Tag Archives: purification

23rd March 2012

You would have celebrated many Ugadi (New Year day) festivals in your life. Certain traditional practices go with every festival, such as having a sacred bath, wearing new clothes, cleaning the house and decorating it with buntings of green leaves. True greatness lies in purifying our thoughts, not merely the transient human body. The significance of a festival does not lie in wearing new clothes but in cultivating new and noble thoughts. The house should be decorated not merely with the buntings of green leaves, but with the buntings of love. Share your love with everyone you meet. Only then would you be celebrating the festival in its true spirit. In this New Year sanctify your thoughts with sacred and broad feelings. Develop divine love and foster peace in every country. Start the day by praying, “May the whole world be happy! ” Then you will lead a blissful and peaceful life, full of enthusiasm.

– Divine Discourse, Mar 18, 1999.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல உகாதி பண்டிகைகள் கொண்டாடியிருப்பீர்கள். ஒவ்வொரு பண்டிகையிலும் புனித நீராடுவது, புத்தாடை உடுத்துவது, வீட்டை சுத்தம் செய்வது, பச்சிலைத் தோரணங்கள் கொண்டு அலங்கரிப்பது போன்று சில சம்பிரதாய பழக்கங்கள் உள்ளன. உண்மையான பெருமை நமது எண்ணங்களைப் தூய்மைபடுத்துவதில்தான் உள்ளது, நிலையற்ற உடலை தூய்மைபடுத்துவதில் அல்ல. ஒரு பண்டிகையின் தனிச்சிறப்பு புத்தாடைகள் உடுத்துவதில் இல்லை, புதியதான மேன்மையான எண்ணங்களை விளைவிப்பதில்தான் உள்ளது. வீட்டை வெறும் பச்சிலைத் தோரணங்களால் மட்டும் அலங்கரிக்கக் கூடாது, அன்புத் தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் உங்கள் அன்பைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அப்படிச் செய்வதுதான் பண்டிகை கொண்டாடுவதின் உண்மைப் பொருள். இந்த புத்தாண்டு தினத்தில் உங்கள் எண்ணங்களைப் புனிதமான, பரந்த மனப்பான்மை கொண்ட உணர்வுகளால் புனிதப்படுத்திக் கொள்ளுங்கள். தெய்வீக அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாட்டிலும் அமைதியைப் பேணுங்கள். “அனைத்து உலகமும் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என்கிற பிரார்த்தனையுடன் தினத்தைத் துவங்குங்கள். அவ்வாறானால், நீங்கள் ஆனந்தமயமான, அமைதிமயமான, உற்சாகமயமான வாழ்க்கை வாழ்வீர்கள்.

– தெய்வீக உரை, மார்ச் 18, 1999

23rd February 2012

உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு இந்த உடலை வழங்கியிருந்தாலும், குருதான் உங்களுள் உறைபவரை சுட்டிக்காட்டுகிறார். ஆபரணம் செய்வதற்கு ஏற்றதாக தங்கத்தை மாற்றுவதற்கு சிறிதளவு வெள்ளியும் செம்பும் சேர்க்கப்படுகிறது. அதுபோலவே இயற்கையின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்த பிரம்மதத்வம் (அதாவது தெய்வீக சாரம்), சிறிதளவு அஹங்காரம் அதாவது ‘நான்’ என்கிற உணர்வு, மற்றும் மமகாரம் அதாவது ‘எனது’ என்கிற உணர்வு, சேர்க்கப்பட்டு ஒரு உலோகக்கலவையாக மாற்றப்படுகிறது. குருவானவர் ஸ்ரவணம், மனனம் மற்றும் நிதித்யாஸனம் (அதாவது தெய்வத்தின் புகழைக் கேட்டல், உள்வாங்குதல் மற்றும் தியானித்தல்) மூலம் ஒருவரது புனிதமான, கலப்படமில்லாத நிலையை மீண்டும் பெற கற்றுத்தருகிறார். இந்த வழிமுறை மூலமாக (ஜீவாத்மாவாகிய) தானும், (பரமாத்மாவாகிய) கடவுளும் ஒன்றே என்பதையும் மேலும் இவை ஒரே பொருளின் வெவ்வேறு அம்சம் என்பதையும் ஒருவர் புரிந்துகொள்ளலாம்.

– தெய்வீக உரை, பிப்ரவரி, 25, 1965