Tag Archives: illusion

Sai Inspires (Tamil Translation): 13th February 2013

The Lord has declared in the Geetha, “Mama maaya” or “My illusion”. This implies that the world is His handiwork, His Divine sport & glory (leela & mahima). It is devised as a training ground, an inspiration for those who desire to see Him, Who is its Source, Director, & Master. Once you see the world as the stage for His play, then you will no longer be misled, nor distracted, nor deceived by any tricks or stage effects. From illusion, you must get interested in the Author, the Master. The play is real only as long as it lasts, when you are in the theatre. So too, the world is just a mirage! A mirage does not originate from rain. It will not reach any lake or sea. It was not there before the sunrise, nor will it be there after the sunset. It is just an intervening phenomenon, it is best left alone! So too, God truly is more real than the world, this is the essence of Indian scriptures.

– Divine Discourse, Vol I, February 24, 1964

கீதையில் பகவான், “மம மாயா” அல்லது “என் மாயை”, என்று பிரகடனம் செய்தார். இவ்வுலமே அவரது கைவேலைப்பாடு, அவருடைய தெய்வீக விளையாட்டு மற்றும் அவரது லீலை மற்றும் மகிமை என்று இதன் மூலம் விளங்குகிறது. இதனுடைய தோற்றுவாய் மற்றும் இயக்குனர் மற்றும் எஜமானனாக விளங்குபவருக்காக ஆசைப்படுபவற்கெல்லாம் இதுவொரு பயிற்சி மைதானமாகவும் உள்ளுயிர்ப்பாகவும் விளங்குகிறது. இவ்வுலகை அவருடைய நாடக மேடையாக நீங்கள் பார்க்கத் துவங்கினால், மேடைத் தந்திரங்களால் நீங்கள் வழிதவறவோ, திசை திரும்பவோ, ஏமாற்றப்படவோ மாட்டீர்கள். மாயையிலிருந்து, நீங்கள் இயற்றியவரின், எஜமானனின் மேல் ஆர்வம் கொள்ளவேண்டும். நீங்கள் நாடக சபாவில் இருக்கும் வரை, அந்த நாடகம் முற்று பெரும் வரை தான் உண்மையாகத் தோன்றும். அதே போல, இவ்வுலகமும் ஒரு கானல் நீர் தான்! கானல் நீர் மழையிலிருந்து உருவாவதில்லை. அது எந்த ஏரியையோ அல்லது கடலையோ சென்றடையாது. அது சூரியோதத்திற்கு முன்னரும், சூரியாஸ்தமனத்திற்குப் பின்னரும் இருப்பதில்லை. அது நடுவே தோன்றும் ஒரு காட்சியே. அதனை அவ்வாறே விட்டுவிடுவது நல்லதே! அதே போல, கடவுள் இவ்வுலகை விட மிகவும் உண்மையானவர். இதுவே பாரதத்தின் புனித நூல்களின் சாரமாகும்.

– தெய்வீக உரை, அத்தியாயம் 1, பிப்ரவரி 24, 1964

Sai Inspires (Tamil Translation): 16th October 2012

If only the agony and toil now being experienced by you to accumulate the symbols of wealth and power for keeping yourself and your family in comfort, are directed towards God, you can be infinitely happier. The veil of maya (illusion), however, hides from you the face of God which is shining from every being and thing around you. Maya creates the universe and attracts the mind with the vast paraphernalia of the objective world. It is a narthaki, an enchantress who entices the intelligence and traps the senses. This na-rtha-ki can be subdued by ki-rtha-na (note the re-ordering of the syllables). Kirthana is the concentrated contemplation of the glory of God.

– Divine Discourse, September 8, 1966

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சௌகரியமாக வைத்துக் கொள்வதற்கு நீங்கள் செல்வம் மற்றும் அதிகாரத்தைச் சேர்ப்பதற்காக நீங்கள் அனுபவிக்கும் வேதனையும் கடின உழைப்பும் கடவுளின் பால் இயக்கப்பட்டால் நீங்கள் எல்லையற்ற ஆனந்தத்தை அடைவீர்கள். ஆனால், மாயையின் திரை, உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு ஜீவனிலும் பொருளிலும் பிரகாசிக்கும் கடவுளின் முகத்தை உங்களிடமிருந்து மறைக்கின்றது. மாயை பிரபஞ்சத்தை உருவாக்கி, பௌதிக உலகின் கவர்ச்சிகளைக் கொண்டு மனதை கவர்கிறது. நர்த்தகீ என்கிற ஒரு மோஹினியே புத்தியை வசீகரித்து, புலன்களை சிக்க வைக்கின்றாள். இந்த ந-ர்த்த-கீ-யை ,கீ-ர்த்த-ந மூலம் அடக்கியாள முடியும் (எழுத்துக்களின் அமைப்பிலுள்ள மாற்றத்தை கவனிக்கவும்). கீர்த்தன என்பது ஒருமுகத்துடன் கடவுளின் மகிமையைப் பற்றி நினைவில்  நிறுத்துவது ஆகும்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 8, 1966

Sai Inspires (Tamil Translation): 4th April 2012

When Krishna said, “Remove the defect in vision, then the author of this Universe can be congested,” Arjuna sought the cause for this faulty vision. Krishna explained, “Between Me and this universe, there moves maya (delusion). It is indeed a hard task for one to see beyond maya, for maya too is Mine. It is of the same substance; it is My creation and under My control. It will turn in a trice, even the mightiest among men, head over heels! Do not take maya to mean some ugly thing that has descended from somewhere else; it is an attribute of the mind which makes you ignore the true and the eternal Paramatma (Supreme Self) and instead value the manifold multiplicity of Name and Form. It causes the error of believing the body to be the Self, instead of the embodied (the Deha instead of the Dehi). To overcome maya is surely the most difficult task. Only those who are wholeheartedly attached to Me can conquer My maya.”

– Geetha Vahini, Chapter 13

கிருஷ்ணர், “பார்வையின் குறைபாட்டை களையவேண்டும், பின்னரே இந்த ப்ரபஞ்சத்தின் படைப்பாளியை உணரமுடியும்”, என்று கூறியபோது, அர்ஜுனன் இந்தப் பழுதடைந்த பார்வையின் காரணத்தை அறிய விழைந்தான். கிருஷ்ணர் இவ்வாறாக விளக்கினார், “எனக்கும் இந்தப் ப்ரபஞ்சத்திற்கும் நடுவே, மாயை ஊடுருவுகிறது. மாயையைக் கடந்து பார்ப்பது உண்மையிலேயே மிகவும் கடினமான செயல்தான். ஏனெனில், மாயையும் என்னுடையது தான். அதுவும் அதே பொருளால் ஆனது தான். அது என் படைப்பாகும், மற்றும் அது என் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. மிகவும் உயர்ந்த மனிதர்களையும் கூட அது கணநேரத்தில் தலைகீழாக மாற்றிவிடும். வேறு எங்கிருந்தோ தோன்றிய இழிவான ஒரு பொருள் என்று நீங்கள் மாயையைப் புரிந்து கொள்ளக்கூடாது. இது, உண்மையான என்றும் நிலைத்த பரமாத்மாவை புறக்கணிக்க வைத்து நாமம் மற்றும் உருவத்தின் பல்வகைத்தன்மையை உயர்த்தி மதிப்பிட வைக்கும் மனதின் ஒரு அம்சமே ஆகும். உள்ளுறையும் ஆன்மாவை “தான்” என்று கருதாமல் இந்த உடலையே “தான்”-ஆகத் தவறாக நம்ப வைக்கிறது. மாயையை வெற்றிகொள்வது நிச்சயமாக மிகவும் கடினமான செயலாகும். இதயப்பூர்வமாக என்னுடன் இணைந்தவர்கள் மட்டும் தான் என் மாயையை வெற்றிகொள்ள முடியும்.”

– கீதா வாஹினி, அத்தியாயம் 13

18th March 2012

அந்திவேளையில் எல்லாப் பொருட்களும் மங்கலாகத் தெரியும் நேரத்தில் நீங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் ஒரு கயிறு பாதையில் உள்ளதாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது, இதனைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு துண்டு கயிறுதான் என்றாலும் அவரவர்கள் எண்ணப்படி அது என்ன என்பது புலப்படும். ஒருவர் அதனை பூமாலையாக எண்ணுவார். மற்றோருவரோ அது நீரின் ஓட்டத்தால் ஏற்பட்ட தடம் என நினைத்து அதன்மேல் நடப்பார். மூன்றாமவர் மரத்திலிருந்து சாலையின் மேல் விழுந்த ஒரு படர்க்கொடி என்று எண்ணுவார். மற்ற சிலரோ அது பாம்பு என எண்ணி அச்சப்படுவர். அது போல், எந்த மாறுதலும் இல்லாத, மாற்றப்படமுடியாத ஒரே தெய்வத்துவம் இந்தப் பிரபஞ்சத்தில் அந்திவேளை போன்ற மாயையினால் பல்வேறு பெயர்களும் உருவங்களும் கொள்கிறது. எவ்வாறு மங்கிய ஒளி மக்களைக் குழப்பி, அவர்களுள் பல்வேறு உணர்ச்சிகளையும், விளைவுகளையும் ஏற்படுத்துகிறது, மாயையும் மக்களை குழப்பிவிடுகிறது. கயிறு பல்வேறு விதமாகப் புலப்பட்டாலும், எப்பொழுதும் கயிராகத்தான் இருக்கிறது.

– கீதா வாஹினி, அத்தியாயம் 12