Tag Archives: guru

Sai Inspires (Tamil Translation): 21st July 2013

Human beings are a mixture of Divinity, Demon and Human (Daiva, danava and manava). The wickedness of the ogre can be overcome by the quality of mercy and charity (daya), sympathy and empathy. Pride can be overcome through self-control (dama), detachment, and renunciation; Egoism can be overcome by following the code of conduct (dharma) prescribed by the impartial sages, and by channelizing your instincts and impulses into fruitful action. When these three Gunas are thus sublimated, Manava (human) is transformed into Madhava (God). Make the best use of your Guru. Acquire from Him the skills for winning peace of mind and bliss (shanti and santosha), the Grace of God, the lessons of spiritual practice (Sadhana), and the fruits of good and holy company (sathsang); do not fritter away your energy and time, seeking sensory satisfaction in ungodly company.

– Divine Discourse, July 24, 1964

மனிதர்கள் தெய்வீகம், அசுரத்தனம் மற்றும் மனிதத்துவம் (தெய்வ, தானவ மற்றும் மானவ) ஆகியவற்றின் கலவை ஆவர். தயை, தயாள குணம், இரக்கம் மற்றும் மாற்றார் உணர்வறிதல் ஆகியவற்றினால் இராக்ஷசனின் தீயகுணம் வெற்றி கொள்ள முடியும். சுயக்கட்டுப்பாடு (தம), பற்றின்மை மற்றும் துறவு ஆகியவற்றால் அஹங்காரத்தை வெற்றி கொள்ளலாம். நடுநிலை தவறாத முனிவர்கள் அளித்த தர்மத்தினைக் கடைப்பிடிப்பதன் மூலமும், உங்கள் உந்துதல்களை பயனான செயல்கள் புரிவதில் இயக்குவதன் மூலமும் தற்பெருமையை வெற்றி கொள்ள இயலும். இவ்வாறு இம்மூன்று குணங்களை நயமாக்கினால், மானவன் (மனிதன்) மாதவனாக (தெய்வமாக) மாறுகிறான். உங்கள் குருவை நன்றாக உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். மன அமைதி மற்றும் ஆனந்தம், கடவுளின் அருள், ஆன்மீக சாதனைக்கான பயிற்சிகள் மற்றும் சத்சங்கத்தின் பலன்கள் ஆகியவற்றைப் பெறும் திறனை அவரிடமிருந்துப் பெறுங்கள். தெய்வ நம்பிக்கையில்லதோர் நட்பில் புலனின்பங்களை நாடுவதில் உங்கள் சக்தியையும் நேரத்தையும் வீணடிக்காதீர்கள்.

– தெய்வீக உரை, ஜூலை 24, 1964

Sai Inspires (Tamil Translation): 8th July 2013

There is no use in asking a doctor to advise you about the plans for the building you propose to raise, nor is it wise to ask an engineer to assuage the pain. Go to the proper Guru and learn from him the cardinal principles to guide your lives. Take time to understand, internalize and practice – what is your code of conduct, what does it allow, what does it condemn, why should it be followed? You must evolve your own code of conduct (Athma Dharma) centred on the Divine, appropriate to your situation, which is based on the firm belief on the omnipresence and omnipotence of the Divine Self which pervades the entire Universe.

 – Divine Discourse, August 14, 1964

ஒரு மருத்துவரிடம் நீங்கள் கட்டவிருக்கின்ற கட்டிடத்தைப் பற்றி ஆலோசனை பெறுவதும், ஒரு கட்டிட வல்லுனரிடம் உங்கள் வலியைக் குறைப்பதற்கான ஆலோசனை பெறுவதும் பயனற்றவையாகும். சரியான குருவை நாடி, உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் முக்கியமான தத்துவங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கோட்பாடு மற்றும் அது எவற்றை அனுமதிக்கிறது, அது எவற்றை கண்டிக்கிறது மற்றும் எதனைப் பின்பற்ற வலியுறுத்துகிறது என்பதைப் புரிந்து கொண்டு, ஜீரணித்து, பின்பற்றுவதற்கு நிதானமாகச் செயல்படுங்கள். தெய்வத்தை மையமாகக் கொண்டு, உங்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு, இந்தப் ப்ரபஞ்சம் முழுவதையும் வியாபிக்கின்ற தெய்வத்துவத்தின் எங்கும் நிறைந்த, எல்லாம்வல்ல தன்மையின் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கையின் மேல் அமைக்கப்பெற்ற உங்களுக்கான ஒரு கோட்பாட்டினை (ஆத்மா தர்மத்தை) நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 14, 1964

Sai Inspires (Tamil Translation): 1st March 2013

The letter ‘Gu’ in the word Guru signifies Gunatheetha – the one who has transcended the three qualities of Ignorance (Thamasik), Passion (Rajasik) and Virtuousness (Sathvik) and the letter ‘Ru’ signifies the one who is Roopa Varjitha (Beyond the Form). The Guru destroys illusion and sheds light, His Presence is ever cool and comforting. He comes to remind people that they have forgotten that they have lost the most precious part within themselves and yet are unaware of it! He is the Physician for curing the illness which brings about the repetitive suffering from birth to death. He is adept at the treatment needed for the cure. If you have not yet got such a Guru, Pray to the Lord Himself to show the way and He will most certainly come to your rescue!

– Divine Discourse, August 1, 1956

‘கு’ என்கிற சொல் குணாதீதன் – மூன்று குணங்களான அறியாமை (தாமசிகம்), தீவிர உணர்ச்சி (ராஜசிகம்) மற்றும் நற்குணம் (சாத்விகம்) ஆகியவற்றைக் கடந்தவர். ‘ரு’ என்கிற சொல் ரூப வர்ஜிதன் (உருவத்தைக் கடந்தவர்) என்பதை உணர்த்துகிறது. குரு, மாயையை அழித்து ஒளியேற்றுகிறார், அவருடைய அருகாமை என்றும் குளுமையாகவும் சுகமளிப்பதாகவும் உள்ளது. தம்முள் உள்ள மிக அரியதான பகுதியைத் தொலைத்துவிட்டு, அதனை அறியாமலிருக்கின்றனர் என்பதனை மக்களின் நினைவிற்குக் கொண்டுவருவதற்காகத் தோன்றுகிறார்! பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான மீண்டும் மீண்டும் பீடிக்கும் நோயைத் தீர்க்கும் மருத்துவர் அவர். இதனை குணப்படுத்துவதற்கான சிகிச்சையில் அவர் கைதேர்ந்தவர். அப்படிப்பட்ட குரு உங்களுக்கு இன்னும் கிட்டவில்லையெனில், கடவுளிடம் உங்களுக்கு வழிகாட்டுவதற்கு பிரார்த்தித்தால் அவர் நிச்சயமாக உங்களைக் காப்பாற்ற வருவார்!

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 1, 1956

Sai Inspires (Tamil Translation): 23rd January 2013

When I sang the bhajan ‘Manasa Bhajare…’ I called on all those suffering in the endless round of birth and death to worship the feet of the Guru, the Guru that was announcing Himself, Who had come again for taking upon Himself the burden of those who find refuge in Him. That was the very first message of Mine to humanity! I said, ‘worship in your mind’. I do not need your flowers and fruits that you purchase for a small price. They are not genuinely yours. Give Me something that is yours, something which is clean, fragrant with the perfume of virtue and innocence, washed in tears of repentance. Garlands, fruits, etc. are an exhibition of your devotion. Some can afford it, the poor feel sorry that they cannot. Install the Lord in your heart and offer Him the fruits of your actions and the flowers of your innermost thoughts and feelings. That is the worship and expression of devotion God likes the most!

– Sathya Sai Speaks, Vol 1, Dasara 1953

நான் “மானஸ பஜரே…” என்று பாடியபோது, நான் பிறப்பு மற்றும் இறப்பின் சுழலில் முடிவில்லாது மாட்டிக் கொண்டு துயரப்படுபவர்களை குடுவின் பாதங்களை வழிபட அழைத்தேன். யார் தன்னிடம் அடைக்கலம் அடைகிறார்களோ அவர்களின் பாரத்தை ஏற்றுக் கொள்ள வந்துள்ள அந்த குருவே தன்னை இவ்வாறு பிரகடனம் செய்து கொண்டார். அதுவே மானிடத்திற்கு நான் அளித்த முதன்முதல் உபதேசமாகும்! நான் “உங்கள் மனதில் வழிபடுங்கள்” என்று சொன்னேன். நீங்கள் மலிவான விலைக்கு வாங்கும் மலர்களும் பழங்களும் எனக்குத் தேவையில்லை. அவை உண்மையில் உங்களுடையவையல்ல. உங்களுடைய என்றுள்ள தூயதான, நற்குணம் மற்றும் அப்பாவித்தனம் எனும் நறுமணம் கொண்ட,  கழிவிரக்கத்தால் கழுவப்பட்ட ஏதோவொன்றை எனக்குக் கொடுங்கள். மலர் மாலைகள், பழங்கள் ஆகியவை உங்கள் பக்தியின் பகட்டுத்தன்மையே. சிலருக்கு அதனை அளிக்க வசதியுள்ளது. அதனை அளிக்க முடியவில்லை என்று ஏழைகள் வருத்தப்படுகிறார்கள். கடவுளை உங்கள் இதயத்தில் பிரதிஷ்டை செய்து, உங்கள் கர்மவினைகள் எனும் பழங்களையும், உங்கள் மன ஆழத்திலுள்ள எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் எனும் மலர்களையும் அவருக்கு அர்ப்பணியுங்கள். அதுவே கடவுளுக்குப் ப்ரியமான வழிபாடும், பக்தியின் வெளிப்பாடுமாகும்.

– சாயி அருளமுதம், அத்தியாயம் 1, தசரா, 1953

Sai Inspires (Tamil Translation): 17th October 2012

Like the silkworm that spins from out of itself the cocoon that proves to be its tomb, man spins from out of his mind the cage in which he gets trapped eventually. But there is a way of escape, which the spiritual teacher (Guru) can teach you or which the God in you will reveal to you. Take to the spiritual practices that will bring you relief. Forget the past; do not worry about possible errors or disappointments. Decide and Do. Substitute good thoughts for the bad and cleanse the mind of all evil by dwelling on righteous deeds and holy thoughts. Forget the things you do not want to remember and bring to memory only those things that are worth remembering. Take on the role of the Hero from now on, not the Zero. This is a sure way to achieve spiritual progress.

– Divine Discourse, January 1, 1964

எவ்வாறு ஒரு பட்டுப்புழு தன் கல்லறையாக மாறவிருக்கும் பூச்சிக் கூட்டைத் தன்னுள்ளிருந்து உருவாக்குகிறதோ, மனிதனும் தன் மனதிலிருந்து இறுதியாகத் தான் சிக்கிக்கொள்ளவிருக்கும் கூண்டினை உருவாக்குகின்றான். ஆனால் தப்பிப்பதற்கு ஒரு வழியுள்ளது. ஒரு ஆன்மீக ஆசான் (குரு) உங்களுக்கு அதனை கற்பிக்க இயலும். அல்லது உங்களுள் உள்ள கடவுளே அதனை உங்களுக்குப் புலப்படச் செய்யலாம். உங்களுக்கு நிவாரணம் அளிக்கவல்ல ஆன்மீகப் பயிற்சிகளைத் துவங்குங்கள். கடந்த காலத்தை மறந்துவிடுங்கள்; நடக்கக் கூடிய தவறுகளையும், ஏமாற்றங்களையும் பற்றிக் கவலைப்படாதீர்கள். தீர்மானித்து செயல் புரியுங்கள். தீய எண்ணங்களுக்குப் பதிலாக நல்லெண்ணங்களுக்கு இடமளித்து, நற்செயல்களிலும் புனித சிந்தனைகளிலும் நிலை நிறுத்துவதன் மூலம் உங்கள் மனதினை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஞாபகத்தில் கொள்ள விரும்பாத பொருட்களை மறந்து, ஞாபகத்தில் கொள்ளவல்ல பொருட்களை உங்கள் நினைவிற்குக் கொண்டு வாருங்கள். இக்கணத்திலிருந்து நாயகனின் (ஹீரோ) பாத்திரத்தை ஏற்று பூஜ்ஜியத்தின் (ஜீரோ) பாத்திரத்தைத் துறந்துவிடுங்கள். இது ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு ஒரு உறுதியான வழியாகும்.

– தெய்வீக உரை, ஜனவரி 1, 1964

Sai Inspires (Tamil Translation): 2nd July 2012

The Guru warns and awakens. He reveals the truth and encourages you to progress towards it. Unless you have the yearning, the questioning heart, the seeking intelligence, the Guru cannot do much. The hungry can be fed; the one who has no hunger will discard food as an infliction. The Guru is a gardener, who will tend the plant. But, the sapling must have sprouted before He can take charge. He does not add anything new to the plant, He only helps it to grow according to its own destiny, quicker and completely perhaps, but not against its inner nature. He removes poverty by pointing to the treasure that lies buried within you. He advises the method of recovering it and the vigilance needed to use it to the best advantage.

– Divine Discourse July 14, 1965

குரு எச்சரித்து தட்டி எழுப்புகிறார். அவர் உண்மையை வெளிப்படுத்தி உங்களை அதனை நோக்கி முன்னேறுவதற்கு ஊக்கமளிக்கிறார். உங்களுக்குத் தாபம் இல்லாவிடில், கேள்விகேட்கும் இதயம் இல்லாவிடில், நாடும் புத்திசாலித்தனம் இல்லாவிடில், குருவால் அதிகமாக உங்களுக்கு உதவ முடியாது. பசி உள்ளவருக்கு உணவளிக்கலாம்; பசியே இல்லாதவர் உணவை வெறுப்புடன் நிராகரிப்பார். குரு, செடியைப் பராமரிக்கும் தோட்டக்காரர் ஆவார். ஆனால், அவர் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் முன் அந்த இளஞ்செடி துளிர்த்திருக்க வேண்டும். அவர் புதிதாக எதனையும் அந்தச் செடிக்குச் சேர்ப்பதில்லை, அதன் விதிப்படி, வேகமாக, பெரும்பாலும் முழுநிறைவாக வளர்வதற்கு, அதன் இயல்பிற்கு எதிராக இல்லாமல் அதற்கு உதவி செய்கிறார். உங்களுள் புதைந்திருக்கும் புதையலை உங்களுக்குக் காண்பித்து ஏழ்மையை நீக்குகிறார். அதனை மீட்பதற்கான உபாயத்தையும் அதனிடமிருந்து முழுப்பயனும் பெறுவதற்குத் தேவையான கவனத்தையும் உங்களுக்கு பரிந்துரைக்கிறார்.

– தெய்வீக உரை, ஜூலை 14, 1965

4th March 2012

அர்ஜுனனுக்கு எது பயனுள்ளதோ அதனையே கிருஷ்ணர் போஷித்தார். அர்ஜுனனின் மதிப்பு, ஆத்மானந்தம் மற்றும் தர்மத்தின் மீது முழுக் கவனமும் செலுத்தினார். அர்ஜுனனைத் தனது உயிர்மூச்சாகவே எண்ணி போஷித்துக் காப்பாற்றினார். ஒருவர் எவ்வாறு தமது கண்கள் மற்றும் இதயத்தைக் காக்கிறார்களோ அவ்வாறே அவர் அர்ஜுனனைக் காத்தார். அவ்வாறாக அவனுக்கு புனிதமான விஷயங்களைக் கற்பித்து, அவனிடம் மாற்றத்தை உண்டு செய்தார். எவ்விதமும் ஒப்பிடமுடியாதபடியாக கிருஷ்ணர் அர்ஜுனனை நேசித்தார். அதுவே உண்மையான குருவின் இயல்பாகும். அர்ஜுனனும் சாதாரணமானவன் அல்ல. அவன் கிருஷ்ணரைப் பணிந்து வணங்கி, அவரிடமிருந்துப் பெற்ற பணிகளைத் நேர்மையாகக் கடைப்பிடித்தான். எப்படிப்பட்ட நெருக்கடி இருந்தாலும் கிருஷ்ணரின் ஆணையையும் சொல்லையும் தவறாமல் கடைப்பிடித்தான். அந்த ஆண்டவனுடனான தோழமையை, துன்பங்களிலிருந்து தன்னைக் காக்கும் கவசமாக, தான் வசிக்கும் உடலாக, தான் போஷித்து பலப்படுத்திக் காக்க வேண்டிய ஒரு வஸ்துவாக அணிந்திருந்தான். இவ்வாறு தான் குருவும் சீடனும் இணைந்து இருக்கவேண்டும்.

– கீதா வாஹினி, அத்தியாயம் 11

2nd March 2012

உங்களது குருவை மகிழ்ச்சிப்படுத்தி, அவரது உபதேசங்களைக் கடைப்பிடித்தும் அவருக்குப் பணிவிடை செய்தும் அவரது நல்லெண்ணத்தை வெல்ல வேண்டும். ஆன்மீகப் பயிற்சிகள், உயர்ந்த குணங்கள் மற்றும் அமைதியான சுற்றுப்புறம் ஆகியவற்றால் தீண்டப்படாத வாழ்க்கை வாழ்பவர்கள் எங்கிருந்தாலும், அவர்களுக்கு குருவின்மேல் சிறிதளவு நன்றி இல்லை என்பதை உணர்த்துகிறது. அவர்கள் கிருஷ்ணார்ப்பணம் (கடவுளுக்கு அர்ப்பணம்) என்று சொல்லலாம். ஆனால் அவர்களது செயல்கள் தேஹார்ப்பணத்தை (உடலுக்கு அர்ப்பணம்) தான் நிரூபிக்கின்றன. குருவின் அருளைப் பெறுவதற்கு உங்களது நடத்தையை மாற்றிக்கொள்ளுங்கள். அதன்பிறகு, ஞானமும் ஆனந்தமும் உங்களுடையவையாகிவிடும். ஆனால் அதற்கு பதில் உங்கள் அஹங்காரத்தினாலும் நம்பிக்கையின்மையாலும் நீங்கள் கீழ்ப்படியாமல் விமர்சித்துக்கொண்டு இருந்தீர்களானால் உங்களுக்கு உண்மையின் காட்சி அருளப்படாது. எவ்வாறு பசு தன் கன்றுக்குட்டியை அருகில் அழைக்கிறதோ அவ்வாறே குருவும் தனது சீடரை அருகில் அழைத்து அருள் மற்றும் ஆனந்தமாகிய பாலை அளிக்கிறார். சீடர் மெச்சத்தக்க குணம் பொருந்தியவராக இருக்கவேண்டும். அதன்பிறகு எவ்வாறு சுத்தமான இரும்புத்துண்டு காந்ததினால் ஈர்க்கப்படுகிறதோ, தானாகவே அவருக்கு குருவின் ஆசிகள் கிடைக்கும்.

– கீதா வாஹினி, அத்தியாயம் 10

25th February 2012

வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டுதலே அனைத்து மனித முயற்சிகளின் குறிக்கோள் ஆகும். இதை அடையாமல் ஒருவனால் அமைதியைப் பெறமுடியாது. எவ்வளவு முறை சாந்தி மந்திரத்தை ஜபம் செய்தாலும் அது இதைக் கொடுக்காது. ஒரே மின்சாரமே விதவிதமான கருவிகளான குமிழ் விளக்கு (பல்ப்), ஒலிவாங்கி (மைக்), மின்விசிறி (பேன்), குளிர்சாதனப்பெட்டி (பிரிட்ஜ்), ஒலிப்பதிவுக் கருவி (டேப்ரிகாடர்), மின்சார அடுப்பு ஆகியவற்றை இயக்குகிறது. குருதான் இந்த கண்ணுக்குப் புலப்படாத இந்த மின்னோட்டத்தை உங்களுக்கு வெளிப்படுத்துகிறார். எவ்வாறு ஒரு அந்நியர் ஒரு ஏழையின் வீட்டினுள் நுழைந்து, வீட்டினடியில்  தோண்டி எடுத்து சொந்தம் கொண்டாடும் வகையிலுள்ள ஒரு அரிதான பொக்கிஷம் இருப்பதை அறிவிக்கிறாரோ அவரைப் போன்றவரே குரு. அந்த குரு உங்கள் நன்றிக்கு தகுதியானவராக இருக்கிறார்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 25, 1965

23rd February 2012

உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு இந்த உடலை வழங்கியிருந்தாலும், குருதான் உங்களுள் உறைபவரை சுட்டிக்காட்டுகிறார். ஆபரணம் செய்வதற்கு ஏற்றதாக தங்கத்தை மாற்றுவதற்கு சிறிதளவு வெள்ளியும் செம்பும் சேர்க்கப்படுகிறது. அதுபோலவே இயற்கையின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்த பிரம்மதத்வம் (அதாவது தெய்வீக சாரம்), சிறிதளவு அஹங்காரம் அதாவது ‘நான்’ என்கிற உணர்வு, மற்றும் மமகாரம் அதாவது ‘எனது’ என்கிற உணர்வு, சேர்க்கப்பட்டு ஒரு உலோகக்கலவையாக மாற்றப்படுகிறது. குருவானவர் ஸ்ரவணம், மனனம் மற்றும் நிதித்யாஸனம் (அதாவது தெய்வத்தின் புகழைக் கேட்டல், உள்வாங்குதல் மற்றும் தியானித்தல்) மூலம் ஒருவரது புனிதமான, கலப்படமில்லாத நிலையை மீண்டும் பெற கற்றுத்தருகிறார். இந்த வழிமுறை மூலமாக (ஜீவாத்மாவாகிய) தானும், (பரமாத்மாவாகிய) கடவுளும் ஒன்றே என்பதையும் மேலும் இவை ஒரே பொருளின் வெவ்வேறு அம்சம் என்பதையும் ஒருவர் புரிந்துகொள்ளலாம்.

– தெய்வீக உரை, பிப்ரவரி, 25, 1965