Tag Archives: Unseen Basis

Sai Inspires (Tamil Translation): 30th January 2013

You have come into the world to realise yourselves. You come fully equipped with all the instruments needed for that endeavour – viveka, vairaagya and vichakshana (discrimination, non-attachment and skill); and the urge to enlarge your love, enrich your emotions and ennoble your actions. But you have lost your way; you are caught in a morass and are confused by mirages and dreams which you take as real; you run after false colours and cheap substitutes. Remember that everything is subordinated to that supreme task. The body should be fed and kept free from disease. Why? So that it may be fit for spiritual discipline. Spiritual discipline for what? For the realisation of the truth about oneself. The subtle is the basis for the gross; the Divine is the basis for the Human.

– Divine Discourse, February 20, 1964

உங்களை உணர்ந்து கொள்வதற்காகவே நீங்கள் இவ்வுலகிற்கு வந்துள்ளீர்கள். இந்த பிரயத்தனத்திற்குத் தேவையான விவேகம், வைராக்கியம் மற்றும் விசக்ஷணம் (பகுத்தறிவு, பற்றின்மை மற்றும் திறன்) ஆகிய அனைத்து கருவிகளும் கொண்டு ஆயத்தமாக வந்துள்ளீர்கள்; உங்கள் அன்பை விரிவாக்கிக் கொள்ளவும், உங்கள் உந்துதல்களை வளமூட்டவும், உங்கள் செயல்களை மேம்படுத்திக் கொள்ளவும் வந்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் வழியை மறந்துவிட்டீர்கள்; சதுப்புநிலத்தில் மாட்டிக்கொண்டுள்ளீர்கள், கானல் நீர் தேக்கன்களைப் பார்த்தும் கனவுகளைக் கண்டும் குழப்பமடைந்து அவை உண்மை என ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்; நீங்கள் பொய்யான வர்ணங்கள் மற்றும் கீழ்த்தரமான போலிகளுக்குப் பின்னால் ஓடுகிறீர்கள். இவையனைத்தும் மிகவுயர்ந்த தெய்வீகச் செயளிற்குக் கீழானவை என்று நினைவு கொள்ளுங்கள். இவ்வுடல் போஷிக்கப்பட்டு, நோயிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். ஏன்? ஏனெனில் அது ஆன்மீகக் கட்டுப்பாட்டிற்குத் தக்கவாறு இருக்க வேண்டும். ஆன்மீகக் கட்டுப்பாடு எதற்கு? ஒருவருடைய உண்மையை உணர்ந்து கொள்வதற்காக. கண்ணுக்குப் புலப்படாததே கண்ணுக்குப் புலப்படுவதின் அடிப்படை ஆதாரம்; தெய்வீகமே மனிதனின் அடிப்படை ஆதாரம் ஆகும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 20, 1964

20th March 2012

Divinity is one, and is the real basis for the Universe. Like the string for a garland and the foundation for a multi-storey building, Divinity penetrates and holds together everything and everyone; it is the foundation for the structure of the Universe. Only the flowers and buildings are visible to your eyes, not the string and the structure. Unless you invest time and effort to reason it out, they escape your attention. That does not mean they are non-existent! Never be misled by the aadheya (the contained, the thing held) into denying the Aadhaar (the basis, the container). For the Seen, there is an Unseen Basis. To grasp the Unseen, the best means is inquiry, and the right proof is experience. For those who have experienced, no description is needed.

– Geetha Vahini, Chapter 12

தெய்வீகம் ஒன்றே. அது தான் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஆதாரம். பூமாலைக்கு நாரினைப் போல், பன்னடுக்கு மாளிகையின் அஸ்திவாரம் போல், தெய்வீகம் ஊடுருவி, அனைத்தையும் அனைவரையும் சேர்த்துவைத்துக் கொள்கிறது. இந்த பிரபஞ்சத்தின் கட்டமைப்புக்கு அஸ்திவாரமாக விளங்குகிறது. உங்கள் கண்களுக்கு பூக்களும், மாளிகைக்களும் தான் புலப்படுகின்றன, நாரும், கட்டமைப்பும் அல்ல. நீங்கள் நேரம் செலவழித்து, அதனைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தாலொழிய, அவை உங்கள் கவனத்திலிருந்து தப்பிவிடும். அதனால் அவை இல்லை என்று அர்த்தம் இல்லை. ஆதேயத்தினால் (கொள்ளப்பட்டிருக்கும் வஸ்து) ஆதாரம் (கொண்டிருக்கும் வஸ்து) இல்லை எனத் தவறிவிடாதீர்கள். பார்க்கப்படுபவற்றிற்கு, பார்க்கப்படாத ஆதாரம் ஒன்று உள்ளது. பார்க்கப்படாத்தை அறிந்துகொள்ள, விசாரணை தான் சரியான வழி, அனுபவம் தான் சரியான நிரூபணம். அனுபவித்தவர்களுக்கு, எந்த வர்ணனையும் தேவையில்லை.

– கீதா வாஹினி, அத்தியாயம் 12