Tag Archives: pranava

Sai Inspires (Tamil Translation): 2nd December 2012

https://i0.wp.com/media.radiosai.org/sai_inspires/2012/uploadimages/SI_20121202.jpg

When a plane flies across the sky, it leaves no mark on it, no streak that lasts, no furrow or pot-hole that interferes with the next plane in that path. So too, let any or all feelings or emotions cross your mind, but never allow any of them to cause an impression. You can accomplish this by inquiry, quiet reasoning within oneself. This method is more effective than listening to lectures or studying books. Little children are trained to walk by means of a three wheeled contraption. The Pranava is such an instrument, the three wheels being the syllables A U and M. Holding it, you can learn to use your feet of devotion and detachment. If one walks on with the help of this Pranava meditation, one can certainly realise the glory of the Divine, which is the very substance of the Universe.

– Sathya Sai Speaks, Volume VI, Chapter 27

ஒரு விமானம் வானத்தில் பறக்கும் பொழுது, அதன் மேல் ஒரு சுவடையும் அது விட்டுச் செல்லாது. நிலைத்து நிற்கும் எந்த கோட்டையும் விட்டுச் செல்லாது, பின்னால் வரவிருக்கும் மற்றொரு விமானத்திற்கு இடையூறாக ஒரு தடத்தையோ அல்லது பள்ளத்தையோ அது ஏற்படுத்தாது. அதே போல, உங்கள் மனதில் எந்த எண்ணங்களும் உணர்ச்சிகளும் வந்தாலும் அவற்றை உங்கள் மனதில் சுவடு எதுவும் ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அமைதியாக உங்களுள்ளேயே ஆராய்வதன் மூலம் நீங்கள் இதனை அடையலாம். பிரசங்கங்களைக் கேட்பதையும், புத்தகங்களைப் படிப்பதையும் விட இந்தச் செயல்பாடு மிகவும் திறன் வாய்ந்ததாகும். சிறு குழந்தைகளுக்கு மூன்று சக்கர வண்டியைக் கொண்டு நடப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. பிரணவம் அவ்வாறான ஒரு கருவியாகும், அதன் மூன்று சக்கரங்களும் “அ”, “உ” மற்றும் “ம்” ஆகும். அதனைப் பற்றிக் கொண்டு, நீங்கள் பக்தி மற்றும் பற்றின்மை ஆகிய இரு பாதங்களைக் கொண்டு நடப்பதற்குப் பழகிக் கொள்ளலாம். இந்தப் பிரணவ தியானத்தின் உதவியுடன் ஒருவர் பிரபஞ்சத்தின் உட்பொருளான தெய்வத்தின் மகிமையை நிச்சயமாக உணர முடியும்.

– சாயி அருளமுதம், பாகம் 6, அத்தியாயம் 27

21st March 2012

The mind has an innate tendency to merge in whatever it contacts; it craves for this merger and so, it is ever agitated and restless. But by constant practice and training, it can be directed towards the Pranava (Om, the Primordial Sound) and taught to be one with it. The mind is naturally drawn towards sound and hence, it is compared to a serpent. The snake has two crude qualities – one, its crooked gait and second, the tendency to bite all that comes in its way. Human beings too seek to hold and possess all that they set their eyes on; people too move about crookedly. But there is in the serpent one praiseworthy trait; however poisonous and deadly its nature might be, when the strains of the charmer’s music are played, it spreads its hood and merges itself in the sweetness of that melody, forgetting everything else. Similarly, people too can, by practice, merge themselves into the bliss of Pranava.

– Geetha Vahini, Chap 12

எதனுடன் தொடர்பு கொள்கிறதோ அதனுடன் இணைய மனதிற்கு ஒரு இயல்பான உந்துதல் உள்ளது. அது இந்த இணைப்பிற்கு ஏங்குகிறது. அதனால் அது எப்பொழுதும் குழப்பத்திலும் அமைதியற்றும் இருக்கிறது. ஆனால் இடைவிடாத பயிற்சியாலும் பழக்கத்தினாலும் பிரணவத்தை (ஓம், என்கிற மூலமுதலான ஒலியை) நோக்கி இயக்க முடியும். மனம் இயல்பாகவே ஒலியை நோக்கி ஈர்க்கப்படுகிறது. அதனால் அது பாம்பினுடன் ஒப்பிடப்படுகிறது. பாம்பிற்கு இரண்டு முரட்டுக் குணங்கள் உள்ளன. ஒன்று, அதன் வளைந்த நடை; இரண்டு, தன் வழியில் வரும் எதனையும் கடிக்க உள்ள உந்துதல். மனிதர்களும் தங்களுடைய பார்வை எதன்மீதெல்லாம் படுகிறதோ அவற்றையெல்லாம் அடைந்து வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். மக்களும் வளைந்து வளைந்தே நகர்கிறார்கள். ஆனால், பாம்பிற்கு ஒரு பாராட்டத்தக்க குணம் உள்ளது. அதன் இயல்பின்படி எவ்வளவு விஷம் இருந்தாலும், கொடியதாக இருந்தாலும், பாம்பாட்டியின் இசை வாசிக்கப்ப்படும்போது, படம் எடுத்து, மற்ற அனைத்தையும் மறந்து, அந்த இசையின் இனிமையில் தன்னை இணைத்துக்கொள்கிறது. அது போலவே, மக்களும், பயிற்சியினால், பிரணவத்தின் ஆனந்தத்தில் தங்களை இணைத்துக்கொள்ளலாம்.

– கீதா வாஹினி, அத்தியாயம் 12