Tag Archives: True Surrender

Sai Inspires (Tamil Translation): 20th February 2013

You must be convinced that ‘you’ are but the shadow of the Absolute. Of course, it is only at the end of a long and systematic process of Sadhana (spiritual efforts) that you will reach and stay fixed in the state of that Truth; until then, you are likely to identify yourself with this body and forget that the body which casts a shadow is itself a shadow. The first step in that Sadhana is the adherence to Dharma (righteousness) in every individual and social act. The Dharma which is followed in relation to the objective world will automatically lead on to Dharma in the spiritual field also; only you must stick to it through thick and thin. Steadfastness is needed in the path of Righteousness. That alone is the sign of true surrender.

– Divine Discourse, August 1, 1956

‘நீ’ பரம்பொருளின் நிழல் தான் என்பதில் உறுதி கொள்ள வேண்டும். நீண்ட, முறையான செயல்பாட்டின் முடிவில் மட்டுமே நீ அவ்வுண்மையின் நிலையை அடைந்து அதன் மேல் நிலை கொண்டிருக்க முடியும். அது வரை நீ உன்னை இந்த உடலுடன் அடையாளம் கண்டு கொண்டு, நிழலாடும் இவ்வுடலும் ஒரு நிழல் தான் என்பதை மறந்தும் இருக்கக் கூடும். ஒவ்வொரு தனிச் செயலிலும், சமுதாயம் சார்ந்த செயலிலும் தர்மத்தைக் கடைப்பிடிப்பது இந்த சாதனையில் முதல் படி ஆகும். இந்த பௌதிகமான உலகில் பின்பற்றப்படும் தர்மமானது முடிவில் ஆன்மீகக் காலத்திலும் தர்மத்தின் பால் இட்டுச் செல்லும்; நீ தான் எவ்விதக் கஷ்டம் வந்தாலும் அதனைப் பின்பற்ற வேண்டும். தர்மத்தின் பாதையில் உறுதி தேவைப்படுகிறது. அது மட்டுமே உண்மையான சரணாகதியின் அடையாளமாகும்.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 1, 1956

Sai Inspires (Tamil Translation): 24th October 2012

Many often believe and state in the spirit of surrender: “I offer to You my body, my mind, my possessions, my all.” This is incorrect and is a sign of ignorance. It concedes that you and God are distinct entities. God is not separate from you, for God is in all, everywhere, at all times. (Ishwarassarva-bhoothaanaam). How then can you or God be apart? To see God in everything, everywhere, at all times, is true surrender (Sharanaagathi). Repetition of mantras (holy formulae) and platform speeches on holy texts alone is not true devotion. The real devotee is one whose deeds are in accordance with the words of advice they utter. Devotion cannot tolerate in a devotee, the slightest trace of envy or jealousy. Make your daily life holy and pure. Render your life worth-while through service to man and service to society. That is the most important aspect of surrendering the self.

– Divine Discourse, October 8, 1981

“நான் உங்களுக்கு என் உடல், என் மனம் , என் அனைத்து சொத்துகள் மற்றும் என் அனைத்தையும் அர்ப்பணிக்கிறேன்” என்று பலர் நம்பி, சரணாகதி எனும் உணர்வின் அடிப்படையில் கூறுகிறார்கள். இது தவறு. மேலும் அறியாமையின் அடையாளம். அவ்வாறானால் நீங்களும் கடவுளும் வெவ்வேறு வஸ்துக்கள் என்று ஆகிறது. கடவுள் உங்களிடம் இருந்து வேறுபட்டவர் இல்லை, ஏனெனில் கடவுள் அனைத்திலும், அனைத்து இடங்களிலும், அனைத்து நேரங்களிலும் உள்ளார். (ஈஸ்வரஸ் ஸர்வ பூதாநாம்). அவ்வாறிருக்கையில், நீங்களும் கடவுளும் வெவ்வேறாக எப்படியிருக்க முடியும்? கடவுளை அனைத்திலும், எங்கும், எக்கணமும் காண்பதே உண்மையான சரணாகதி ஆகும். மந்திரங்களை ஜபிப்பது மற்றும் ஆன்மீக நூல்களைப் பற்றி மேடையில் உரையாற்றுவதும் மட்டுமே உண்மையான பக்தியல்ல. உண்மையான பக்தன் என்பவன் தன் உபதேசங்களின் படி செயல்கள் புரிபவனே. பக்தனுள் பகைமையும் பொறாமையும் சிறிதளவு இருந்தாலும் கூட உண்மையான பக்தியால் பொறுக்க முடியாது. உங்கள் தினசரி வாழ்க்கையைப் புனிதமாகவும் சுத்தமாகவும் ஆக்குங்கள். மனிதனுக்கு சேவை செய்வதன் மூலமும், சமுதாயத்திற்கு சேவை செய்வதன் மூலமும் உங்கள் வாழ்க்கையைப் பயனுடையதாக மாற்றுங்கள். அதுவே சரணடைவதில் மிகவும் முக்கியமான அம்சமாகும்.

– தெய்வீக உரை, அக்டோபர் 8, 1981