, in a split second, realized his folly and hung his head in shame. Forbearance (Sahana) is the best spiritual practice (Sadhana). Practice forbearance and fortitude – this is the foremost and greatest lesson from the scriptures.

– Divine Discourse, July 3, 1966

கோபத்தையும், தீய உணர்ச்சிகளையும் பணியவைப்பது என்பது, பொறுமை, உறுதி மற்றும் நேரம் ஆகியவை தேவைப்படும் ஒரு கடினமான மெதுவான வழிமுறையாகும். ஒரு முறை உருவத்தில் பெரிய ஒரு மல்யுத்த வீரன் ஒரு வீதியில், தன் உடல் பலம் மற்றும் எதிராளிகளின் மீது அவன் கண்ட வெற்றி ஆகியவற்றைப் பற்றி தற்பெருமையுடன் திரிந்து கொண்டிருந்தான். அவன் அவ்வாறு செல்லும் போது, ஒரு வெகுளியான நடுவயதுப் பெண்மணி அவன் உடலமைப்பைப் பார்த்துச் சிரித்தார். இதனைக் கண்ட மல்யுத்த வீரன், தன் கோபத்தில் பற்களைக் கடித்துக் கொண்டு அவள் மீது பாயத் தயாரானான். அந்தப் பெண் பதிலுக்கு, “ஒரு பெண்ணின் சிரிப்பைக் கூட அமைதியாக எடுத்துக் கொள்ளத் தெரியாத உன்னை எவ்வாறு நீ பலசாலி எனக் கருதுகிறாய்?” என்று கூறினாள். மல்யுத்த வீரன் நொடி கணத்தில், தன் தவறை உணர்ந்து வெட்கத்தால் தலை குனிந்தான். பொறுமை (ஸஹனம்) என்பதே உயரிய ஆன்மீக சாதனையாகும். பொறுமையையும் மனவுரத்தையும் கடைபிடியுங்கள் – இதுவே புனித நூல்களின் மிக முக்கியமான உயரிய பாடம் ஆகும்.

– தெய்வீக உரை, ஜூலை 3, 1966