Tag Archives: Merge your Will with God’s Will

Sai Inspires (Tamil Translation): 6th March 2013

Once, I asked a few people as to what they would like to be in the hands of the Lord. Some said the lotus, some the shankha (conch) and some the chakra (discus), but no one mentioned the murali (flute). I would advise you to aspire to become the flute, for then the Lord Himself will come to you and pick you up. Achieve the hollowness of heart by making it completely egoless. He will then breathe through you and create captivating music for all Creation to enjoy. Be straight, without any will of your own and merge your will in the Will of God. Inhale only the breath of God. That is Divine Life, the goal you must all achieve.

– Divine Discourse, April 1957

ஒருமுறை நான் சிலரைப் பார்த்து, தெய்வத்தின் கையில் அவர்கள் என்னவாக இருக்க விரும்புகிறார்கள் என்று கேட்டேன். சிலர் தாமரை மலர் என்றும், சிலர் சங்கு என்றும், மற்றும் சிலர் சக்கரம் என்றும் கூறினர், ஆனால் யாரும் முரளி, அதாவது புல்லாங்குழல் என்று கூறவில்லை. நீங்கள் புல்லாங்குழலாக மாற வேண்டும் என்கிற விருப்பம் கொள்ள வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். ஏனெனில், அவ்வாறிருந்தால் கடவுள் தாமே வந்து உங்களைத் தன் கையில் எடுத்துக் கொள்வார். இதயத்தை அகம்பாவம் அறவே இல்லாமல் சுத்தமாக்கி, அதனைக் காலியாக வைத்துக் கொண்டால், அவர் உங்கள் வழியாக மூச்சுவிட்டு, படைப்பனைத்தும் மகிழ்வுருமாறு சொக்க வைக்கும் இன்னிசையைத் தோற்றுவிப்பார். உங்கள் சுயசங்கல்பம் எதுவுமில்லாமல் நேராக இருந்து, உங்கள் சங்கல்பத்தை தெய்வ சங்கல்பத்துடன் கலந்துவிடுங்கள். தெய்வத்தின் சுவாசத்தை மட்டுமே சுவாசியுங்கள். அதுவே நீங்கள் அடைய வேண்டிய குறிக்கோளாகிய தெய்வீக வாழ்க்கை ஆகும்.

– தெய்வீக உரை, ஏப்ரல் 1957