Tag Archives: Remedy for Sorrow & Pain

Sai Inspires (Tamil Translation): 18th February 2013

God is Supreme Energy (Mahashakthi) and the individual is Deluding Power (Mayashakthi). In this impermanent and ever transforming world, God is the only permanent and fixed entity. In order to realize Him, who is eternal and true, one has no option but to attach oneself to that Source and Sustenance, and offer Him loving devotion and dedicated service. This path is the destiny of one and all, irrespective of age, scholarship, caste, creed, gender or status. When walking along the road, you can watch your shadow, falling on mud, dirt, thorn, sand, wet or dry patches of land. Has anyone ever worried or is affected by the fate of their shadow? No! Everyone knows that the experience of shadow is not eternal and real. So too, you are but the shadow of the Absolute. Internalize this truth – this is the only remedy for all sorrow, travail and pain.

– Divine Discourse, August 1, 1956

கடவுள் மஹாசக்தியாகவும் ஜீவி மாயாசக்தியாகவும் உள்ளனர். இந்த நிலையில்லாத, என்றும் மாற்றமடைந்து கொண்டிருக்கும் உலகில், கடவுள் மட்டுமே நிரந்தரம் மற்றும் நிலையான வஸ்து ஆவார். சாச்வதமான, சத்தியமான அவரை உணர்ந்திட அந்தத் தோற்றுவாய் மற்றும் போஷிப்பவரிடம் பற்றுதல் கொண்டு, பக்தியையும், அர்ப்பணிப்புடனான சேவையை  அவருக்கு அர்ப்பணிப்பது மட்டுமே வழியாகும். இப்பாதை வயது, பாண்டித்தியம், ஜாதி, சமயம்,  பாலினம் மற்றும் அந்தஸ்து வித்தியாசமின்றி அனைவருக்கும் உண்டான விதியாகும். சாலையில் நடக்கும் பொழுது, உங்கள் நிழல் மண்ணின் மீதும், தூசியின் மீதும், முள்ளின் மீதும், மணலின் மீதும், ஈரமான, வறண்ட நிலத்தின் மீதும் விழுவதைக் காண்கிறீர்கள். தம் நிழலின் இந்த நிலைமையைப் பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா அல்லது வருந்துகிறார்களா? இல்லை! நிழலின் அனுபவம் நிரந்தரமற்றது என்றும் உண்மையில்லை என்றும் அனைவரும் அறிவார்கள். அதே போல, நீங்கள் பரம்பொருளின் நிழல் தான். இவ்வுண்மையை உணருங்கள் – இதுவே அனைத்துத் துயரம், வேதனை மற்றும் வலியின் நிவாரணம் ஆகும்.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 1, 1956