Tag Archives: Sayujyam

Sai Inspires (Tamil Translation): 25th February 2013

What do people know of the motives that prompt the Lord and His actions? Some found fault with Sage Narada for repeating the name of the Lord, always, without intermission. But until Sayujyam (merging in the Absolute), the name has to be used; the idea of separation will end only with mergence, not before that. Do not waver or doubt when once you are convinced. Seek to understand and satisfy yourself. After that, do not be misled. When the Sun is over your head there will be no shadow; similarly when faith is steady in your head it should not cast any shadow of doubt

– Divine Discourse, Aug 1 1956

ஆண்டவனுக்கும் அவன் செயல்களுக்கும் பின்னால் இருக்கும் உந்துதல்களைப் பற்றி மக்களுக்கு என்ன தெரியும்? இடைவிடாது கடவுளின் திருநாமத்தை உச்சரித்ததால் நாரத முனியிடம் தவறைக் கண்டார்கள். ஆனால் சாயுஜ்யம் (பரம்பொருளிடம் கலத்தல்) அடையும் வரை அந்தத் திருநாமம் உபயோகப்படுத்த வேண்டும்; வேற்றுமை எண்ணம், கலத்தலின் மூலமாக மட்டுமே பெறப்படுகிறது. நீங்கள் உறுதியாக உணர்ந்த பின் சலனப்படாதீர்கள் சந்தேகப்படாதீர்கள். நீங்களே கண்டு உணர்ந்து நிறைவடையுங்கள். அதன் பின், தவறிவிடாதீர்கள். சூரியன் உங்கள் தலையின் மேல் இருக்கும் பொழுது நிழல் இருக்காது; அதே போல, உங்கள் தலைக்குள் நம்பிக்கை நிதானமாக இருக்கும் பொழுது, அது சந்தேகத்தின் நிழலை என்றும் பட வைக்காது.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 1, 1956