Tag Archives: Happiness

Sai Inspires (Tamil Translation): 24th September 2013

Bhagavan Sri Sathya Sai Baba

People seek frantically for peace and happiness in a thousand ways along a thousand roads. Real peace is to be got only in the depths of the spirit, in the discipline of the mind, in faith in the One base of all this seeming multiplicity. And the joy of that experience, the profound exhilaration which accompanies it cannot be communicated in words. All shravanam and kirthanam (hearing and singing God’s names) is to take you nearer that experience. Shravanam is the medicine that you take internally and kirthanam is the balm you apply externally. Both are needed. Develop devotion to the Lord using as many means as possible. Your mind and the intellect must be trained and controlled, that is the sole aim.

– Divine Discourse, July 10, 1959

மக்கள், ஆயிரக்கணக்கான வழிகளில், ஆயிரக்கணக்கான பாதைகளில் அமைதிக்காகவும், சுகத்திற்காகவும் மக்கள் போராடுகிறார்கள். உண்மையான அமைதி ஆன்மாவின் ஆழத்தின் மூலமும், மனக்கட்டுப்பாட்டின் மூலமும், பல விதமாகத் தெரியும் ஒன்றின் மேலுள்ள நம்பிக்கையின் மூலம் தான் கிடைக்கும். அந்த அனுபவத்தின் மகிழ்ச்சி, அதனுடன் கிடைக்கும் மகத்தான உற்சாகம் ஆகியவற்றை சொற்களினால் தெரிவிக்க முடியாது. ச்ரவணம் மற்றும் கீர்த்தனம் (கடவுளின் திருப்பெயர்களை கேட்டல் மற்றும் பாடுதல்) ஆகியவை உங்களை அந்த அனுபவத்தின் பால் எடுத்துச் செல்வதற்காகத்தான் உள்ளன. ச்ரவணம் நீங்கள் உள்ளே உட்கொள்ளும் மருந்து. கீர்த்தனம் நீங்கள் வெளியும் தடவும் களிம்பு. இரண்டும் தேவையே. எவ்வளவு வழிகள் மூலம் முடியுமோ அவ்வளவு வழிகள் மூலம் கடவுளின் மேல் பக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனம் மற்றும் புத்தி பழக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதுவே இதன் ஒரே குறிக்கோள் ஆகும்.

– தெய்வீக உரை, ஜூலை 10, 1959

Sai Inspires (Tamil Translation): 5th December 2012

The glory of the Divine – the richness, fullness, extent and the depth of Divine experience has to be experienced. It cannot be expressed through any amount of words or plays. You must feel that it is your highest destiny to acquire that experience. You are not a despicable creature, born in slime or sin to eke out a drab existence and be extinguished. You are a mixture of the mortal and immortal (Deha and Deva). Liberation is the means to be free from grief and live in joy. And it is easy to accomplish this. All you need to do is to place all your burdens on God. That will make you carefree, and griefless. Take everything as a Divine Play of the Lord you adore and love. No matter whatever happens clap your hands in bliss and joy, for all is His Divine Play and you can be as happy as He is, for His plans are working, and they are for your highest good!

– Divine Discourse, February 11, 1964

தெய்வத்தின் மகிமை – தெய்வீக அனுபவத்தின் வளம், நிறைவு, பரந்த தன்மை மற்றும் ஆழம் ஆகியவை அனுபவிக்கப்பட வேண்டும். எந்த அளவு சொற்களாலும் செயல்களாலும் அதனை வெளிப்படுத்த முடியாது. அந்த அனுபவத்தைப் பெறுவது உங்கள் பெரும் பாக்கியம் என நீங்கள் கருத வேண்டும். சேற்றிலும் பாவத்திலும் பிறந்து, கேவலமான வாழ்க்கை வாழ்ந்து, முடிவில் அழிந்து போகக்கூடிய ஒரு இழிவான ஜன்மம் இல்லை நீங்கள். நீங்கள் அழியக்கூடியது மற்றும் அழியாதது (தேஹ மற்றும் தேவ) ஆகிய இரண்டின் கலவை. மோக்ஷம் என்பது துயரத்திலிருந்து விடுபட்டு, மகிழ்ச்சியில் வாழ்வதாகும். இதனை அடைவது மிகவும் சுலபமாகும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், உங்கள் சுமைகளைக் கடவுளிடம் வைப்பதே. அது உங்களைக் கவலையில்லாமலும் துயரமில்லாமலும் மாற்றிவிடும். நீங்கள் போற்றி, அன்பு செலுத்தும் தெய்வத்தின் தெய்வீக விளையாட்டு தான் என்று அனைத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள். என்ன நடந்தாலும், ஆனந்தத்திலும் மகிழ்ச்சியிலும் உங்கள் கைகளைத் தட்டுங்கள். ஏனெனில், அனைத்தும் அவர் தெய்வீக செயல் தான். அவர் எவ்வாறு சந்தோஷமாக இருக்கிறாரோ அவ்வாறே நீங்களும் சந்தோஷமாக இருக்க முடியும். அவர் திட்டங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. அவை உங்கள் உயர் நன்மைக்கே!

– தெய்வீக உரை, பிப்ரவரி 11, 1964

Sai Inspires (Tamil Translation): 29th November 2012

Those who are trying to build the human community on the foundation of wealth (dhana) are like builders using sand as their foundation. Those who seek to build it on the rock of righteousness (Dharma) are the wise ones. Always remember that righteousness is the very root of this world. (Dharma Moolam Idham Jagath). Those who practice evil are cowards, they will constantly be haunted by fear and have no peace within them. Practice righteousness and you will remain happy forever. Respect for the parents who brought you into this world is the first lesson in right conduct. And gratitude is the spring which feeds that respect.

– Divine Discourse, February 3, 1964

செல்வத்தை அடித்தளமாகக் கொண்டு மனித சமுதாயத்தை அமைக்க முயற்சிப்பவர்கள், மணலை அடித்தளமாகக் கொண்டு கட்டிடம் கட்டுபவர்களைப் போன்றவர்கள் ஆவார்கள். தர்மம் எனும் பாறையின் மேல் அதனை அமைக்க விழைபவர்களே அறிவுடையோர். தர்மமே இவ்வுலகின் வேர் என்பதனை என்றும் நினைவில் கொள்ளுங்கள் (தர்ம மூலம் இதம் ஜகத்). தீயவற்றைப் பின்பற்றுபவர்கள் கோழைகள். அவர்கள் எப்பொழுதும் பயத்தால் அவதிப்பட்டு, அமைதியில்லாமல் இருப்பார்கள். தர்மத்தைப் பின்பற்றினால் நீங்கள் என்றென்றும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களை இவ்வுலகிற்குக் கொணர்ந்த பெற்றோர்களை மதிப்பதே தர்மத்தின் முதல் பாடம் ஆகும். அந்த மதிப்பிற்கு ஊட்டமளிக்கும் நீரூற்றே நன்றியறிதல் என்பதாகும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 3, 1964

Sai Inspires (Tamil Translation): 22nd November 2012

The happiness that one derives from virtues is far superior to the happiness that you get from the possession of wealth. Unfortunately, many educated youth today are striving for wealth, physical strength and friendship. But all these have little value without the wealth of character. For men or women, character is the foundation. If you lack character, you become feeble in all other respects. Know that one’s strength lies in character and not in the wealth one earns. Materialistic wealth is not what we need today. Wealth can never confer true happiness. Hence, earn the wealth of virtues by developing good character. Without good character, all learning will prove futile, sooner or later. Embodiments of Love! With good character and purity of heart, perform all your actions. Know that even if a small act is done with a pure heart, it becomes fruitful.

– Divine Discourse, 19 November, 2002

செல்வம் சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை விட நற்குணங்கள் மூலம் ஒருவர் பெரும் மகிழ்ச்சி மிகவும் மேலானதாகும். இன்று, துரதிர்ஷ்டவசமாக கல்வி கற்ற பல இளைஞர்கள் செல்வத்திற்காகவும், உடல் பலத்திற்காகவும் தோழமைக்காகவும் பாடுபடுகிறார்கள். நன்னடத்தை எனும் செல்வத்துடன் மதிப்பிடும் பொழுது இவற்றைவிட மதிப்பில் குறைவானவையே. ஆணோ, பெண்ணோ, நன்னடத்தையே அடித்தளமாக உள்ளது. உங்களுக்கு நடத்தை சரியாக இல்லையெனில், நீங்கள் பிற விஷயங்களிலும் தளர்ந்துவிடுவீர்கள். ஒருவருடைய பலம் அவர் ஈட்டும் செல்வத்தில் இல்லை, அவருடைய நன்னடத்தையில் தான் உள்ளது. நமக்கு இன்று தேவைப்படுவது பொருட்செல்வம் இல்லை. செல்வத்தால் என்றும் உண்மையான மகிழ்ச்சியை நல்க முடியாது. ஆகையால், நன்னடத்தையை வளர்ப்பதன் மூலம் நற்குணங்கள் எனும் செல்வத்தை ஈட்டுங்கள். நன்னடத்தையில்லாமல், சீக்கிரமாகவோ தாமதமாகவோ அனைத்து கல்வியும் வீணாகிவிடும். அன்பின் வடிவங்களே! நன்னடத்தையுடனும், இதயத்தூய்மையுடனும் உங்கள் அனைத்துச் செயல்களையும் செய்யுங்கள். தூய்மையான இதயத்துடன் செய்யபடும் ஒரு சிறிய செயலும் கூட நற்பயன் பெரும்.

– தெய்வீக உரை, 19 நவம்பர், 2002

Sai Inspires (Tamil Translation): 8th October 2012

If your thoughts are centred around the body, you will have worries of pains and illnesses, real or imaginary. If they are centred on riches, you will be worried about profit and loss, tax and exemptions. If they roam round fame, then, you are bound to suffer from the ups and downs of scandal, calumny and jealousy. So let them centre round the seat of power and love which deserve willing submission – the Name of the Lord. Let your whole being surrender to it. Then you will be happy forever. For the sages of the Vedic culture, the Name of the Lord was the very breath; they lived on the sustenance, which contemplation of the Lord’s glory provided. God is the very embodiment of Love. He can be won only through Love.

– Divine Discourse, October 3, 1965

உங்கள் எண்ணங்கள் உங்கள் உடலைப் பற்றி இருந்தால், உங்களுக்கு வலிகள் மற்றும் நோய்கள், உண்மை மற்றும் கற்பனை ஆகியவற்றின் கவலைகள் இருக்கும். அவை செல்வத்தைப் பற்றி இருந்தால், இலாபம் மற்றும் நஷ்டம், வரி மற்றும் வரி விலக்கு ஆகியவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்படுவீர்கள். அவை புகழைப் பற்றி இருந்தால், நீங்கள் அவமானங்கள், பழிச்சொற்கள் மற்றும் பொறாமையினால் உண்டாகும் ஏற்றத் தாழ்வுகளாலும் கண்டிப்பாகக் துயரப்படுவீர்கள். ஆகையால், அவை மனமகிழ்வுடன் விழைகிற சரணாகதியைப் பெறத் தகுதியான சக்தி மற்றும் அன்பின் இருப்பிடமான இறைவனின் திருநாமத்தைப் பற்றி இருக்கட்டும். உங்கள் முழு ஜீவனும் அதற்குச் சரணடையட்டும். அவ்வாறானால் நீங்கள் என்றென்றும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேத கலாசாரத்தின் முனிவர்களுக்கு இறைவனின் திருநாமம் தம் உயிர் மூச்சாகவே இருந்தது. கடவுளின் மகிமையின் மேல் உள்ள ஒருமுக மனப்பாங்கு அளித்த ஊட்டத்தைக் கொண்டு உயிர் வாழ்ந்தனர். கடவுள் அன்பின் ஸ்வரூபம். அவர் அன்பினால் மட்டுமே வெற்றி கொள்ளப்படுவார்.

– தெய்வீக உரை, அக்டோபர் 3, 1965

Sai Inspires (Tamil Translation): 22nd September 2012

Statesmen and elected representatives declare that they are trying their best to develop the resources, natural and human, and to provide on the basis of those resources, food, clothing, shelter, education, employment, security and health to the people. But the development of the moral and spiritual resources are neglected and the provision of peace and spiritual happiness is ignored. Happiness and peace do not necessarily follow when people are fed and clothed well, comfortably housed and highly educated, well employed or when there is no injury to health or security. There are quite a large number of people who have all these in plenty but are yet worried, in pain or discontented. Peace and happiness depend on what lies within and not on outer skill or riches. Every being is fundamentally Divine and so, the more one manifests the divine attributes of Love, Justice, Truth and Peace, the more joy one shall be able to give and receive.

– Divine Discourse, August 3, 1966

அரசியல்வாதிகளும், தேர்வு செய்யப்பட மக்கள் பிரதிநிதிகளும் இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் மேம்படச் செய்து, அந்த வளங்களை ஆதாரமாகக் கொண்டு மக்களுக்கு உணவு, உடை, தங்கும் இடம், கல்வி, வேலை, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கத் தம்மால் முயன்ற அளவு முயற்சிப்பதாகப் பறைசாற்றுகிறார்கள். ஆனால் தார்மீக, ஆன்மீக வளங்கள் அலட்சியப்படுத்தப்பட்டு, அமைதி மற்றும் ஆன்மீக ஆனந்தத்திற்கான வழிமுறைகளும் உதாசீனப்படுத்தப்படுகின்றன. மக்கள் நன்றாக உண்டு, நல்ல உடைகள் உடுத்தி, சுகமான இல்லத்தில் தங்கி, நன்றாகப் படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, ஆரோக்கியக் கேடும் பாதுகாப்புக் கேடும் இல்லாமல் இருந்தால் மட்டும் ஆனந்தமும் அமைதியும் தோன்றிவிடாது. இவையனைத்தையும் நன்றாகப் பெற்றுள்ளவர்கள் அதிகமான எண்ணிக்கையில் உள்ளார்கள். ஆயினும், அவர்கள் கவலையிலும், வலியிலும், மனநிறைவில்லாமலும் உள்ளனர். அமைதியும் ஆனந்தமும் உள்ளுள்ளவற்றைச் சார்ந்தவை, வெளிப்புற திறன்கள் மற்றும் வளங்களின் மேலல்ல. ஒவ்வொரு ஜீவனும் அடிப்படையில் தெய்வீகமே. ஆகையால், ஒருவர் தெய்வீகப் பண்புகளான பிரேமை, நீதி, சத்யம் மற்றும் அமைதி ஆகிவற்றை அதிக அளவில் பின்பற்றினால், அதிக அளவில் சந்தோஷத்தை அளிக்கவும் பெறவும் முடியும்.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 3, 1966