Tag Archives: spirituality

Sai Inspires (Tamil Translation): 29th December 2012

Practice is the real thing that matters in spirituality. Scholarship is a burden, many times a handicap even. So long as God is believed to be far away, in temples and holy places, one will feel religion a burden and a hurdle. But install Him in your heart and you feel light, burdenless and even strong. It is like the food basket – when carried on a shoulder, it feels heavy. You are too weak, even to carry it. But sit near a stream and eat your food from the basket – though the food weight has not decreased, you feel stronger and joyful. That is the consequence of taking the food in. Do likewise, with the idea of God. Do not carry it on the shoulder, take it ‘in’! The scriptures teach, “God is verily the Life-breath, of every soul.” So practise to live in His Glory, in His Memory, in His contemplation, every single moment of your life.

– Divine Discourse, February 18, 1964

ஆன்மீக விஷயங்களில் நீடித்தப் பயிற்சியே உண்மையில் தேவைப்படுகிறது. பாண்டித்தியம் ஒரு சுமையே, பல சமயங்களில் அது ஒரு ஊனமாகக் கூட உள்ளது. கடவுள் எங்கோ தொலைவில், ஆலயங்களிலும், புனிதத் தலங்களிலும் மட்டுமே உள்ளார் என்ற நம்பிக்கை உள்ள வரையில், மதம் என்பது ஒரு சுமையாகவும், தடங்கலாகவும் தான் தோன்றும். அவரை உங்கள் இதயத்தில் பிரதிஷ்டை செய்து கொண்டால், சுமை குறைந்து, ஏன் மேலும் பலமாகவும் ஆகிவிடுவீர்கள். அது ஒரு உணவுக் கூடையை தோள்களில் சுமந்து செல்வது போல் பளுவாக இருக்கும். நீங்கள் அதனை சுமக்கக்கூடத் தெம்பில்லாமல் இருக்கிறீர்கள். ஆனால் ஒரு ஓடையில் கரையில் அமர்ந்து அந்த உணவுக் கூடையில் உள்ள உங்கள் உணவை நீங்கள் உண்டால், உணவின் எடை குறையாவிடினும், நீங்கள் பலமாகவும், மகிழ்ச்சியாகவும் ஆகிவிடுவீர்கள். உணவை உட்கொள்வதின் பலன் அதுவே. அவ்வாறே கடவுள் விஷயங்களிலும் செயல்படுங்கள். அதனை தோள்களில் சுமக்காதீர்கள், உட்கொள்ளுங்கள்! புனித நூல்கள், “ஒவ்வொரு ஆன்மாவின் உயிர் மூச்சே கடவுள்” என்று உபதேசிக்கின்றன. ஆகையால், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் அவரது மகிமையிலும், அவர் நினைவிலும், அவரைப் பற்றியச் சிந்தனையிலும் வாழ்ந்திடுங்கள்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 18, 1964

Sai Inspires (Tamil Translation): 6th June 2012

Let the petty wishes for which you now approach God be realized or not; let the plans for promotion and progress which you place before God, be fulfilled or not – these are not important in this journey of life. The primary aim for you should be to become Masters of yourselves. You must progress to hold intimate and constant communion with the Divine who is within you, as well as in the Universe you live in. Welcome disappointments and tests, for they toughen you and test your fortitude. For all who seek to cleanse the mind and climb upwards to the realm of spiritual bliss where ‘this’ and ‘that’ are discovered as one, the uninterrupted remembrance of the Divine Name is the most effective spiritual exercise.

– Divine Discourse, March 16, 1966

நீங்கள் இன்று கடவுளை அணுகுவதற்குக் காரணமான சிறிய ஆசைகள் நிறைவேறலாம், நிறைவேறாமலும் போகலாம், நீங்கள் கடவுள் முன் வைக்கும், உயர்வு மற்றும் முன்னேற்றம் பெறுவதற்கான திட்டங்கள் நிறைவேறலாம் நிறைவேறாமலும் போகலாம், இவை வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமானவையில்லை. உங்கள் முதல் குறிக்கோள், உங்களுக்கே நீங்கள் எஜமானராக மாறுவதற்காகத் தான் இருக்க வேண்டும். உங்களுள்ளும், நீங்கள் வசிக்கும் இந்தப் பிரபஞ்சத்திலும் நிறைந்துள்ள கடவுளிடம் நெருக்கமான, நிரந்தரமான தொடர்பு வைத்துக் கொள்வதற்கு நீங்கள் முன்னேற வேண்டும். ஏமாற்றங்களையும் சோதனைகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனெனில் அவை உங்களை உறுதிப்படுத்தி, உங்கள் உளவலிமையைச் சோதிக்கும். மனதினைச் சுத்தப்படுத்தி, ‘இதுவும்’ ‘அதுவும்’ ஒன்றே என்று விளங்கக்கூடிய ஆன்மீக ஆனந்தத்தின் இராஜ்ஜியத்திற்கு உயரே எழும்ப விரும்புபவர்களுக்கு, இடையறாது கடவுளின் பெயரை ஜபிப்பதே மிகவும் சக்திவாய்ந்த ஆன்மீகப் பயிற்சியாகும்.

– தெய்வீக உரை, மார்ச் 16, 1966