Tag Archives: Strength

Sai Inspires (Tamil Translation): 22nd January 2013

One may know the 700 verses of the Bhagavad Gita by heart, but trust Me, the time that was spent in learning by rote and reciting it, is all a waste, if one does not resolutely act upon even a single verse. It is not the resolution that matters; it is resoluteness. Resolution is just a string of words. In fact, that learning might even be a handicap as that skill can affect the head and make one swell with pride. The price of sugarcane is fixed according to the sugar content in it. You evaluate oranges in proportion to the juice they contain, is it not? So too, one is worthy of honour in proportion to the knowledge of the Self acquired. This knowledge alone can confer steadiness, strength and real happiness.

– Divine Discourse, February 19, 1964

ஒருவருக்கு பகவத் கீதையின் 700 ஸ்லோகங்களும் மனப்பாடமாக இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒரு ஸ்லோகத்தையும் கூட உறுதியுடன் பின்பற்றவில்லை என்றால் அதனைக் மனப்பாடம் செய்து, பாராயணம் செய்கின்ற அனைத்து நேரமும் வீணே. உறுதி பூணுவது முக்கியமல்ல. ஆனால் உறுதியுடன் இருப்பதே முக்கியம். உறுதி என்பது வார்த்தைகளின் ஒரு கோர்வை மட்டுமல்ல. பார்க்கப் போனால், அந்தப் பாடம் தலையைப் பாதித்து ஒருவரை அகந்தையில் ஆட வைக்கும் ஒரு ஊனமாகக் கூட ஆகலாம். ஒரு கரும்பின் விலை அதனிலுள்ள சர்க்கரையின் அளவைக் கொண்டு தான் நிர்ணயிக்கப்படுகிறது. ஆரஞ்சுப் பழங்கள் கூட அவற்றிலுள்ள சாற்றின் அளவின்படி தான் மதிப்பிடப்படுகின்றன அல்லவா? அதே போல, ஒருவர் தன்னைப் பற்றிய ஞானத்தை எவ்வளவு கொண்டுள்ளாரோ அதனைக் கொண்டுதான் அவர் மதிக்கப்படுகிறார். இந்த ஞானம் மட்டுமே நிதானத்தையும், பலத்தையும், உண்மையான சந்தோஷத்தையும் நல்கும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 19, 1964

Sai Inspires (Tamil Translation): 6th December 2012

Often, people try to reform the world without making any or proportionate effort to reform themselves. For, it is far easier to give advice and admonish others, than to take the advice and advance ourselves. The other is fundamentally, a reflection of your own self. You are the original and you yourself have to improve your shape. Invest time to strengthen your inner urges towards virtues and goodness, becoming impregnable and unassailable from within. Then you can set about reforming others in the planet.

– Divine Discourse, October 15, 1966

பெரும்பாலும் மக்கள் தம்மைத் திருத்திக் கொள்வதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் உலகைத் திருத்துவதற்கு விழைகிறார்கள். ஏனெனில், நாம் நமக்காக உபதேசத்தை எடுத்துக் கொண்டு முன்னேறுவதை விட பிறருக்கு உபதேசிப்பதும், அவர்களைக் கடிந்து கொள்வதும் மிக எளிதாக உள்ளது. அடிப்படையில் மற்றவர்கள் உங்களின் பிரதிபிம்பம் தான். நீங்கள் தான் அசல், நீங்கள் தான் உங்களை உருவேற்றிக் கொள்ள முடியும். உங்களைத் தகர்க்க முடியாதவாறும், தாக்க முடியாதவாறும்  மாற்றிக் கொள்வதற்கு, நற்குணங்கள் மற்றும் நன்மை ஆகியவற்றின்பால் உங்கள் உள் உந்துதல்களைப் பலமாக்குவதற்காக நேரத்தைச் செலவு செய்யுங்கள். இவ்வுலகில் உள்ள பிறரைத் திருத்துவதை அதற்குப் பிறகு நீங்கள் துவங்கலாம்.

– தெய்வீக உரை, அக்டோபர் 15, 1966

Sai Inspires (Tamil Translation): 30th October 2012

Proceed ever towards strength (balam). Do not take to untruth, wickedness, and crookedness – all of which denotes a fundamental fatal trait of cowardice and weakness (bala heenam). Weakness is born of accepting as true, a lower image of yourself than what the facts warrant. That is the main mistake. You believe you are the husk, but you really are the kernel. All spiritual practices must be directed to the removal of the husk and the revelation of the kernel. So long as you say, ”I am so and so”, there is bound to be fear. Once you say and feel “I am Divine” (Aham Brahmasmi), you get unconquerable strength.

– Divine Discourse, January 14, 1964

என்றும் பலத்தை நோக்கியே செல்லுங்கள். பொய்மை, சூழ்ச்சி மற்றும் நேர்மையின்மை ஆகியவையான, அடிப்படையாக அழிவைத் தரக்கூடிய கோழைத்தனம் மற்றும் பலவீனம் ஆகிய குணாதிசயங்களை பின்பற்றாதீர்கள். உங்களை உண்மைக்குப் புறம்பாக கீழ்த்தரமாகக் உங்களை அடையாளம் காட்டிக் கொள்வதிலிருந்து தான் பலவீனம் தோன்றுகிறது. அதுவே முக்கியத் தவறாகும். நீங்கள் உள்ளிருக்கும் கொப்பரையாக விளங்கும் உங்களை நீங்கள் வெளியிலிருக்கும் நார் எனக் கருதிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த நாரினை அகற்றி உள்ளிருக்கும் கொப்பரை வெளிப்படும்படியாக அனைத்து ஆன்மீகப் பயிற்சிகளும் இயக்கப்பட வேண்டும். “நான் இவர்; நான் அவர்” என்று நீங்கள் கூறிக் கொண்டிருக்கும் வரையில் நீங்கள் பயம் கொள்ள வேண்டியிருக்கலாம். நீங்கள் “நான் தெய்வீகமே” (அஹம் ப்ரஹ்மாஸ்மி) என்று கூறி உணர்ந்தால் நீங்கள் வெல்லப்பட முடியாத பலத்தைப் பெறுவீர்கள்.

– தெய்வீக உரை, ஜனவரி 14, 1964