Tag Archives: karma

Sai Inspires (Tamil Translation): 8th March 2018

Bhagawan Sri Sathya Sai Baba

People who wish to check the quality of gold, draw a line with it on a piece of stone and assess its quality by examining that streak. The test that will reveal the quality of your faith is whether you are practising sincerely the injunctions laid down by God. Your beliefs and actions must be expressions of faith. They must have holiness as their core. They must be so full of love and compassion that they attract to you the grace of God. Such karma (actions) is what is advocated through karma kanda of Vedic scriptures. It is the taproot of human progress, the very breath of happy human existence, the food that alone can allay the hunger of people and the life-sustaining water that can cure their thirst. Therefore the first and continuing duty is to engage oneself in activities that are taught or approved in the Vedas. Three types of activity reach God and earn His grace:

  1. Activity not prompted by personal desire
  2. Activity emanating from unselfish love and
  3. Prayer arising from pure hearts.

– Sathya Sai Vahini, Chapter 19

தங்கத்தின் தரத்தை சோதிக்க விரும்பும் மக்கள், அதன் மீது ஒரு கல்லைக் கொண்டு ஒரு கோட்டினை வரைந்து, அதன் தரத்தை அந்தக் கோட்டைப் பார்த்து மதிப்பிடுவார்கள். உங்கள் பக்தியின் தரத்தை வெளிப்படுத்தும் சோதனை, நீங்கள் கடவுள் அளித்துள்ள கட்டளைகளை நேர்மையாகக் கடைப்பிடிக்கிறீர்களா என்பதே ஆகும்! உங்கள் நம்பிக்கைகளும் செயல்களும் பக்தியின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். அவை புனிதத்தைத் தம் உட்கருவாகக் கொண்டிருக்க வேண்டும். கடவுளின் அருளை உங்கள்பால் ஈர்க்கும் அளவிற்கு அவை அன்புடனும் கருணையுடனும் ததும்ப வேண்டும். வேத நூல்கள் இவ்வாறான கர்மாக்களையே (செயல்களையே) கர்ம காண்டத்தின் மூலம் பரிந்துரைக்கின்றன. அதுவே மனித முன்னேற்றத்தின் ஆணிவேராகவும், மானிடம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான உயிர்மூச்சாகவும், மக்களின் பசியைப் போக்கிடும் உணவாகவும், அவர்களின் தாகத்தைத் தணித்திடும் ஜீவாதாரமான நீராகவும் உள்ளது. எனவே, ஒருவருடைய முதன்மையான தொடர்கடமை வேதங்கள் போதிக்கும் அல்லது அங்கீகரிக்கும் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதே ஆகும். மூன்று வகையான செயல்கள் கடவுளை அடைந்து உங்களுக்கு அவருடைய அருளைக் கொடுத்திடும்:

  1. தனிப்பட்ட சொந்த அன்பினால் உந்தப்படாத செயல்
  2. தன்னலமில்லாத அன்பினால் தோன்றும் செயல் மற்றும்
  3. புனிதமான இதயங்களில் தோன்றும் பிரார்த்தனைகள்.

– சத்ய சாயி வாஹினி, அத்தியாயம் 19

Sai Inspires (Tamil Translation): 5th January 2013

A little unpaid debt will soon assume huge proportions through high rates of interest; a karma (action) however trite, done with intention to benefit by the fruit thereof will involve future births in order to eat the fruit. The scriptures recommend one to wipe off all outstanding balances of Karma through three clear steps: First, the execution of actions righteously, with the right mental attitude (Karma-Jijnasa). Then comes the observance of moral codes for the upkeep of society and the discharge of one’s duties and obligations (Dharma-Jijnasa). Finally, chanting the name of the Lord (Namasmarana) and considering it as one’s primary spiritual practice (Brahma-Jijnasa). Take any name of the Lord that pleases you – the cleansing value, curative value and the sweetness is exactly the same. Namasmarana will make you stick to the thought of God.

– Divine Discourse, October 17, 1966

சிறிய அளவிலான கடன் என்பது விரைவாக அதிகமான வட்டி விகிதத்தினால் பெரிதாக மாறிவிடும். பலனில் மேல் ஆசைப்பட்டு செய்யப்படும் கர்மா (செயல்) எந்த அளவுச் சிறியதாக இருந்தாலும், அந்தப் பலனை அனுபவிப்பதற்கு பல பிறப்புகள் எடுக்க நேரிடும். கர்மவினைகளனைத்தையும் அழித்துவிட ஆன்மீகப் புத்தகங்கள் மூன்று தெளிவான அடிகளைப் பரிந்துரைக்கின்றன: முதலில், செயல்களை தார்மீகமாக, சரியான மனப்பாங்குடன் செய்ய வேண்டும் (கர்ம ஜிக்ஞாஸ). அதற்குப் பிறகு சமுதாயத்தைச் சீராக நடத்துவதற்கும், ஒருவரது கடமைகளைச் சரியாகச் செய்வதற்கும் நன்னெறி முறைகளைப் பின்பற்றுவது வருகிறது (தர்ம ஜிக்ஞாஸ). கடைசியாக, நமஸ்மாரணையும் அதனை ஒருவருடைய பிரதான ஆன்மீகப் பயிற்சியாகக் கொள்வதும் வருகிறது (ப்ரஹ்ம ஜிக்ஞாஸ). உங்களுக்குப் ப்ரியமான கடவுளின் எந்தத் திருநாமத்தையாவது எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்துத் திருநாமங்களின் தூய்மைப்படுத்தும் தன்மையும், நிவாரணம் தரும் தன்மையும், இனிமையும் ஒன்றாகத் தான் இருக்கும். நாமஸ்மரணை உங்களைக் கடவுளின் நினைவிலேயே இருக்க வைக்கும்.

– தெய்வீக உரை, அக்டோபர் 17, 1966

Sai Inspires (Tamil Translation): 11th April 2012

Everybody aspires for happiness. Where is happiness? Without working hard, you cannot get happiness. During ancient times, people would offer their salutations to action (karma) before undertaking it; they chanted thasmai namah karmane (salutations to action). In India, some people follow this sacred tradition even today. A dancer salutes the anklets before tying them to the feet. Even an uneducated driver offers his obeisance to the steering wheel before driving the vehicle and some cricketers too, pay their respects to the ball before starting to bowl. First and foremost, offer respects and express gratitude to karma before undertaking it. Make it a practice every day. It will then give good results. Understand your duty and perform it to the best of your abilities. Then, you will earn the deservedness to experience happiness.

– Divine Discourse, Apr 15, 2003

அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவே விழைகிறார்கள். மகிழ்ச்சி எங்குள்ளது? கஷ்டப்பட்டு உழைக்காமல் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்காது. பண்டைய காலங்களில் மக்கள் ஒரு செயலை (கர்மாவை) செய்வதற்கு முன்னால் கர்மாவிற்கு தமது வணக்கங்களை சமர்ப்பித்தார்கள். அவர்கள் “தஸ்மை நம: கர்மணே” என்று ஜபித்தனர். இந்திய நாட்டில், இன்றும் சிலர் இந்த புனித பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். ஒரு நடனக் கலைஞர், சலங்கையைக் பூணுவதற்கு முன்னால் அதனை வணங்குகிறார். படிக்காத வாகன ஓட்டியும் வாகனத்தை இயக்குவதற்கு முன்னால் சக்கரத் திருப்பானிற்கு (ஸ்டியரிங் வீல்) தமது வணக்கத்தைத் தெரிவிக்கிறார். சில கிரிக்கெட் வீரர்களும் கூட பந்தை வீசத் தொடங்கும் முன்னர் அதற்கு தமது வணக்கத்தை செலுத்துகின்றனர். ஒரு செயலைக் (கர்மாவை) செய்வதற்கு முன்னால் முதலில் அதற்கு வணக்கங்களை சமர்பித்து, உங்கள் நன்றியை வெளிப்படுத்துங்கள். இதனை உங்கள் தினசரி வழக்கமாகக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு நல்லப் பலனை அளிக்கும். உங்கள் கடமையைப் புரிந்து கொண்டு உங்களுடைய முழு ஆற்றலையும் கொண்டு செயல்படுத்துங்கள். அவ்வாறு செய்தால், நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கக் கூடியத் தகுதியைப் பெறுவீர்கள்.

– தெய்வீக உரை, ஏப்ரல் 15, 2003

Sai Inspires (Tamil Translation): 7th April 2012

Your duties have to be done, there is no turning away. Each have their allotted tasks, according to the status, taste, tendency and earned merit. Do it with fear of God and sin, deep in your heart. Welcome pain and grief so that you take both success and failure as hammer strokes that shape you into a sturdy aspirant. Inner content is more important than outer prosperity. Dharma is the moral code, the experience of sages, the controlling discipline which checks the mind and senses. The codes of Dharma act as brakes that control and direct human life. They help you progress, each in its own way. March straight on the path of action (Karma) and virtue (Dharma) towards God. This is your destiny.

– Divine Discourse, March 24, 1965

உங்கள் கடமைகளைச் செய்தாக வேண்டும், பின்வாங்க முடியாது. அவரவர்களுக்கு, தத்தமது தகுதி, ருசி, நாட்டம், சேர்த்துவைத்துள்ள புண்ணியங்கள் ஆகியவற்றின்படி ஒதுக்கப்பட்ட வேலைகள் உள்ளன. உங்கள் இதயத்தின் ஆழத்தில் கடவுளின் மேல் பயபக்தி கொண்டு, பாவத்தைக் கண்டு அஞ்சி அவற்றைச் செய்யுங்கள். வலியையும் துயரத்தையும் வரவேற்க வேண்டும். ஏனெனில் நீங்கள் வெற்றியையும் தோல்வியையும் உங்களை ஒரு நிதானமான சாதகனாக உருவாக்கும் சுத்தியல் அடியாகக் கருதுங்கள். உள்ளத் திருப்தி வெளிச் செழிப்பைவிட முக்கியமானது ஆகும். தர்மமே ஒழுக்க நெறி ஆகும். அது முனிவர்களின் அனுபவம் ஆகும். மனத்தினையும் புலன்களையும் கட்டுப்படுத்தும் நெறிமுறை ஆகும். தர்மத்தின் கோட்பாடுகள் மனித வாழ்க்கையை கட்டுப்படுத்தி இயக்கும் பிரேக்குகள் போன்றவை. அவை ஒவ்வொன்றும் அவற்றின் வழியிலேயே நீங்கள் முன்னேற உதவுகின்றன. கர்மா மற்றும் நற்குணங்களின் பாதையில் நேராகக் கடவுளை நோக்கி நடை போடுங்கள். அதுவே உங்கள் விதியாகும்.

– தெய்வீக உரை, மார்ச் 24, 1965

24th March 2012

The purpose of human life is not to be consumers of food, to be a burden upon the earth, and be an animal that is a slave to the senses. There is no profit in being a horde of idlers and loungers, who shy from hard work, and accumulate fat, growing into monstrous shapes. Nor should one ignore the creator, allowing both intelligence and discrimination to go to waste, without an iota of gratitude to the giver of all the gifts which one consumes and enjoys! The Lord has declared that He is the Pourusha (vitality, adventure and aspiration) in human beings. However strong may be the force of the drag of one’s previous births, it must yield to the strength of adventure and achievement emanating from this Pourusha. Unaware of this potentiality, you are misled into cursing your fate and accepting the ‘inescapable’ effects of what you dread as’Prarabdha’ or effects of karma (past actions). Exercise Pourushaand let it be your life breath. Living is struggling, striving, achieving.

– Geetha Vahini, Chap 12

மனித வாழ்க்கையின் குறிக்கோள், உணவு உண்பவர்களாகவோ, பூமியின் மேல் ஒரு சுமையாகவோ, புலன்களுக்கு அடிமையாக உள்ள ஒரு மிருகமாகவோ இருப்பதற்கில்லை. கடுமையான வேலைகளை விட்டு விலகுபர்களும், கொழுப்புச்சத்தை சேர்த்து வைத்துக் கொண்டு பூதாகாரமான உருவங்களாக வளர்பவர்களாகிய சோம்பேறிகள் மற்றும் காலத்தை வீணாக்குபவர்களின் கூட்டத்தில் இருப்பதில் எந்த இலாபமும் இல்லை. புத்திசாலித்தனையும், பகுத்தறிவையும் வீணடித்து, புசித்து மகிழும் அனைத்து வளங்களையும் அளித்த கொடையாளரின்பால் ஒரு இம்மியளவு கூட நன்றி இல்லாமல், படைத்தவனை ஒருவன் பொருட்படுத்தாமல் இருகக்க் கூடாது. கடவுள், தான் மனிதர்களிடம் “பௌருஷமாக” (உற்சாகம், துணிச்சல் மற்றும் பேரார்வமாக) இருப்பதாகப் பிரகடனப்படுத்தியுள்ளார். முந்தையப் பிறவிகளின் விசை எவ்வளவு பலமானதாக இருந்தாலும், இந்த பௌருஷத்திடமிருந்து உருவாகும் துணிச்சல் மற்றும் சாதனையின் பலத்திற்குப் பணிந்துதான் ஆக வேண்டும். இந்த உள்ளாற்றலைப் அறியாமல், தப்பிக்கமுடியாத பிராரப்தம் அல்லது நமது முந்தைய செயல்களின் கர்மவினையின் விளைவு என ஏற்றுக்கொண்டு உங்கள் விதியைப் பழித்துக் கொண்டு தவறாக எண்ணுகிறீர்கள். இந்த பௌருஷத்தை பயன்படுத்தி, உங்கள் உயிர் மூச்சாக இருக்கட்டும். வாழ்க்கை என்றால் போராடுதல், முயலுதல் மற்றும் சாதித்தல் ஆகும்.

– கீதா வாஹினி, அத்தியாயம் 12

10th March 2012

உங்கள் செயல் மற்றும் அதன் பலனை இறைவனுக்கு அர்பணித்து, நீங்கள்தான் செயலாளி என்றும் நீங்கள்தான் பயனாளி என்றும் கருதுவதை விட்டுவிடுங்கள். அவ்வாறு இருந்தால் உங்களை எந்தப் பாவமும் தாக்காது ஏனெனில் நீங்கள் செயலாளி இல்லை அதனால் அந்தச் செயல் நிச்சயம் புனிதமாகத் தான் இருக்க வேண்டும். நாக்கின்மேல் உள்ள எண்ணெய் போல, தாமரை இலைத் தண்ணீர் போல அந்தச் செயல்கள் உங்களைச் சார்ந்து இருக்கும், ஆனால் உங்களை பாதிக்காது இருக்கிறது. வெளி உலகத்திலிருந்து பெறப்படும் மகிழ்ச்சி துக்கத்தின் வாசல்களைத் திறக்கும். அது நிலையானது அல்ல. ஆனால் நீங்கள் சாஸ்வதமானவர் (நிலையானவர்), ஆனந்தத்தின் தோற்றுவாய், ஆன்ம ஸ்வரூபம். அதுவே உங்கள் உண்மைத் தத்துவம். இப்பொழுது நீங்கள் உண்மை என்று தவறாக எண்ணுகின்ற கர்மா என்று சொல்லக்கூடிய இந்த செயல்களுடனும் அதன் விளைவுகளுடனும் நீங்கள் சம்பந்தப்படாதவர். ஆகையால், நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ அல்லது பார்க்கிறீர்களோ அதனால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும். என்றும் இதனை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் செயலாளி அல்ல. நீங்கள் இவற்றைக் காணுகின்ற ஒரு சாட்சியே. ஆகையால் நீங்கள் துணிவுடன் அனைத்து செயல்களையும் மேற்கொண்டு, கடவுளுக்கு அர்ப்பணித்து திட்டவட்டமாக செயல்களின் பலனை விட்டு விடுங்கள்.

– கீதா வாஹினி, அத்தியாயம் 11

7th March 2012

இந்த உலகம் “நான்” என்கிற ஒரு பலமான தூணின் மேல் கட்டப்பட்ட ஒரு கட்டமைப்பாகும். உங்களின் ஆழ்ந்த உறக்கத்தின் போது இந்த “நான்” செயலற்று இருப்பதனால் உங்களைப் பொருத்தவரை உலகமே இல்லை. அது போலவே, நீங்கள் பிறப்பதற்கு முன்பும், இறப்பதற்குப் பின்பும், எந்த உலகமும் உங்களுக்கு ஞாபகம் இருப்பதில்லை. இந்த ஞானத்தைப் பெற்று அதனில் இருப்பதற்கு, உங்களை ஆயத்தம் செய்பவையான கர்மா (செயல்) மற்றும் ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் இதயத்தை அஹங்காரத்தின் தாக்குதல்களிலிருந்து தூய்மையாக்க கவனத்துடன் செய்யும் கர்மா உதவும். உங்கள் கவனத்தை முழுதளாவிய பூரணமான அந்தப் பரம்பொருளின் மேல் வைக்க ஆழ்ந்த சிந்தனை உதவும். அதன்பின் ஞானம் வெளிப்பட்டு என்றென்றும் உங்களுள் இருக்கும். நீங்கள் அந்த ஞானத்தை வென்றபின், வேறெதுவும் அறிவதற்கு இல்லாததால் பேரறிவாளிக்கு சமமாகிறீர்கள்.

– தெய்வீக உரை, மார்ச் 3, 1965

17th February 2012

ஆத்மா இயற்கையாகவே பந்தம் இல்லாதது. தனது தேவைகள் பற்றியோ தன்வசம் உள்ளவற்றின் இயற்கை பற்றியோ அறியாது இருக்கிறது. அதற்கு நான் மற்றும் எனது என்பவை இல்லை. ஏனென்றால் இவை அஞ்ஞானத்தின் (அதாவது மாயையின்) குறியீடுகள். அஞ்ஞானத்தால் பீடிக்கப்பட்டவர்களே நான் மற்றும் எனது என்பவற்றால் துன்புறுகிறார்கள். சாதாரண கண்களால் பார்க்கும்போது செய்பவன் நானே! என விளங்கலாம். ஆனால் நான் செய்பவன் இல்லை என்பதுதான் உண்மை. இதுமட்டுமல்ல, கர்மவினைகளின் செயல், அவை முடிந்தவுடனே நிற்காது. கர்மா பலன்கள் அளிக்கும்; அந்த பலன்கள் மேலும் அவற்றின்மேல் ஆசைகளைத் தூண்டும்; இது கர்மா செய்ய மேலும் உத்வேகத்தை விளைவிக்கும். இந்த உத்வேகங்கள் மேலும் பிறப்புகளை ஏற்படுத்தும். கர்மா இவ்வாறாக, பிறப்பு மற்றும் இறப்பினால் கூடிய சுழலை உருவாகுகிறது. அது ஒரு கொடூரமான சுழல். உங்களை நன்றாக சுழல வைத்து, கடைசியில் உங்களை கீழே ஆழமாக எடுத்துச் செல்லும். அதனால், இந்த உலகின் மீதும், அதிலுள்ள பொருட்கள் மீதும் நம்பிக்கை வைக்காதீர்கள். பற்றின்மையை விளைவித்து அதனை கடைப்பிடியுங்கள்.

– கீதா வாஹினி (அத்தியாயம் 9)

15th February 2012

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்: அர்ஜுனா! மனிதர்கள் அவர்களுடைய “தான்” எனும் தன்மையாகிய என்னை வணங்கி நாடுவதை விட்டுவிடுகின்றனர்! என்னை அடைவதற்கு அவர்கள் தவிப்பதில்லை; ஆனால் பொய்யான, நிலையில்லாத சிறிய குறிக்கோள்களையே நாடுகின்றனர். உடனடியாக பலன்கள் கிடைக்கவேண்டும் என்ற ஆசையே இப்படிப்பட்ட விந்தையான போக்குக் காரணம். இங்கே, இப்போதே கிடைக்கக்கூடியவற்றையே, புலன்களால் கிரஹிக்கக் கூடிய உருவத்துடன் கூடியவற்றையே மனிதர்கள் நாடுகின்றனர். அவர்கள் அற்பமான இன்பங்களால் ஈர்க்கப்படுகின்றனர். மேலும் மனிதர்களுக்கு பொதுவாக தேவையான அளவிற்கு பொறுமை இருப்பதில்லை. அவர்கள் கண்ணினால் பார்க்கக்கூடிய உடலிற்கு (ஸ்தூல சரீரத்திற்கு) பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஞானத்தை அடைவதே உண்மையான உள்முக வெற்றி. அதை நீண்ட கடினமான போராட்டத்தின் மூலமே பெற முடியும். ஆன்மீக நாட்டமுள்ள சிலர்தான் தெய்வீகத்தை நாடுகிறார்கள். அப்படிப்பட்ட ஞானிகள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு செயலையும் அவரது (தெய்வத்தின்) கட்டளையை நிறைவேற்றுவதாக எண்ணி அவரது அருளைப் பெருவதற்கான சாதனம் எனக்கொள்ள வேண்டும்.

– கீதா வாஹினி (அத்தியாயம் 9)