Tag Archives: Sun

Sai Inspires (Tamil Translation): 2nd February 2013

You will all doubtlessly agree when I say that Divine Bliss is your greatest need. However, you cannot buy it from anywhere! It has to be earned the hard way, doing good deeds, moving in good company, desisting from evil and keeping the mind attached to the Glory of God. Good and bad cannot be kept together in the same place. The Sun once remarked that he had no enemies left and someone told him that there still was one – Darkness! Then, he sent his rays, the emissaries, to seek out the foe. But wherever they went, they only saw light and darkness was nowhere to be found. They returned and reported – there was no such thing as darkness upon the earth. So too, you must gain victory of good over bad within you by persisting vigorously in your spiritual practices.

– Divine Discourse, 20 February, 1964

உங்கள் மிக முக்கிய தேவை தெய்வீக ஆனந்தம் தான் என்று நான் சொன்னால் நீங்கள் சந்தேகமில்லாமல் அதனை ஒத்துக் கொள்வீர்கள். ஆயினும், நீங்கள் அதனை எங்கிருந்தும் வாங்க முடியாது! நற்செயல்கள் செய்வதன் மூலமும், நல்லோர் சேர்க்கையின் மூலமும், தீயவற்றைச் செய்யாமல் இருப்பதன் மூலமும், உங்கள் மனதை கடவுளின் மகிமையின் மேல் நிலைநிருத்துவதன் மூலமும், இவ்வாறாக கடுமையான உழைத்து தான் அதனை  சம்பாதிக்க முடியும். நல்லவற்றையும் தீயவற்றையும் ஒரே இடத்தில் சேர்த்து வைத்திருக்க முடியாது. சூரியன் ஒருமுறை தனக்கு எதிரிகளே இல்லை என்று கூறிய போது, எவரோ ஒருவர் கூறினார் ஒரு எதிரி இருக்கிறது – அது இருள்! பின், அவன் தன் தூதர்களான தன் ஒளிக்கதிர்களை, எதிரியைக் கண்டுபிடிப்பதற்காக அனுப்பினான். ஆனால், அவர்கள் செல்லுமிடமெல்லாம், ஒளியையே பார்த்தார்கள், இருள் எங்கும் காணப்படவில்லை. அவர்கள் திரும்பி வந்து, உலகின் இருள் என்ற ஒன்று கிடையவே கிடையாது என்று அறிவித்தனர். அதே போல, உங்கள் ஆன்மீகப் பயிற்சிகளை உறுதியாக, இடைவிடாது செய்து உங்களுள் உள்ள தீயவற்றை நல்லவற்றால் வெற்றி கொள்ள வேண்டும்.

– தெய்வீக உரை, 20 பிப்ரவரி, 1964

Sai Inspires (Tamil Translation): 17th January 2013

Desire makes one crave for sabdha (sounds), sparsha (touch), rupa (form), rasa (taste), gandha (smell) – the qualities of the five Elements that constitute the body. One is prompted by the element of Space present within to seek sweet sounds that satisfy the ear; by the element of Air within, to run after smooth and soft things that yield pleasure to the skin, by the element of Fire to pursue things that are beautiful and appealing to the eye; the Water element makes one crave for food and drink that are tasty to the tongue, and the element of Earth urges one to cater to the nose, by trying to enjoy pleasant smells. Just as the high temperatures from the Sun is controlled, modulated and reduced by the systems in your body to a congenial temperature of 98.4 degrees, you must keep the forces of your elemental passions in check and bring it down to tolerable levels, for congenial living.

– Divine Discourse, February 19, 1964

ஆசை இவ்வுடலை அமைக்கும் பஞ்ச பூதங்களின் தன்மைகளான சப்தம் (சத்தம்), ஸ்பர்ஷம் (தொடுதல்), ரூபம் (உருவம்), ரசம் (சுவை) மற்றும் கந்தம் (நறுமணம்) ஆகியவற்றிற்காக ஒருவரை ஏங்க வைக்கிறது. உள்ளே இருக்கும் பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயம் செவிக்கு இனிமையளிக்கும் இனிமையான சப்தங்களைக் கேட்கச் செய்கிறது; காற்று தோலுக்கு இனிமை தரும் மிருதுவான விஷயங்களை நாடச் செய்கிறது; நெருப்பு கண்களுக்கு இனிமையான அழகான விஷயங்களைக் காணச் செய்கிறது; நீர் நாவிற்கு இனிமை தரும் உணவு மற்றும் பானத்தை அருந்தச் செய்கிறது; நிலம் நாசிக்கு இனிமை தரும் இனிமையான நறுமணங்களை நுகரச் செய்கிறது. எவ்வாறு சூரியனிலிருந்து வரும் கடுமையான வெப்பம், உங்கள் உடலின் பாகங்களால் உடலிற்கு ஏற்றவாறு 98.4 டிகிரி  வெப்பத்தில் சீராக்கப்படுகிறதோ அவ்வாறே இந்தப் பஞ்ச பூதங்களின் விழைதல் கட்டுக்குள் வைக்கப்பட்டு, பொறுத்துக் கொள்ளும்படியாக நல்வாழ்கைக்கு ஏற்றவாறு வைத்துக் கொள்ளவும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 19, 1964

Sai Inspires (Tamil Translation): 30th December 2012

The lotus in your heart pines for the Sun, the splendour of the Loving Lord. To attain Him requires effort. Withdrawal of all attachment towards the world and cultivation of Divine Love alone can win it. God is the nearest and dearest entity, but ignorance hides Him away from the eye. The stars appear as dots of light, for they are at great distances from us. Just as the stars, God appears insignificant or ineffective to many, because they are keeping themselves too far away from Him. If some believe that God is not present or visible, it only means that they are at a too great a distance to be aware of Him. The love that God bears for each and every one is unequalled.

– Divine Discourse, Oct 17, 1966

உங்கள் இதயத்திலுள்ள தாமரை மலர், அன்புமிகு ஆண்டவனின் ப்ரகாசம் எனும் சூரியனுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. அவரை அடைவதற்கு முயற்சி தேவைப்படுகிறது. உலகின் மேலுள்ள அனைத்துப் பற்றுதல்களையும் விலக்கி, தெய்வீக அன்பை வளர்த்துக் கொண்டால் மட்டுமே நீங்கள் இதனை அடைய முடியும். கடவுள் மிக அருகாமையிலும், ப்ரியமானவராகவும் திகழ்கிறார். ஆனால் அறியாமை இதனை நம் கண்களிடமிருந்து மறைக்கின்றது. நம்மிடமிருந்து தொலைதூரத்தில் இருப்பதானால், நக்ஷத்திரங்கள் ஒளிரும் புள்ளிகளாக நமக்குத் தோன்றுகின்றன. நக்ஷத்திரங்களைப் போலவே பலருக்கு, அவர்கள் தம்மைக் கடவுளிடமிருந்து தொலைதூரத்தில் தள்ளி வைத்துக்கொண்டதனால், அவர் அற்பமாகவும் செயலற்றும் இருப்பதாகத் தோன்றுகிறார். சிலர் கடவுள் இல்லை அல்லது கண்ணுக்குப் புலன்படுவதில்லை என்று நம்பினால், அது அவர்கள் தம்மை அவரை அறியமுடியாத அளவிற்குத் மிகவும் தொலைவில் வைத்துக் கொண்டிருப்பது தான் காரணம். கடவுள் ஒவ்வொருவரின் மேலும் கொண்டுள்ள அன்பு ஒப்பில்லாததாகும்.

– தெய்வீக உரை, அக்டோபர் 17, 1966

Sai Inspires (Tamil Translation): 28th December 2012

The body is a house, given to you for rent. The owner is God. Live there, so long as He wills, thanking Him for it, and paying Him the rent of Faith and Devotion. A strong will is the best tonic you can intake; the will becomes strong when you know that you are a child of immortality or a person who has earned the Grace of the Lord. In the epic Mahabharatha, the Pandavas are wonderful shining examples of faith and devotion. They won the Grace of the Lord and successfully defeated every single one of the wily strategy of their foes. The reinforcement of Grace from the Lord is the most reliable means of support. When you win the Grace of Lord, dishonour, defeat and despair fade away like fog evaporates before the Sun. Even disease cannot touch you. Hence, I advise you to face life by strengthening your spiritual urges and invoking the Grace of the Lord.

– Divine Discourse, October 15, 1966

இவ்வுடல் உங்களுக்கு வாடகைக்கு அளிக்கப்பட்ட ஒரு வீடாகும். இறைவனே அதன் சொந்தக்காரர் ஆவார். அவர் விரும்பும் வரை, நன்றியுடன், நம்பிக்கை மற்றும் பக்தி ஆகிய வாடகையைச் செலுத்தி நீங்கள் அதனுள் வசிக்கலாம். திட சங்கல்பமே தலை சிறந்த சத்து மருந்து (டானிக்) ஆகும். நீங்கள் இறவாமையின் குழந்தைகள் என்பதனையும், கடவுளின் அருளிற்குப் பாத்திரமானவர்கள் என்பதனையும் உணர்ந்தால் அந்த சங்கல்பம் மேலும் உறுதியடையும். மஹாபாரதத்தில், பாண்டவர்கள் நம்பிக்கை மற்றும் பக்திக்கு அருமையான உதாரணங்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் கடவுளின் அருளைப் பெற்று, அவர்களுடைய பகைவர்களின் ஒவ்வொரு சூழ்ச்சியானத் தந்திரத்தையும் வெற்றிகரமாகத் தோற்கடித்தார்கள். வலிமைப்படுத்தும் கடவுளின் அருள் தான் மிகவும் நம்பகமான, ஆதரவளிக்கும் உறுதுணையாகும். எவ்வாறு சூரியனின் முன் மூடுபனி ஆவியாகிவிடுமோ, அவ்வாறு கடவுளின் அருளை நீங்கள் பெற்றால், அவமரியாதை, தோல்வி மற்றும் துயரம் ஆகியவை வலுவிழந்துவிடும். நோய் கூட உங்களைத் தீண்ட முடியாது. ஆகையால், உங்கள் ஆன்மீக நாட்டங்களை பலப்படுத்திக் கொண்டு, கடவுளின் அருளை வேண்டிப் பெற்று, வாழ்கையை எதிர்கொள்ளவேண்டும் என நான் உங்களுக்கு உபதேசிக்கிறேன்.

– தெய்வீக உரை, அக்டோபர் 15, 1966