Tag Archives: sense-control

Sai Inspires (Short – Tamil) – 18/Jan/2021

People should take great care that their senses do not go astray and commit offences. Thinking evil, speaking evil and seeing evil can invariably lead to total ruin.

Bhagawan Sri Sathya Sai Baba
Divine Discourse, May 22, 1986

Sai Inspires (Tamil Translation): 17th September 2012

When a man is suffering from the effects of cobra-bite, they give him chillies to chew; the idea is that the ailing person will not feel the spicy taste, if the poison is still in his system. So too, when the poison of worldly sensualism is there, worship, japam (contemplation), and dhyanam (meditation) – all of this will taste drab and dismal. Above all, insist on the senses obeying you when you command them to desist from dragging you. Or else you are like a car without a brake. With the senses under control, your intelligence will become clear to reflect the Glory of God that pervades the Universe. That is the teaching of the scriptures. Steady faith alone can help you earn victory. Hold on till the realization is rewarded to you.

– Divine Discourse, October 1, 1965

ஒரு மனிதன் நாகத்தால் கடிபட்டிருந்தால், அவன் மெல்வதற்கு மிளகாய் கொடுப்பார்கள். ஏனெனில், அந்த விஷம் பாதிக்கப்பட்ட நபரினுள் இருக்கும்வரை அவனுக்கு அதன் காரம் தெரியாது. அதே போல, உலக சுகம் எனும் விஷம் இருக்கும் பொழுது, வழிபாடு, ஜபம் மற்றும் தியானம் ஆகிய அனைத்தும் மந்தமாகவும் சுவையற்றும் இருக்கும். அனைத்திற்கும் மேலாக, உங்கள் புலன்கள், உங்களைத் இழுக்காமல் உங்கள் ஆணைகளின்படி நடக்குமாறு இருங்கள். இல்லையெனில் நீங்கள் ப்ரேக் இல்லாத ஊர்தியைப் போல் தான் இருப்பீர்கள். புலன்கள் கட்டுக்குள் இருக்கும் பொழுது, பிரபஞ்சம் தழுவியுள்ள கடவுளின் மகிமையைப் பிரதிபலிக்கும் வண்ணம் உங்கள் புத்தி தெளிவாகும். அதுவே புனித நூல்களின் உபதேசம். திடமான நம்பிக்கை மட்டுமே உங்களை வெற்றி பெறச் செய்யும். இந்த சாக்ஷாத்காரம் உங்களுக்கு அளிக்கப்படும் வரை உறுதியாக இருங்கள்.

– தெய்வீக உரை, அக்டோபர் 1, 1965

Sai Inspires (Tamil Translation): 30th July 2012

What is needed is control of the senses, not their destruction. To control means, to keep under one’s behest; obedient to one’s will. And destruction means denial of activity, complete inaction. One must keep all senses under control and use them only when the purposes for which they have been devised are to be fulfilled. In your home, you decide and carefully watch who are the right people to walk through the door. Those who must enter by one door should not use some other door. If they do, then that house will have only confusion and disorder. It is wiser to take precautions against such disorder before they enter, rather than deal with the intruders after they have come in. You may excuse the trespass for the first time. But certainly, you must take enough care to see that it is not repeated. That is the better method, though not the best.

– Geetha Vahini, Chapter 16

புலன்களை கட்டுப்படுத்துவதே தேவைப்படுகிறது, அவற்றை அழிப்பதல்ல. கட்டுப்படுத்துவதென்றால், தன் கட்டுக்குள் வைப்பது; தன் சங்கல்பத்திற்குக் கட்டுப்படுத்தி வைப்பது. அழித்தல் என்றால் செயலைப் புரியவிடாமல் வைப்பது மற்றும் மொத்தமாக செயலில்லாது இருப்பது என்பதாகும். ஒருவர் அனைத்து புலன்களையும் தம் வசத்தில் வைத்திருந்து, அவற்றின் மூலம் செய்யப்பட வேண்டிய செயல்களைப் புரிவதற்கு மட்டும் உபயோகப்படுத்த வேண்டும். உங்கள் வீட்டில், யார் வாசலைக் கடந்து உள்ளே வர வேண்டியவர்கள் யாரென நீங்கள் முடிவு செய்து, கவனமாகப் பார்த்துக் கொள்கிறீர்கள். ஒரு வாசல் வழியாக உள்ளே நுழைபவர் மற்றொரு வாசலை உபயோகிக்கக் கூடாது. அவ்வாறு அவர்கள் செய்தால், வீட்டில் குழப்பமும் சீர்குலைவும் தான் இருக்கும். அவர்கள் உள்ளே வந்த பின்பு அவர்களைச் சமாளிப்பதை விட, அவர்கள் உள்ளே வரும் முன்னரே, அப்படிப்பட்ட சீர்குலைவை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக இருப்பது புத்திசாலித்தனமானதாகும். முதல் முறை அத்துமீறலை நீங்கள் மன்னிக்கலாம். ஆனால் நிச்சயமாக, இது மறுபடியும் நிகழாமல் இருப்பதற்குப் போதிய கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும். அது மிகவும் உயர்ந்த யுக்தியாக இல்லாவிடினும், உயர்ந்த யுக்தியே.

– கீதா வாஹினி, அத்தியாயம் 16