Tag Archives: vairagya

Sai Inspires (Tamil Translation): 30th January 2013

You have come into the world to realise yourselves. You come fully equipped with all the instruments needed for that endeavour – viveka, vairaagya and vichakshana (discrimination, non-attachment and skill); and the urge to enlarge your love, enrich your emotions and ennoble your actions. But you have lost your way; you are caught in a morass and are confused by mirages and dreams which you take as real; you run after false colours and cheap substitutes. Remember that everything is subordinated to that supreme task. The body should be fed and kept free from disease. Why? So that it may be fit for spiritual discipline. Spiritual discipline for what? For the realisation of the truth about oneself. The subtle is the basis for the gross; the Divine is the basis for the Human.

– Divine Discourse, February 20, 1964

உங்களை உணர்ந்து கொள்வதற்காகவே நீங்கள் இவ்வுலகிற்கு வந்துள்ளீர்கள். இந்த பிரயத்தனத்திற்குத் தேவையான விவேகம், வைராக்கியம் மற்றும் விசக்ஷணம் (பகுத்தறிவு, பற்றின்மை மற்றும் திறன்) ஆகிய அனைத்து கருவிகளும் கொண்டு ஆயத்தமாக வந்துள்ளீர்கள்; உங்கள் அன்பை விரிவாக்கிக் கொள்ளவும், உங்கள் உந்துதல்களை வளமூட்டவும், உங்கள் செயல்களை மேம்படுத்திக் கொள்ளவும் வந்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் வழியை மறந்துவிட்டீர்கள்; சதுப்புநிலத்தில் மாட்டிக்கொண்டுள்ளீர்கள், கானல் நீர் தேக்கன்களைப் பார்த்தும் கனவுகளைக் கண்டும் குழப்பமடைந்து அவை உண்மை என ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்; நீங்கள் பொய்யான வர்ணங்கள் மற்றும் கீழ்த்தரமான போலிகளுக்குப் பின்னால் ஓடுகிறீர்கள். இவையனைத்தும் மிகவுயர்ந்த தெய்வீகச் செயளிற்குக் கீழானவை என்று நினைவு கொள்ளுங்கள். இவ்வுடல் போஷிக்கப்பட்டு, நோயிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். ஏன்? ஏனெனில் அது ஆன்மீகக் கட்டுப்பாட்டிற்குத் தக்கவாறு இருக்க வேண்டும். ஆன்மீகக் கட்டுப்பாடு எதற்கு? ஒருவருடைய உண்மையை உணர்ந்து கொள்வதற்காக. கண்ணுக்குப் புலப்படாததே கண்ணுக்குப் புலப்படுவதின் அடிப்படை ஆதாரம்; தெய்வீகமே மனிதனின் அடிப்படை ஆதாரம் ஆகும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 20, 1964

Sai Inspires (Tamil Translation): 12th November 2012

If you want to light a lamp, you need four things – a container, oil, a wick and a match box. If any one of these is lacking, you cannot light the lamp. Similarly, to light the lamp of spiritual wisdom in your heart, you need – the container of detachment, wick of one-pointed concentration, matchstick of wisdom and the oil of devotion. Of these, the spirit of detachment (vairagya) is crucial. Detachment means absence of body attachment. The sense of possessiveness (mamakara) and the ego-feeling are the causes of this raga (disease). Eradicate this disease of attachment through the process of self-enquiry. When you realise the impermanence of the body and all the sensory experiences, you will naturally acquire detachment (vairagya). Discharge all your duties as an offering to God and treat your body solely as a God-given instrument for the purpose of serving others.

– Divine Discourse, 9 November 1988

நீங்கள் ஒரு விளக்கை ஏற்ற விரும்பினால் உங்களுக்கு நான்கு பொருட்கள் தேவைப்படுகின்றன – ஒரு கொள்கலன் (அகல்), எண்ணெய், ஒரு திரி மற்றும் ஒரு தீப்பெட்டி. இவற்றில் ஏதாவதொன்று இல்லையெனினும் உங்களால் விளக்கை ஏற்ற இயலாது. அது போல, ஆன்மீக ஞானம் எனும் விளக்கை உங்கள் இதயத்தில் ஏற்றுவதற்கு, பற்றின்மை எனும் கொள்கலனும், ஒருமுகச் சிந்தனை எனும் திரியும், ஞானம் எனும் தீக்குச்சியும், பக்தி எனும் எண்ணெய்யும் உங்களுக்குத் தேவைப்படுகின்றன. இவற்றில், பற்றின்மை எனும் உணர்வு (வைராக்கியம்) மிகவும் அத்தியாவசியமானதாகும். பற்றின்மை என்றால் உடல் மேல் பற்று கொள்ளாமல் இருப்பது என்று பொருள். மமகாரம் மற்றும் அஹங்காரம் தான் இராகம் எனப்படும் நோய்க்குக் காரணமாகின்றன.சுய விசாரணை மூலம் இந்த நோயினைப் போக்குங்கள். இவ்வுடல் மற்றும் அனைத்துப் புலன் சார்ந்த அனுபவங்கள் ஆகியவற்றின் நிலையற்ற தன்மையை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் இயல்பாகவே பற்றின்மை (வைராக்கியம்) பெறுவீர்கள். உங்கள் அனைத்துக் கடமைகளையும் கடவுளுக்கு அர்ப்பணிப்பாகச் செய்து, பிறருக்குச் சேவை செய்யும் பொருட்டு, ஒரு கருவியாக உங்கள் உடலைக் கடவுள் அளித்துள்ளார் என்று கருதுங்கள்.

– தெய்வீக உரை, 9 நவம்பர் 1988

14th March 2012

கீதையில் அர்ஜுனன் கிருஷ்ணனிடம், “மனம் என்ன எளிதாகக் கட்டுப்படும்படி உள்ளதா? மனதைப் போன்று ஒரு யானையால் கூட மனிதனை கட்டி இழுக்க முடியாது. அது தான்தோன்றித்தனத்தின் நாற்றங்காலாக உள்ளது. அதனின் பணிவின்மை, உறுதி மற்றும் பிடிவாதம் மிகுந்த வலிமையானவை. மனம் எந்த ஒரு இடத்திலும் தங்காது. மனதைக் கட்டுப்படுத்துவது காற்றைப் பிடிப்பது போன்றும், நீரைக் கட்டிவைப்பது போன்றும் இருக்கிறது. எவ்வாறு ஒருவரால் மனதைக் கட்டுப்படுத்த முடியும்? எவ்வாறு ஒருவரால் அப்படிப்பட்ட மனத்தைக் கொண்டு ஆன்மீக சாதனைகள் செய்ய முடியும்?” என்று வினவினான். இதனைக் கேட்டு கிருஷ்ணர் நகைத்துக் கொண்டே, “அர்ஜுனா! நீ மனதை நன்றாக வர்ணித்துள்ளாய். அதன் இயல்பை நன்கு அறிந்துள்ளாய். ஆனால் அது முடியாத செயல் அல்ல. மனதை எளிதாகக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். முறையான பயிற்சி (அப்யாஸம்), விடாத விசாரணை (விசாரம்) மற்றும் பற்றில்லாமை (வைராக்கியம்) ஆகியவற்றின் மூலம் மனதை நிச்சயமாக வெற்றி கொள்ள முடியும். சீரான பயிற்சியின் மூலம் எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருக்க முடியாது. கடவுளின் மேல் நம்பிக்கை கொண்டு, உன்னிடத்தில் சக்தியும், அருளும் இருக்கிறது என்ற திட உறுதியோடு பயிற்சி செய்தால் அனைத்து செயல்களும் எளிதாகிவிடும்”, என்றார்.

– கீதா வாஹினி, அத்தியாயம் 11