Tag Archives: senses

Sai Inspires (Short – Tamil) – 20/March/2021

A monarch who allows himself to be controlled by ministers does not deserve the throne; he is spurned and disgraced. His kingdom has no peace and security. The mind is the monarch in man; senses are ministers. If the mind is the slave of its senses, you will have no peace.

Bhagawan Sri Sathya Sai Baba
Divine Discourse, May 6, 1983

Sai Inspires (Tamil Translation): 3rd March 2013

The world is building itself upon the sandy foundation of the sensory world. Like the monkey which could not pull its hand out of the narrow necked pot, because it first held in its grasp a handful of groundnuts which the pot contained, people are suffering today. They are unwilling to release their hold on the handful of pleasurable things they have grasped from the world. When people do not place faith in the Self, but pursue their senses alone, the danger signal is up! People are stuck with the wrong belief that the accumulation of material possessions will endow them with joy and peace. Divine Love alone can give you everlasting joy. Divine Love alone will remove anger, envy and hatred.

– Divine Discourse, 28 Feb 1964

மணலால் ஆன அடித்தளம் போன்ற புலனின்பச் சார்பினைக் கொண்டு உலகம் அமைந்து கொண்டிருக்கிறது. எவ்வாறு ஒரு குரங்கு ஒரு குறுகிய வாயைக் கொண்ட பானையினுளுள்ள வேர்க்கடலையை எடுப்பதற்காகக் கையை உள்ளே விட்டுவிட்டு, ஒரு கை நிறைய வேர்க்கடலையை எடுத்த பின்பு தனது கையை வெளியே எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றதோ, அவ்வாறே மக்களும் இன்று அவதிப்படுகின்றனர். கை நிறையக் கொண்டுள்ள புலனின்பமளிக்கும் விஷயங்களை விட்டுவிடுவதற்கு அவர்கள் விரும்பவில்லை. தம் தெய்வீகத் தன்மையின் மேல் நம்பிக்கை வைக்காமல் தம் புலன்களை மட்டுமே பின்பற்றுவதனால், இந்த அபாய நிலை ஏற்பட்டுள்ளது! இவ்வாறாக, பொருட்களைச் சேர்ப்பது தமக்கு ஆனந்தமும் அமைதியும் அளிக்கும் என்கிற தவறான நம்பிக்கையை உறுதியாகப் பற்றிக் கொண்டுள்ளனர். தெய்வீக அன்பு மட்டுமே உங்களுக்கு நீங்காத ஆனந்தத்தை அளிக்கும். தெய்வீக அன்பு மட்டுமே கோபம், பொறாமை மற்றும் துவேஷத்தை நீக்கும்.

– தெய்வீக உரை, 28 பிப்ரவரி 1964

Sai Inspires (Tamil Translation): 4th December 2012

https://i0.wp.com/media.radiosai.org/sai_inspires/2012/uploadimages/SI_20121204.jpg

Lead your life such that, in posterity, people will remember you with gratitude and joy. To lead a good life, constant prompting from the Lord within you will be of great help. That inspiration can be got only by constantly reciting the Lord’s Name and calling on the inner springs of Divinity. The Lord’s Name is such a valuable instrument to win His Grace, to realize His Presence, to picture His Form and to remember His Glory. Repeating it from the depths of the heart, even once in the morning and once in the evening, will make your house, a home (griha) instead of a cave (guha). Senses are the windows, which when left open, make the lamp of the Name of God unsteady. Keep your senses away from the negative influences and concentrate on the Name of the Lord, its beauty and sweetness.

– Sathya Sai Speaks, Volume VI, Chapter 27

பிற்காலத்தில் உங்களை நன்றியுணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் மக்கள் நினைவில் கொள்ளும்படியாக உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு, உங்களுள் உறையும் ஆண்டவனின் இடையறாத உந்துதல் உங்களுக்குப் பேருதவியாக இருக்கும். கடவுளின் திருநாமத்தை இடைவிடாது உச்சரிப்பதன் மூலமும், உள்ளிருக்கும் தெய்வீக ஊற்றினை வெளிக்கொணர்வதன் மூலமும் மட்டுமே அந்த அருட்கிளர்ச்சி உங்களுக்குக் கிடைக்கும். கடவுளின் அருளை வெல்வதற்கும், அவர் அண்மையைப் பெறுவதற்கும், அவருடையத் திருவுருவைக் காண்பதற்கும், அவர் மகிமையை நினைவில் கொள்வதற்கும் அவருடையத் திருநாமம் அப்படிப்பட்ட ஓர் அரிய சாதனமாகும். உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து ஒரு முறை காலையிலும், ஒரு முறை மாலையிலும் மட்டுமே கூட நீங்கள் உச்சரித்தாலும், உங்கள் வீட்டினை, ஒரு குகையாக மாற்றாமல், ஒரு நல்ல இல்லமாக மாற்றிவிடும். புலன்களே அந்த இல்லத்தின் ஜன்னல்கள்; அவற்றைத் திறந்து வைத்தால், கடவுளின் திருநாமம் எனும் விளக்கு அலைபாயும். உங்கள் புலன்களை தீய தாக்கங்களில் இருந்து விலக்கி வைத்து, கடவுளின் திருநாமத்தின் மேலும், அதன் அழகு மற்றும் இனிமையின் மேலும் ஒரு முகப்படுத்துங்கள்.

– சாயி அருளமுதம், பாகம் 6, அத்தியாயம் 27

Sai Inspires (Tamil Translation): 3rd December 2012

https://i0.wp.com/media.radiosai.org/sai_inspires/2012/uploadimages/SI_20121203.jpg

Turn the key in the lock to the left, it locks. Turn it to the right, it opens. So too, turn your mind towards the objective world, it gets locked, caught and deeply entangled. Turn it to the right, steer it away from the objects of senses, and the lock opens up, you are free and deliverance is in your hands! How to turn your mind to the right? Begin with remembering the Lord’s Holy Name (Naamasmarana) as your first step. A big and long journey begins with the first step. The first step itself will take you through to the second and third, and ultimately to realizing your destination or goal.

– Divine Discourse, February 3, 1964

பூட்டின் சாவியை இடது பக்கம் திருப்பினால், அது பூட்டப்படும். அதனை வலப்பக்கம் திருப்பினால், அது திறந்துவிடும். அதே போல, உங்கள் மனதை பொருள் சார்ந்த உலகின் பக்கம் திருப்பினால், அது பூட்டப்பட்டு, ஆழமாக மாட்டிக் கொள்கிறது. அதனை வலப்பக்கம் திருப்பி, புலன் சார்ந்த பொருட்களிடமிருந்து திருப்பினால், பூட்டு திறக்கப்பட்டு நீங்கள் விடுவிக்கப்பட்டு, உங்கள் விடுதலை உங்கள் கைகளில் இருக்கும்! மனதை வலப்புறம் திருப்புவது எப்படி? கடவுளின் புனிதமான திருநாமத்தை நினைவில் கொள்வதை (நாமஸ்மரணம்) முதல் அடியாகக் கொண்டு துவங்குங்கள். நீண்ட பயணம் என்பது முதல் அடியிலிருந்து தான் துவங்குகிறது. முதல் அடியே உங்களை இரண்டாவது மற்றும் மூன்றாவது அடிகளுக்கு இட்டுச் சென்று, முடிவாக நீங்கள் சேருமிடத்தையும் குறிக்கோளையும் அடையச் செய்யும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 3, 1964

5th March 2012

மனம் புத்தியின் சேவகனாக வேண்டும், புலன்களின் அடிமையாக அல்ல. பகுத்தறிந்து, தன்னை உடலிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும். புளியம்பழம் எவ்வாறு பழுத்தபின் தனது ஒட்டிற்குள் தளர்ந்துவிடுகிறதோ அவ்வாறே மனமும் இந்த ஓடாகிய கூடாகிய உடலுடன் பற்றில்லாமல் இருக்க வேண்டும். நீங்கள் பழுக்காத பச்சை புளியங்காயை ஒரு கல்லினால் அடித்தால் அதனுள் உள்ள பழச் சதைக்குத் தீங்கிழைப்பீர்கள். ஆனால் இதையே பழுத்த பழத்திற்கு செய்தால், என்ன ஆகும்? அந்தக் காய்ந்த ஓடு விழுந்துவிடும். உள்ளே உள்ள பழச் சதையையோ விதையையோ அது பாதிக்காது. பழுத்த சாதகன் விதியின் அடியையோ சந்தர்ப்பங்களின் தாக்குதலையோ உணர்வதில்லை. பழுக்காத மனிதனே ஒவ்வொரு அடியினாலும் புண்படுகிறான். அவ்வாறே உங்கள் அஞ்ஞானம் உங்கள் சுயமுயற்சியாலேயே விழுந்துவிட வேண்டும். அது உங்களுக்கு பரிசாகவோ அதிசய நிகழ்வாகவோ கிடைக்காது. பொய் மற்றும் அநியாயத்துடனான உங்கள் சுயப்போராட்டத்தினால் கிடைக்கும் சத்தியம், ஆனந்தம் மற்றும் அமைதி உங்களது நிலையான பொக்கிஷங்களாக இருக்கும்.

– தெய்வீக உரை, மார்ச் 1, 1965