Tag Archives: Pure Love

Sai Inspires (Tamil Translation): 11th March 2013

At first look, everyone appears to be a devotee, but individuals respond differently to different circumstances. If you keep a ball of iron and dry leaf side by side, when there is no wind, both of them will be firm and steady. But when there is a breeze, the dry leaf will be carried many miles away. The iron ball will remain firm and steady. If one has true love and firm faith in God, one will be like an iron ball, steady and undisturbed. If one is like a leaf running away on account of difficulties and problems, it is a travesty to call such a person a devotee. We should develop pure and steady love and faith.

– Divine Discourse, February 17, 1985

முதல் தோற்றத்தில் அனைவரும் பக்தராகத் தோன்றுவார்கள், ஆனால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒவ்வொருவரும் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். ஒரு இரும்புக் குண்டையும், ஒரு காய்ந்த இலையையும் அருகருகே, காற்று வீசாத போது  வைத்தால், அவ்விரண்டுமே உறுதியாகவும், அசையாமலும் இருக்கும். ஆனால், காற்றடிக்கும் போது, காய்ந்த இலையானது பல மைல் தூரத்திற்கு அப்பால் வீசியடிக்கப்படுகிறது. இரும்புக் குண்டு உறுதியாகவும் அசையாமலும் இருக்கிறது. ஒருவருக்கு இறைவன் மீது உண்மையான அன்பும், அசையாத நம்பிக்கையும் இருந்தால், அவர் இரும்புக் குண்டைப் போல, அசையாமல், சலனமில்லாமல் இருப்பார். ஒருவர் இலையைப் போல கஷ்டங்களாலும் பிரச்சினைகளாலும் ஓடிக் கொண்டிருந்தால், அப்படிப்பட்டவரை ஒரு பக்தர் என்று கூறுவது ஏளனத்திற்குரிய செயலாகும். புனிதமான, அசையாத அன்பையும் நம்பிக்கையையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 17, 1985

Sai Inspires (Tamil Translation): 16th January 2013

Pure love alone can carry out successfully projects of service and welfare. Love creates sympathy; Love will show the way where hatred creates complexities. When a toddler is learning to walk, love will place no obstacles on the path. On the other hand, it will encourage, welcoming each forward step and overlooking each fall. Unfortunately, many a beneficial ventures are laid barren because of harsh criticism and wanton disparagements. Noble works must be executed with lots of love. True devotion alone can transform people’s hearts and lead them in the path of Truth and Right Conduct. Any trace of greed for gain degrades love. That is why a child is all love as it has no attachment to the goods of the world.

– Divine Discourse, October 19, 1966

தூய அன்பினால் மட்டுமே சேவைப் பணிகளையும், பொதுநலப்பணிகளையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும். அன்பு இரக்கத்தை உருவாக்குகிறது; வெறுப்பு சிக்கல்களை ஏற்படுத்துமிடத்தில் அன்பு வழி காட்டும். ஒரு சிறுகுழந்தை நடக்கப் பயிலும் பொழுது, அதன் பாதையில் அன்பு ஒரு போதும் தடங்கல்களை வைக்காது. ஆனால், முன்னால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் வரவேற்று, ஒவ்வொரு முறை கீழே விழும் போதும் கவனித்துக் கொண்டு அது ஊக்கமளிக்கும். துரதிர்ஷ்டவசமாக, கடுமையான விமர்சனத்தினாலும், வேண்டுமென்றே செய்யப்படும் மரியாதைக் குறைவான பேச்சுக்களாலும் பல பயனுள்ள பணிகள் நிலுவையில் வைக்கப்படுகின்றன. நற்பணிகள் பேரன்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். உண்மையான பக்தி மட்டுமே மக்களின் இதயங்களை உயர் மாற்றம் செய்து, அவர்களை சத்தியம் மற்றும் தர்மத்தின் பாதையில் வழி நடத்துகிறது. சிறிதளவே உள்ள பேராசை கூட அன்பை நிலை தாழ்த்துகிறது. ஆகையால் தான், உலகப் பொருட்கள் மீதான பற்றில்லாததால் ஒரு குழந்தை அன்பால் நிறைந்திருக்கிறது.

– தெய்வீக உரை, அக்டோபர் 19, 1966