Tag Archives: true relatives

16th February 2012

நிரந்தர தாய்கள் இந்த உலகில் யாரும் இல்லை. தெய்வத் தாய் மட்டுமே நிரந்தர தாய் ஆவார். நீங்கள் ஆன்மீகக் குடும்பத்தில் ஒரு பங்கு வகிக்கிறீர்கள் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். சத்யமே உங்கள் அன்னை, ஞானமே உங்கள் மகன், அமைதியே உங்கள் மகள், பக்தியே உங்கள் சகோதரன், யோகிகளே உங்கள் தோழர்கள். உண்மையான உறவினர்களான இவர்களே உங்களுடன் என்றென்றும் இருப்பார்கள். நீங்கள் இவ்வாறான உறவைக் கொண்டால், இப்படிப்பட்ட தோழமையைப் பேணினால், உலகத் தளைகளிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக இருக்கமுடியும். வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் தெய்வச் சிந்தனையுடன் இருங்கள். எங்கு இருள் இருக்கிறதோ, அங்கேதான் ஒளிக்கு மதிப்பு இருக்கும். எப்பொழுதெல்லாம் குழப்பமும் கஷ்டமும் உள்ளதோ, எப்பொழுதெல்லாம் பிரச்சனைகள் அதிகமாகின்றனவோ, அப்பொழுதெல்லாம் இறைத் தத்துவத்தை வெளிக் கொணருங்கள். அது இருள் சூழ்ந்த நேரங்களிலெல்லாம் நிச்சயமாக ஒளி அளித்து உங்களுக்கு சந்தோஷம் அளிக்கும்.

– தெய்வீக உரை (பிப்ரவரி 17, 1985)