Tag Archives: joy

Sai Inspires (Tamil Translation): 10th March 2013

Shivarathri is a day when you should establish friendship between the mind and God. Shivarathri makes one aware of the fact that the same Divinity is all-pervasive and is to be found everywhere. It is said that Shiva lives in Kailasa. But where is Kailasa? Kailasa is our own joy and bliss. It means that the Lord lives in the Kailasa of joy, bliss and delight. If you can develop that sense of joy and delight in our mind, then your heart itself is the Kailasa where Shiva lives. How can one get this joy? Joy comes and stays with you when you develop purity, steadiness and sacredness. There is no use in observing Shivarathri once a year. Every minute, every day, every night, you should think of Divinity and sanctify your time, for the Time Principle itself is Shiva.

– Divine Discourse, February 17, 1985

சிவராத்திரி என்பது மனதிற்கும் கடவுளுக்கும் இடையே நட்பை ஏற்படுத்துவதற்கான நாள் ஆகும். ஒரே தெய்வீகம் எங்கும் நிறைத்திருப்பதையும், அதனை எங்கும் காணலாம் என்பதையும் சிவராத்திரி உணர்த்துகிறது. சிவன் கயிலாயத்தில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தக் கயிலாயம் எங்குள்ளது? கயிலாயம் என்பது நம் சந்தோஷமும் ஆனந்தமும் ஆகும். இதன் பொருள் என்னவென்றால், சந்தோஷம், ஆனந்தம் மற்றும் உவகை எனும் கயிலாயத்தில் ஆண்டவன் உறைகிறார் என்பதாகும். உங்கள் மனதில் அவ்வாறான சந்தோஷத்தையும் உவகையையும் வளர்த்துக் கொண்டால், உங்கள் இதயமே சிவன் உறையும் கயிலாயமாக இருக்கும். எவ்வாறு இந்த சந்தோஷத்தை அடைவது? நீங்கள் தூய்மை, நிதானம் மற்றும் புனிதத்தை வளர்த்துக் கொண்டால், சந்தோஷம் தோன்றி, உங்களிடம் தங்கிவிடும். வருடத்திற்கு ஒரு முறை மட்டும் சிவராத்திரியைக் கொண்டாடுவது உபயோகமற்றதாகும். ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும் நீங்கள் தெய்வ சிந்தனையில் இருந்து உங்கள் காலத்தை புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த கால தத்துவமே சிவம் ஆகும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 17, 1985

Sai Inspires (Tamil Translation): 9th February 2013

You are as distant from the Lord, as you think you are; as near Him, as you feel you are. The distance from Me to you is the same as the distance from you to Me, is it not? You complain that I am far from you, though you are approaching nearer and nearer. How can that be? I am as near you, as you are near to Me! Nearness to the Lord is won by Devotion, which cannot be steady until you get rid of the feelings of ‘I’ and ‘Mine’. Look upon joy and grief as teachers of hard-work and balance. Grief is a friendly reminder, a good taskmaster, even a better teacher than joy. The Lord grants both protection and punishment – for, how can He be the Lord, if He does not insist on strict accounting and strict obedience?

– Divine Discourse, 20 Feb 1964

நீ இறைவனிடமிருந்து எவ்வளவு தொலைவில் இருப்பதாகக் கருதுகிறாயோ, அவ்வளவு தொலைவில் இருக்கிறாய்; எவ்வளவு அண்மையில் இருப்பதாகக் கருதுகிறாயோ, அவ்வளவு அண்மையில் இருக்கிறாய். உன்னிடமிருந்து நான் எந்த தூரத்தில் உள்ளேனோ, அதே அளவு தூரத்தில் தான் நீயும் என்னிடமிருந்து இருக்கிறாயல்லவா? நீ என்னருகில் வந்து கொண்டிருந்தும் நான் உன்னிடமிருந்து வெகு தொலைவிலுள்ளதாக நீ முறையிடுகிறாய். எவ்வாறு அப்படியிருக்க முடியும்? நீ எனக்கு எவ்வளவு அருகில் உள்ளாயோ அந்த அளவில் தான் நானும் உனக்கருகில் உள்ளேன்! “நான்” மற்றும் “எனது” எனும் எண்ணங்களை ஒழித்தால் மட்டுமே தடுமாறாது இருக்கும் பக்தியின் மூலம் தான் இறைவனுடனான அண்மை கிட்டும். கடும் உழைப்பு மற்றும் நிதானத்தை போதிக்கும் ஆசிரியர்களாக மகிழ்ச்சியையும் துயரத்தையும் கருதுங்கள். துயரம் ஒரு நேசமான நினைவூட்டுபவராகவும், ஒரு நல்ல பணி ஏவுநராகவும், ஏன் மகிழ்ச்சியை விடவும் உயரிய ஆசிரியராகவும் உள்ளது. கடவுள் காப்பாற்றவும் செய்கிறார், தண்டிக்கவும் செய்கிறார். ஏனெனில் கண்டிப்பான கணக்கையும், கண்டிப்பான கீழ்ப்படிதலையும் வலியுருத்தாதிருந்தால் அவர் எவ்வாறு கடவுளாக இருக்க முடியும்?

– தெய்வீக உரை, 20 பிப்ரவரி 1964

Sai Inspires (Tamil Translation): 7th January 2013

Today you are like a mouse caught inside a Mridanga (Indian percussion instrument). When the player beats on the right, the mouse runs to the left – if the left is beaten, it runs in terror to the right. So too, you are running between God and World, reluctant to stick to God and at the same time, retreating from the denials and disappointments of worldly activity temporarily. Namasmarana (Remembrance of the Lord’s Name) will make you stick to God persistently. A lost child, regains joy only when it finds its mother – so too you will attain joy only when you find God within you and merge in Him. The ocean drop that rose as vapour, joins the congregation called cloud, falls on earth, flows along the ravines, and at last reaches the ocean. Reach likewise the ocean you have lost.

– Divine Discourse, October 17, 1966

இன்று நீங்கள் ஒரு மிருதங்கத்துக்குள் மாட்டிக் கொண்ட ஒரு சுண்டெலியைப் போல் உள்ளீர்கள். அதனை வாசிப்பவர் வலது புறம் தட்டும் பொழுது, சுண்டெலி இடது புறம் ஓடுகிறது – இடது புறத்தில் அடித்தால், அது பயத்துடன் வலது புறம் ஓடுகிறது. அதே போல, நீங்களும் கடவுளுக்கும் உலகிற்கும் இடையே ஓடிக்கொண்டு, கடவுளிடம் இருக்காமல், அதே சமயம் உலகச் செயல்களின் நிராகரிப்புகளிடமிருந்தும், ஏமாற்றங்களிடமிருந்தும் தற்காலிகமாக விலகியிருக்கின்றீர்கள். நாமஸ்மரணை உங்களைக் கடவுளிடம் இடையறாது இருக்கச் செய்யும். தொலைந்து போன ஒரு குழந்தை தன் தாயைப் பார்த்தால் மட்டுமே மீண்டும் மகிழ்ச்சியடைகிறது. அதே போல, நீங்களும் கடவுளை உங்களுள் கண்டு அவருடன் ஐக்கியமடைந்தால் மட்டுமே நீங்களும் மகிழ்ச்சியடைவீர்கள். ஆவியாக மாறும் சமுத்திரத்தின் ஒரு துளி எவ்வாறு மேகம் எனும் சங்கமத்தில் கலந்து, பூமியின் மேல் விழுந்து, மலைச்சந்துகள் வழியாகப் பாய்ந்து கடைசியாக சமுத்திரத்தையடைகிறது. நீங்கள் தொலைத்த சமுத்திரத்தை நீங்களும் இவ்வாறாகச் சென்றடையுங்கள்.

– தெய்வீக உரை, அக்டோபர் 17, 1966

Sai Inspires (Tamil Translation): 5th December 2012

The glory of the Divine – the richness, fullness, extent and the depth of Divine experience has to be experienced. It cannot be expressed through any amount of words or plays. You must feel that it is your highest destiny to acquire that experience. You are not a despicable creature, born in slime or sin to eke out a drab existence and be extinguished. You are a mixture of the mortal and immortal (Deha and Deva). Liberation is the means to be free from grief and live in joy. And it is easy to accomplish this. All you need to do is to place all your burdens on God. That will make you carefree, and griefless. Take everything as a Divine Play of the Lord you adore and love. No matter whatever happens clap your hands in bliss and joy, for all is His Divine Play and you can be as happy as He is, for His plans are working, and they are for your highest good!

– Divine Discourse, February 11, 1964

தெய்வத்தின் மகிமை – தெய்வீக அனுபவத்தின் வளம், நிறைவு, பரந்த தன்மை மற்றும் ஆழம் ஆகியவை அனுபவிக்கப்பட வேண்டும். எந்த அளவு சொற்களாலும் செயல்களாலும் அதனை வெளிப்படுத்த முடியாது. அந்த அனுபவத்தைப் பெறுவது உங்கள் பெரும் பாக்கியம் என நீங்கள் கருத வேண்டும். சேற்றிலும் பாவத்திலும் பிறந்து, கேவலமான வாழ்க்கை வாழ்ந்து, முடிவில் அழிந்து போகக்கூடிய ஒரு இழிவான ஜன்மம் இல்லை நீங்கள். நீங்கள் அழியக்கூடியது மற்றும் அழியாதது (தேஹ மற்றும் தேவ) ஆகிய இரண்டின் கலவை. மோக்ஷம் என்பது துயரத்திலிருந்து விடுபட்டு, மகிழ்ச்சியில் வாழ்வதாகும். இதனை அடைவது மிகவும் சுலபமாகும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், உங்கள் சுமைகளைக் கடவுளிடம் வைப்பதே. அது உங்களைக் கவலையில்லாமலும் துயரமில்லாமலும் மாற்றிவிடும். நீங்கள் போற்றி, அன்பு செலுத்தும் தெய்வத்தின் தெய்வீக விளையாட்டு தான் என்று அனைத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள். என்ன நடந்தாலும், ஆனந்தத்திலும் மகிழ்ச்சியிலும் உங்கள் கைகளைத் தட்டுங்கள். ஏனெனில், அனைத்தும் அவர் தெய்வீக செயல் தான். அவர் எவ்வாறு சந்தோஷமாக இருக்கிறாரோ அவ்வாறே நீங்களும் சந்தோஷமாக இருக்க முடியும். அவர் திட்டங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. அவை உங்கள் உயர் நன்மைக்கே!

– தெய்வீக உரை, பிப்ரவரி 11, 1964

Sai Inspires (Tamil Translation): 14th November 2012

When happy news is heard, the heart is elated. But when we listen to something sad, the heart shrinks with sorrow. Similarly, the heart gets enraged when the ears hear harsh words about you, and you are filled with joy when you listen to words of praise. What is responsible for these varied responses, though all the words are heard by the same ears? The ears are inert (jada) and are incapable of any reactions by themselves. The responses of joy or sorrow are related to the contents of the messages conveyed by the ears. Given this, ask yourself, how can the operations of these senses be deemed as Sathya (Truth or Reality)? When the senses are unreliable, the reactions and experiences produced by them are equally unreliable. Enquiring along these lines, one can overcome sorrow.

– Divine Discourse, 5 March 1995

சந்தோஷமான விஷயத்தைக் கேட்டவுடன் இதயம் பெருமிதம் கொள்கிறது. ஆனால், துக்கமான விஷயத்தைக் கேட்டால், இதயம் துயரத்தினால் வாடுகிறது. அதே போல, உங்களைப் பற்றியக் கடுமையான சொற்கள் உங்கள் செவிகளில் விழுந்தால் இதயம் சினம் கொள்கிறது. உங்களைப் பற்றிய பாராட்டுக்களைக் நீங்கள் மகிழ்ச்சியில் மூழ்குகிறீர்கள். ஒரே செவிகளால் கேட்கப்படும் சொற்களுக்கு இப்படிப்பட்ட வித விதமான எதிர்செயல்கள் ஏற்படுவதன் காரணம் என்ன? செவிகள் ஜடமானவை, அவை தாமாகவே எதிர்செயல் புரியாது. சந்தோஷமும் துயரமும் செவிகள் மூலம் பெறப்படும் செய்திகளுக்குச் சம்பந்தமானவை. இவ்வாறிருக்கையில், புலன்களின் செயல்கள் எவ்வாறு உண்மையானவையாக இருக்க முடியும் என உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்! புலன்களே நம்பகமில்லாமல் இருக்கும் பொழுது, அவை ஏற்படுத்தும் எதிர்செயல்கள் மற்றும் அனுபவங்களும் கூட அதே போன்று நம்பகமில்லாதவையாகத் தான் இருக்க முடியும். இவ்வாறாக ஒருவர் விசாரம் செய்தால் துயரத்தை வெற்றி கொள்ளலாம்.

– தெய்வீக உரை, 5 மார்ச் 1995

Sai Inspires (Tamil Translation): 27th October 2012

Bhagavan Sri Sathya Sai Baba

The root of education fulfills itself in the fruit of virtue. Earning a fat salary is not the chief thing one should expect from education. The goal should be the cultivation of virtues. Education is the root of the tree of life. The affection which the individual develops towards kith and kin, the objects of the world, the ideals and the goals, the fancies and fashions – these form the branches and twigs. The blossoms which the tree produces are the intelligence and its manifestations. These flower blossoms yield the fruit of joy (anandam). The sweetness this fruit confers is character. The essence of character is virtue. It is in virtue that the tree of life justifies itself.

– Sathya Sai Speaks, Volume 6, Chapter 25

கல்வியின் வேர் நற்குணம் எனும் பழமாக நிறைவடைகிறது. கல்வியினால் அதிகமான சம்பளம் பெறுவதையே முக்கியப் பொருளாக கொள்ளக்கூடாது. நற்குணங்களைப் வளர்ப்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும். கல்வி என்பது வாழ்க்கை எனும் மரத்தின் வேராக உள்ளது. ஒரு தனி மனிதன் உற்றார் உறவினருடனும், உலகப் பொருட்கள் மீதும், இலட்சியங்கள் மற்றும் குறிக்கோள்கள் மீதும், ஆடம்பரங்கள் மற்றும் நாகரீகங்கள் மீதும் ஒருவர் கொள்ளும் பாசமானது அம்மரத்தின் கிளைகள் மற்றும் குச்சிகள் ஆகும். புத்தி மற்றும் அதன் படைப்புகளே அந்த மரம் உருவாக்கும் மலர்கள் ஆகும். இந்தப் பூக்கள் ஆனந்தம் எனும் பழத்தை நல்குகின்றன. இந்தப் பழம் அளிக்கும் இனிமையே நன்னடத்தையாகும். நன்னடத்தையின் சாரம் நற்குணமே. அந்த நற்குணம் மட்டுமே வாழ்க்கை எனும் மரத்தை பூரணப்படுத்துகிறது.

– சாயி அருளமுதம், பாகம் 6, அத்தியாயம் 25

Sai Inspires (Tamil Translation): 20th June 2012

The second is the very basic unit of Time which we measure, in what we designate as a year. Sixty seconds, make a minute, sixty minutes make an hour, twenty four hours constitute a day and thirty days make a month; twelve months pass and we say a year has passed! When twelve months are over, we come back again to the first in the list of months, and call it the New Year Day. We go on a spree to celebrate the occasion. Really speaking, nothing new has happened on the “New Year Day” – it is not the year, but every second that follows the present that is new. Hence, do not wait for the celebration of something new in Time, until minutes, hours, days, months and years add up! Celebrate the immediately succeeding second, and every one after it, through honest effort and attain everlasting joy. Do not waver in your determination to live in joy and peace.

– Divine Discourse, March 23, 1966

நாம் ஒரு வருடம் என்பதில், வினாடி என்பது நேரத்தை அளக்கும் அளவீடுகளின் அடிப்படையாக உள்ளது. அறுபது வினாடிகள் ஒரு நிமிடம் ஆகின்றன, அறுபது நிமிடங்கள் ஒரு மணி நேரம் ஆகின்றன, இருபத்திநான்கு மணி நேரங்கள் ஒரு நாளை அமைக்கின்றன, முப்பது நாட்கள் ஒரு மாதம் ஆகின்றன, பன்னிரண்டு மாதங்கள் கடந்தால் நாம் ஒரு வருடம் கழிந்துவிட்டது என்கிறோம்! பன்னிரண்டு மாதங்கள் முடிந்ததும், மாதப் பட்டியலில் முதல் மாதத்திற்கு வந்துவிடுகிறோம். அதனைப் புத்தாண்டு தினம் என்கிறோம் நாம். அந்த நிகழ்வை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறோம். உண்மையாகச் சொல்லப்போனால், “புத்தாண்டு தினத்தில்” புதிதாக எதுவும் நிகழ்வதில்லை. வருடம் இல்லை, நிகழ்காலத்திற்குப் பிறகு தொடரும் ஒவ்வொரு வினாடியுமே புதியது தான். ஆகையால், நேரத்தில் நிமிடங்களும், மணிகளும், நாட்களும், மாதங்களும், வருடங்களும் கூடிய பின்னர் கொண்டாடுவதற்காக பொறுத்துக் கொள்ளாதீர்கள்! நேர்மையான முயற்சி கொண்டு உடன் தொடரும் வினாடியைக் கொண்டாடுங்கள், அதன் பின் தொடரும் ஒவ்வொரு வினாடியையும் கொண்டாடி, நிரந்தர மகிழ்ச்சியை அடையுங்கள். மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் வாழ வேண்டும் என்கிற உறுதியில் சலனப்படாதீர்கள்.

– தெய்வீக உரை, மார்ச் 23, 1966