Tag Archives: meditation

Sai Inspires (Tamil Translation): 5th March 2013

You need not even read the Gita or the Upanishads. You will hear a Gita specially designed for you if you call upon the Lord in your own heart. He is there, installed as your own Charioteer. Ask Him and He will answer. Have the Form of the Lord before you when you sit quietly in a place for meditation and have His Name – that is, any Name when you do japam (repetition of the divine Name). If you do japam, without a Form before you, who is to give the answer? You cannot be talking all the time to yourself. The Form of the Lord you are calling will hear and respond to you. All agitations must cease one day, is it not? Meditation of the Form of the Lord and repetition of His Name are the only means for your mental agitations to cease.

– Divine Discourse, February 23, 1958

நீங்கள் கீதையையும் உபநிஷதங்களையும் கூட படிக்க வேண்டாம். உங்கள் இதயத்தில் வீற்றிருக்கும் தெய்வத்தை நீங்கள் அழைத்தீர்களானால் உங்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட ஒரு கீதையை நீங்கள் கேட்கலாம். உங்களினுள், உங்கள் சாரதியாகவே அவர் வீற்றிருக்கிறார். அவரிடம் கேளுங்கள், அவர் பதிலளிப்பார். தியானம் செய்வதற்காக நீங்கள் அமைதியாக ஒரு இடத்தில் உட்காரும் பொழுது அவருடைய உருவத்தை உங்கள் முன் நிறுத்துங்கள், நீங்கள் ஜபம் செய்திடும் பொழுது எந்தவொரு திருநாமத்தை ஜபித்திடுகிறீர்களோ அந்தத் திருநாமத்தைக் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் முன்னால் ஒரு உருவத்தை வைத்துக் கொள்ளாமல் நீங்கள் ஜபம் செய்தால், யார் பதிலளிப்பார்கள்? உங்களிடமே நீங்கள் எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்க முடியாது. நீங்கள் அழைத்திடும் தெய்வத்தின் உருவம் உங்களுக்குச் செவிமடுத்து உங்களுக்குப் பதிலளிக்கும். அனைத்து கலக்கங்களும் ஒரு நாள் நின்று போக வேண்டுமல்லவா? கடவுளின் உருவத்தின் மேல் கொள்ளும் தியானம் மற்றும் அவருடைய திருநாம ஜபம் ஆகியவை மட்டுமே மனக்கலக்கங்களை நீக்கவல்லவை ஆகும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 23, 1958

Sai Inspires (Tamil Translation): 21st January 2013

Install a radio receiver, select the wavelength of the station you propose to listen to, and tune it correctly to that wavelength. You will then hear the radio program loud and clear, is it not? Your ear will tell you the accuracy with which you have tuned. Akin to this, you must enter into a course of spiritual discipline. Choose any mantra or incantation of the Lord that pleases you. Meditate on it and repeat it continuously with accurate care and steady attention; tune in to the Voice of God within you. Do not pay heed to the obstacles that come in the way, in the form of satire and criticism that people around you give freely. They may be experts only on short-lived trivialities of social life or sensual pleasure. Persist on your practices – your own experience will tell you the validity and value of this experiment!

– Divine Discourse, February 19, 1964

ஒரு வானொலிப் பெட்டியை வைத்துக் கொண்டு, நீங்கள் கேட்க விழையும் ஒரு வானொலி நிலையத்தின் அலைவரிசைக்கு அதனைச் சரியாக ட்யூன் செய்யுங்கள். அவ்வாறு செய்தால், நீங்கள் அவ்வானொலி நிகழ்ச்சியைச் சரியாக, தெளிவாகக் கேட்க முடியுமல்லவா? உங்கள் செவியே நீங்கள் சரியாக ட்யூன் செய்துள்ளீர்களா என்பதைச் சுட்டிக்காட்டும். இதனைப் போலவே, நீங்கள் ஆன்மீகக் கட்டுப்பாடு எனும் பயிற்சியிலும் நுழைய வேண்டும். உங்களுக்குப் பிரியமான கடவுளின் மந்திரத்தையோ ஸ்லோகத்தையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன் மீது தியானம் செய்து, அதனை இடைவிடாது, துல்லியமான, சிதறாத கவனத்துடன் ஜபியுங்கள்; உங்களுள் உள்ள தெய்வத்தின் குரலுக்கு ட்யூன் செய்யுங்கள். மக்கள் தம் போக்கில் பேசிடும் கேலிப் பேச்சு மற்றும் விமர்சனம் எனும் வடிவத்தில் நடுவில் தோன்றும் தடங்கல்களை சட்டைச் செய்யாதீர்கள். அவர்கள் சமூக வாழ்க்கை, புலனின்பம் போன்ற அற்பமான விஷயங்களில் மட்டுமே கைதேர்ந்தவர்களாக இருக்கலாம். உங்கள் பயிற்சியை இடைவிடாது செய்யுங்கள் – உங்கள் அனுபவங்களே இந்தப் பரீட்சையின் மதிப்பை உங்களுக்கு எடுத்துச் சொல்லும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 19, 1964

Sai Inspires (Tamil Translation): 15th December 2012

One must develop deep detachment. There is no use renouncing some food or drink, to which you have become bound, when you hear a discourse, or when some religious text is expounded within hearing. Detach yourself from all that keeps you away from God. Spend more time on meditation or namasmarana, for peace and joy are not to be found in external nature; they are treasures lying hidden in the inner realms of each and everyone. Once they are located, one can never again be sad or agitated. With every inhalation, utter the Name of the Lord. With every exhalation, utter the Name of the Lord. Use this splendid and precious chance in your life to the fullest. Live in God, for Him and with Him.

– Divine Discourse, October 15, 1966

பற்றின்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரு பேருரையை கேட்ட பிறகோ அல்லது ஒரு ஆன்மீகப் புத்தகத்திலுள்ள நல்விஷயங்களைப் பற்றி விரிவுரைக்கும் பொழுதோ உங்களுக்கு மிகவும் பற்றுள்ள ஒரு உணவுப் பண்டத்தையோ அல்லது பானத்தையோ விலக்குவதில் எவ்விதப் பயனும் இல்லை. உங்களைக் கடவுளிடமிருந்து விலக்கி வைக்கும் அனைத்திலிருந்தும் விலகியிருங்கள். தியானத்திலும் நாமஸ்மரணையிலும் அதிக அளவில் நேரத்தைச் செலவழியுங்கள். ஏனெனில் அமைதியும் மகிழ்ச்சியும் வெளிவுலகில் கிடைக்காது. அவை, ஒவ்வொருவரிலும் உள்ளே புதைந்திருக்கும் புதையல்கள். அவை இருப்பதைக் கண்டுவிட்டால், ஒருவர் மீண்டும், எப்பொழுதும் சோகமாகவோ, கலக்கமாகவோ இருக்கமாட்டார்கள். ஒவ்வொரு முறை மூச்சை இழுக்கும் பொழுதும் கடவுளின் திருநாமத்தை உச்சரியுங்கள். ஒவ்வொரு முறை மூச்சை வெளியே விடும் பொழுதும், கடவுளின் திருநாமத்தை உச்சரியுங்கள். இந்த அற்புதமான, அரிய வாய்ப்பை உங்கள் வாழ்வில் பூரணமாக உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். கடவுளில் வாழுங்கள்; கடவுளுக்காக வாழுங்கள்; கடவுளுடன் வாழுங்கள்.

– தெய்வீக உரை, அக்டோபர் 15, 1966

Sai Inspires (Tamil Translation): 2nd December 2012

https://i0.wp.com/media.radiosai.org/sai_inspires/2012/uploadimages/SI_20121202.jpg

When a plane flies across the sky, it leaves no mark on it, no streak that lasts, no furrow or pot-hole that interferes with the next plane in that path. So too, let any or all feelings or emotions cross your mind, but never allow any of them to cause an impression. You can accomplish this by inquiry, quiet reasoning within oneself. This method is more effective than listening to lectures or studying books. Little children are trained to walk by means of a three wheeled contraption. The Pranava is such an instrument, the three wheels being the syllables A U and M. Holding it, you can learn to use your feet of devotion and detachment. If one walks on with the help of this Pranava meditation, one can certainly realise the glory of the Divine, which is the very substance of the Universe.

– Sathya Sai Speaks, Volume VI, Chapter 27

ஒரு விமானம் வானத்தில் பறக்கும் பொழுது, அதன் மேல் ஒரு சுவடையும் அது விட்டுச் செல்லாது. நிலைத்து நிற்கும் எந்த கோட்டையும் விட்டுச் செல்லாது, பின்னால் வரவிருக்கும் மற்றொரு விமானத்திற்கு இடையூறாக ஒரு தடத்தையோ அல்லது பள்ளத்தையோ அது ஏற்படுத்தாது. அதே போல, உங்கள் மனதில் எந்த எண்ணங்களும் உணர்ச்சிகளும் வந்தாலும் அவற்றை உங்கள் மனதில் சுவடு எதுவும் ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அமைதியாக உங்களுள்ளேயே ஆராய்வதன் மூலம் நீங்கள் இதனை அடையலாம். பிரசங்கங்களைக் கேட்பதையும், புத்தகங்களைப் படிப்பதையும் விட இந்தச் செயல்பாடு மிகவும் திறன் வாய்ந்ததாகும். சிறு குழந்தைகளுக்கு மூன்று சக்கர வண்டியைக் கொண்டு நடப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. பிரணவம் அவ்வாறான ஒரு கருவியாகும், அதன் மூன்று சக்கரங்களும் “அ”, “உ” மற்றும் “ம்” ஆகும். அதனைப் பற்றிக் கொண்டு, நீங்கள் பக்தி மற்றும் பற்றின்மை ஆகிய இரு பாதங்களைக் கொண்டு நடப்பதற்குப் பழகிக் கொள்ளலாம். இந்தப் பிரணவ தியானத்தின் உதவியுடன் ஒருவர் பிரபஞ்சத்தின் உட்பொருளான தெய்வத்தின் மகிமையை நிச்சயமாக உணர முடியும்.

– சாயி அருளமுதம், பாகம் 6, அத்தியாயம் 27

Sai Inspires (Tamil Translation): 25th October 2012

Believe in your experience; confidently accept whatever has given you peace and joy. This is the basis for faith. Also, gather wisdom from wherever you can acquire it. Listen to the good things that teachers of different denominations elaborate upon. Weigh in your own mind, against your own experience, the teachings you have heard. Listening (Shravanam) should be followed and confirmed by Reflection (Mananam). You must think through the background, implications, reservations, and limitations of what you have been told. Then comes Nididhyaasana – you should meditate on the truth that you have painstakingly garnered over the years and plant this wisdom deep down in your consciousness and let it become part of yourself.

– Divine Discourse, September 8, 1966

உங்கள் அனுபவத்தின் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள்; உங்களுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் அளித்த எதனையும் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். இதுவே நம்பிக்கைக்கு ஆதாரமாகும். மேலும், எங்கிருந்தெல்லாம் ஞானத்தை நீங்கள் அடையலாமோ அங்கிருந்தெல்லாம் அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள். பல்வேறு தரப்பட்ட ஆசிரியர்கள் விரிவுரைக்கும் நல்ல விஷயங்களைக் கேளுங்கள். உங்கள் மனதிலேயே உங்கள் அனுபவத்தைப் பொறுத்து நீங்கள் கேட்ட உபதேசங்களை எடை போட்டுப் பாருங்கள். கேட்பது (ச்ரவணம்) என்பது ஆழ்ந்த சிந்தனையின் (மனனம்) மூலம் பின்பற்றப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும். உங்களுக்குச் சொல்லப்பட்டவற்றின் பின்னணியும், விளைவுகளும், அனுமானங்களும், வரம்பும் பற்றி நீங்கள் நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும். அதன் பின் நிதித்யாஸனம் வருகின்றது – நீங்கள் வருடக்கணக்காக கஷ்டப்பட்டு அடைந்த சத்தியத்தின் மேல் தியானித்து, இந்த ஞானம் உங்கள் ஆழ் உணர்வில் ஆழமாக ஊன்றப்பட்டு, அது உங்களில் ஒரு பகுதியாகவே மாறட்டும்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 8, 1966

Sai Inspires (Tamil Translation): 19th October 2012

Cleanse the heart with the water of love and the detergents of prayer and contrition, so that the stains of desire will be removed. Then God will pour His Grace into it. If you yearn for God, you should give up attachment to the external world and to the body (Loka bhranthi and Deha bhranthi). There is no use trying to put one foot in one boat and another in a different boat. You may have been a spiritual aspirant for 20 or 25 years, but if you worry more about physical needs and comforts than meditation and spiritual progress, then the years of practice is of no value, as there has been no progress. The waving of the camphor flame (aarti) at the end of the prayer or bhajan session is to remind you that your sensual cravings must be burnt away without leaving any trace behind. You must offer yourself completely to God, to be merged in His Glory.

– Divine Discourse, September 8, 1966

அன்பு எனும் நீரையும், பிரார்த்தனை மற்றும் தன்மறுக்கம் ஆகிய சலவைத் தூளையும் கொண்டு, ஆசை எனும் கறைகள் நீங்குமாறு இதயத்தைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் கடவுள் தன் அருளை அதனுள் பொழிவார். நீங்கள் கடவுளுக்காக விழைந்தால், புற உலகின் மேலும் தேகத்தின் மேலும் உள்ள பற்றுதலை (லோக பிராந்தி மற்றும் தேக பிராந்தியை) நீங்கள் களைய வேண்டும். ஒரு காலை ஒரு படகிலும், மற்றொரு காலை வேறொரு படகிலும் வைக்க முயற்சிப்பது உபயோகமற்றதாகும். நீங்கள் 20  அல்லது 25 வருடங்கள் ஆன்மீக சாதகராக இருந்திருக்கலாம், ஆனால் தியானம் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தை விட உங்கள் பௌதிகத் தேவைகள் மற்றும் சௌகரியங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், வருடக்கணக்கான பயிற்சி, முன்னேற்றம் இல்லை என்பதனால், மதிப்பற்றதாக ஆகிறது. பிரார்த்தனை மற்றும் பஜனை முடிந்தவுடன் கற்பூர ஆரத்தியைக் காண்பிப்பது என்பது உங்கள் புலன் சார்ந்த நாட்டங்களை,  சுவடில்லாமல் எரித்துவிட வேண்டும் என்பதனை நினைவில் கொண்டு வருவதற்காகவே ஆகும். கடவுளின் மகிமையில் உங்களை அமிழ்த்துக் கொள்வதற்காக நீங்கள் உங்களைப் பூரணமாக அவரிடம் அர்ப்பணித்து விட வேண்டும்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 8, 1966

12th March 2012

நீங்கள் தியானத்தின் மூலம் புலன்களின் மேல் ஆதிக்கம் பெற முடிவு செய்து கொண்டு, அதனை சீராக, முறையாக, ஒழுங்காக, ஒரு குறிப்பிட்ட நேரத்திலும், இடத்திலும் உங்கள் சபலத்திற்கு ஏற்றவாறு மாற்றாமல் பின்பற்றுங்கள். நீங்கள் இஷ்டப்பட்டபடி மாற்றாதீர்கள். ஏனெனில் அது கொடிய விளைவுகளை அளிக்கும். எவர் நிறைய உணவு உண்டு, அதனை ஜீரணிப்பதற்கு சோர்வடைகிறார்களோ, எவர் மிகக் குறைவாகவே உண்டு, சோர்வால் வாடுகிறார்களோ, எவர் மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ தூங்குகிறார்களோ, எவர் தமது ஸௌகர்யத்திற்கு ஏற்றவாறு ஆன்மீக சாதனைகள் செய்கிறார்களோ (அதாவது, அவர்களுக்கு வேறெந்த பணியும் இல்லாமல் உள்ள ஒரு நாள், நீண்ட மணி நேரங்கள் செய்து, மறுநாள் நிறைய பணிகள் இருப்பதால் போதும் போதாததாக செய்து கொண்டு இருக்கிறார்களோ), எவர் தம் உள் இருக்கும் ஆறு எதிரிகளுக்கும் சுதந்திரமாக தம் மேல் கட்டுப்பாட்டை வழங்குகிறார்களோ, எவர் தமது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி அளிக்காமல் இருக்கிறார்களோ, எவர் தமது இதயத்தினுள்ளே உறையும் ஆண்டவனின் மேல் மிகவும் குறைந்த அளவே நம்பிக்கை வைத்துள்ளார்களோ, அப்படிப்பட்டவர்களுக்கு ஆன்மீக சாதனைகள் எந்தப் பலனையும் கண்டிப்பாக தராது.

– கீதா வாஹினி, அத்தியாயம் 11