Tag Archives: Immoral

Sai Inspires (Tamil Translation): 8th November 2012

When students score low marks parents feel great grief. Similarly, when we fall low in morals and spiritual virtues, our motherland bemoans her fate ten times more sadly. We have to assuage the grief of the physical mother and promote the peace and prosperity of our motherland. The motherland is not a mere lump of earth. When we desire her progress, we have to promote the progress of the people who dwell therein. The skills needed for resuscitating and reforming are found in youth. The reforming process involves the removal, in daily living, of bad conduct and bad habits, and the practice of good conduct and good deeds. You must express your humility, fortitude, equanimity, and gratitude for kindness received, in various acts in your daily life, every day.

– Divine Discourse, November 22, 1981

மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றால், பெற்றோர்கள் மிகுந்த துயரம் கொள்கிறார்கள். அதே போல, அறத்திலிருந்தும், ஆன்மீகத் தன்மைகளிலிருந்தும் நாம் தவறும் பொழுது, நம் தேசத்தாய் தன் அவல நிலையை நினைத்து, பத்து மடங்கு வருத்தம் கொள்கிறாள். தாயின் துயரத்தைப் போக்கி, தாய்நாட்டின் அமைதியையும் செழிப்பையும் பேணுங்கள். தாய்நாடு என்பது வெறும் மண் கிடையாது. அவளது முன்னேற்றத்தை நாம் விரும்பினால், இங்கு வாழும் மக்களின் முன்னேற்றத்திற்கு நாம் பாடுபடவேண்டும். புத்துயிர் கொடுப்பதற்கும், சீர்திருத்தம் ஏற்படுத்துவதற்கும் தேவையான திறன்கள் அனைத்தும் இளைஞர்களில் உள்ளன. தினசரி வாழ்க்கையிலிருந்து தீய நடத்தை மற்றும் தீய பழக்கங்களை நீக்குவதும், நன்னடத்தை மற்றும் நற்செயல்களைப் பின்பற்றுவதும் சீர்த்திருத்தம் செய்வதில் அடங்கும். தினமும், உங்கள் தினசரி வாழ்க்கையில் நீங்கள் பணிவு, மனவுரம், உள்ளச்சமநிலை மற்றும் பரிவைப் பெற்றதற்கு நன்றியும் கொண்டிருக்க வேண்டும்.

– தெய்வீக உரை, நவம்பர் 22, 1981