Tag Archives: Water

Sai Inspires (Tamil Translation): 22nd February 2013

The greatest obstacle in the path of surrender is egoism (ahamkaram) and Attachment or Possessiveness (mamakaram). This is ingrained in your personality since ages and its tentacles go deeper and deeper with the experience of every succeeding life. It can be removed only by the twin detergents of discrimination and renunciation. Devotion is the water to wash away this dirt of ages, and the soap of japam, dhyaanam and yoga (repetition of God’s name, meditation and communion) will help to remove it quicker and more effectively. Slow and steady progress will surely win the race in this one; quicker means of travel can spell disaster. Proceed step by step in your spiritual practices – placing one steady step before you take the next. Do not waver or slide back two paces with one step forward. Cultivate deep faith – that will make your progress steady!

– Divine Discourse, August 1, 1956

சரணாகதியின் பாதையில் அஹங்காரமும் மமகாரமும் மிகப் பெரிய தடைகளாகும். காலம் காலமாக இது உங்களில் ஆழப்பதிந்துள்ளது. அவற்றின் பற்றிழைகள் ஒவ்வொரு வெற்றியான வாழ்க்கையின் அனுபவத்தின் மூலமும் மேலும் ஆழமாகச் செல்கின்றன. பகுத்தறிவு மற்றும் துறவு ஆகிய இரண்டு சலவைத் தூள்களால் கொண்டு மட்டுமே இதனை நீக்க முடியும். இந்த காலாந்திர அழுக்கை நீக்குவதற்கு பக்தி தான் தண்ணீர், ஜபம், தியானம் மற்றும் யோகம் ஆகியவை சோப்புகள் அதனை சீக்கிரமாகவும், நன்றாகவும் நீக்குவதற்குப் பயன்படும். மெதுவாகவும், நிதானமாகவும் முன்னேறுவது இந்த ஓட்டப்பந்தயத்தில் வெற்றியை ஈட்டுத் தரும். சீக்கிரமாகப் பயணித்தால் பேராபத்தில் முடியலாம். உங்கள் ஆன்மீக சாதனைகளில் ஒவ்வொரு அடியாக முன்னேறுங்கள் – நீங்கள் ஒரு அடியையும் நிதானமாக எடுத்து வையுங்கள். ஒரு அடி முன்னே எடுத்து வைத்து இரண்டடிகள் பின்னே எடுத்து வைக்காதீர்கள். ஆழ்ந்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் – அது உங்கள் முன்னேற்றத்தை நிதானமாக்கும்!

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 1, 1956

Sai Inspires (Tamil Translation): 19th February 2013

Wavering and indecisiveness will affect you, if you want to practice Righteousness. If you are not stabilized in the Knowledge of the Self, you will not have a good sense of direction for your actions, nor will you achieve true victory. That is why the Geetha lays so much emphasis on the necessity to know both the kshethra (field or the body) and the kshethrajna (the Knower in the body). Know both, and then, you are entitled to the title, Amrithasya Puthraah: “Children of Immortality.” Through devotion to God alone, this knowledge can be attained. Devotion also purifies your heart and elevates your inner feelings and gives you a broad, universal vision and brings to you the Grace of God. Plants cannot rise up to drink the life giving fluid from clouds, hence the clouds come down and pour as rain.

– Divine Discourse, February 25, 1964

தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், சலனமும் உறுதியின்மையும் உங்களை பாதிக்கும். உங்களைப் பற்றிய ஞானத்தில் நீங்கள் நிலைகொள்ளாமல் இருந்தால், உங்கள் செயல்கள் ஒரு நல்ல போக்கில் செல்லாது. உங்களுக்கு வெற்றியும் கிட்டாது. அதனால் தான் கீதை, க்ஷேத்ரம் (களம் அல்லது உடல்) மற்றும் க்ஷேத்ரஞன் (உடலின் உள்ளே இருக்கும் அறிபவர்) ஆகிய இரண்டையும் அறிவதற்கானத் தேவையை வலியுறுத்துகிறது. இரண்டையும் அறியுங்கள். அறிந்தால் தான் நீங்கள் அம்ருதஸ்ய புத்ரா: “அமரத்துவத்தின் குழந்தைகள்” என்ற பட்டத்தை ஏற்கத் தக்கத் தகுதியைப் பெறுவீர்கள். கடவுள் மேலுள்ள பக்தியின் மூலம் மட்டுமே, இந்த ஞானம் பெறப்படும். உங்கள் இதயத்தைத் தூய்மைபடுத்தி, உங்கள் உட்சிந்தனைகளை உயர்த்தி, அகன்ற, பிரபஞ்சம் தழுவிய பார்வையை உங்களுக்கு அளித்து, உங்களுக்குக் கடவுளின் அருளைத் தரவழைக்கிறது. மேகங்களில் உள்ள உயிரூட்டும் திரவத்தை குடிப்பதற்காகச் செடிகளால் உயர எழும்ப முடியாதென்பதால், மேகங்கள் கீழிறங்கி மழையாகப் பொழிகின்றன.

– தெய்வீக உரை, பிப்ரவரி 25, 1964

Sai Inspires (Tamil Translation): 14th January 2013

Spend your time in the contemplation of the bounty and beauty of Nature spread out before you on earth and sky – green expanses of the crops, cool breezes that waft contentment and joy, the panorama of coloured clouds, the music of the birds and so on. Sing the glory of the Lord as you walk along the path, amidst the fields, the banks and the waterways. Do not talk hatefully in the midst of all this evidence of love; do not get angry, in these placid surroundings; do not disturb the sky with your shouts and curses. Do not pollute the air with vengeful boasts. A seedling needs water and manure to grow and yield rich harvest. The tiny sapling of spiritual yearning for liberation also needs you to do these – set right your habits, purify your conduct and cleanse your behaviour.

– Divine Discourse, September 2, 1958

பூமியின் மேலும், ஆகாயத்திலும் படர்ந்துள்ள இயற்கையின் செழிப்பு மற்றும் அழகினை, வயல்வெளியின் பசுமையையும், திருப்தியும் மகிழ்ச்சியும் அளிக்கும் குளிர்காற்றினையும், பல வர்ண மேகங்களின் பரந்த தோற்றத்தையும், பறவைகளின் இசையையும் இரசிப்பதற்கு உங்கள் நேரத்தைச் செலவு செய்யுங்கள். வயல்களின் மத்தியிலும், ஆற்றங்கரைகளிலும், நீர் நிலைகளின் மேல் பயணிக்கும் போதும் கடவுளின் புகழைப் பாடுங்கள். அன்பின் சாட்சியாக விளங்கும் இவ்வனைத்தின் மத்தியின் வெறுப்பு வளர்க்கும் விதமாக,ப் பேசாதீர்கள்; இந்த அமைதியான சூழல்களில் கோபப்படாதீர்கள்; உங்கள் கூச்சல்களிலும், கத்தல்களிலும் ஆகாயத்தைத் தொந்தரவு செய்யாதீர்கள். உங்கள் அஹங்கார பேச்சுகளினால் காற்றைத் தூய்மைப்படுத்தாதீர்கள். இளம் செடி நன்றாக வளர்ந்து, நல்ல விளைச்சல் அளிக்க வேண்டுமானால் அதற்கு தண்ணீரும், உரமும் தேவைப்படுகிறது. இதைப் போல மோக்ஷத்தை அடைவதற்கு ஆழ்ந்த ஆன்மீக ஆர்வம் கொண்ட இளம் செடிக்கு இவை தேவை – உங்கள் பழக்கவழக்கங்களை செம்மைப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் ஒழுக்கத்தைத் புனிதப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் நடத்தையையத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 2, 1958

Sai Inspires (Tamil Translation): 12th December 2012

You can feel the presence of God, in the depth of silence. In the excitement, clutter and confusion of the marketplace, you cannot hear His gentle footsteps. He resounds with clarity, when all is filled with silence. Hence I insist on silence, practice of soft speech and minimum sound. Talk little, talk in whispers, sweet and true. When you want to place a heavy thing on the ground, place it with care, do not drop it and create noise around you. Bend a little, keep it softly and gently on the floor with care. Similarly examine each and every act of yours and see to it that you execute it softly and silently. Transact all dealings with minimum speech and eliminate noise. Do not shout to persons standing far, go near them or beckon them to approach you. Loud noise is a sacrilege on the sky, just as there are sacrilegious uses of earth and water.

– Divine Discourse, October 15, 1966

அமைதியின் ஆழத்தில் நீங்கள் கடவுள் இருப்பதை உணரலாம். கடைத்தெருவின் பரபரப்பிலும், கூச்சல் குழப்பங்களிலும் அவரது மெல்லிய காலடிகளை நீங்கள் கேட்க முடியாது. அனைத்தும் அமைதியில் நிறைந்திருக்கும் பொழுது அவர் குரல் தெளிவாக ஒலிக்கும். மிதமாகவும், மெதுவாகவும், இனிமையாகவும், உண்மையையும் பேசுங்கள். தரையில் பளுவான எதையும் வைக்க வேண்டி இருந்தால் அதனைக் கவனமாக, கீழே போட்டுவிடாமல், உங்களைச் சுற்றி சத்தம் ஏற்படாதவாறு செய்யுங்கள். சிறிதளவு குனிந்து, அதனை மெதுவாக கவனத்துடன் தரையில் வையுங்கள். அதே வகையில், உங்கள் ஒவ்வொரு செயலையும் மெதுவாகவும் அமைதியாகவும் நடத்துங்கள். அனைத்து செயல்களையும் குறைவான பேச்சுடனும், சத்தமில்லாமலும் செய்யுங்கள். தொலைவில் உள்ளவர்களைப் பார்த்துக் கத்திப் பேசாதீர்கள். நீங்கள் அவர்கள் அருகில் செல்லுங்கள் அல்லது அவர்களை உங்களித்தில் அழையுங்கள். எவ்வாறு நிலத்திற்கும் நீருக்கும் கேடு விளைவிக்கும் செயல்கள் உள்ளனவோ அவ்வாறே உரத்த சத்தம் ஆகாயத்திற்குக் கேடு விளைவிக்கும் செயலாகும்.

– தெய்வீக உரை, அக்டோபர் 15, 1966

Sai Inspires (Tamil Translation): 20th October 2012

All water is not potable. The stagnant pool is to be avoided, the flowing river is better. Select safe and pure water to drink. Use the mosquito net, but see that mosquitoes do not enter into the net, when you go to bed. Keep the mosquitoes away; do not imprison them inside the net. Sail in the boat that floats on water, but do not allow the water to enter the boat. So too, be in worldly life, but do not allow it to get into you. The lotus born in slime and mud rises up through water and lifts its head high above the water. It refuses to get wet though water is the element which gives it life. Be like the lotus.

– Divine Discourse, January 1, 1964

அனைத்து நீரும் குடிநீர் அல்ல. தேங்கி நிற்கும் குட்டை ஒதுக்கப்பட வேண்டும், ஓடும் ஆறு தான் மேலானது. பாதுகாப்பான, சுத்தப்படுத்தப்பட்ட நீரையே குடிப்பதற்குத் தேர்ந்தெடுங்கள். கொசுவலையை பயன்படுத்துங்கள். ஆனால் படுப்பதற்கு அதனுள் செல்லும் பொழுது அதனுள் கொசுக்கள் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொசுக்களை அண்டையில் விடாதீர்கள். அவற்றை வலைக்குள் சிறைப்படுத்தாதீர்கள். நீரின் மேல் மிதக்கும் படகில் சவாரி செய்யுங்கள். ஆனால் படகினுள் நீர் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல, உலக வாழ்க்கையில் இருங்கள் ஆனால் அதனை உங்களுள் நுழைய அனுமதிக்காதீர்கள். சகதியிலும் மண்ணிலும் தோன்றிய தாமரை மலர், நீரின் வழியாக வெளி வந்து, அதன் தலையை நீரின் மட்டத்திலிருந்து வெகு உயரத்திற்குக் கொண்டு வருகிறது. நீர் எனும் பொருள் அதற்கு வாழ்வளித்தாலும் அது தன்னை நனைப்பதற்கு அனுமதிப்பதில்லை. தாமரை மலர் போல் இருங்கள்.

– தெய்வீக உரை, ஜனவரி 1, 1964

Sai Inspires (Tamil Translation): 13th September 2012

The Bhagavad Gita recommends that you bring any of these – leaf, flower, fruit or water (pathram, pushpam, phalam and thoyam) when you come to the Lord; that when going to the presence of elders and saints, one should not go empty handed. But the Lord does not want any of these. When you demand a thing, you must be prepared to pay a price, equal to its value. If you are seeking the Divine, offer something divine. Love, Peace, Righteousness and Truth are Divine. Bring Me these or any one of these and I shall most gladly accept the gift. Do not offer the Lord mere flowers that fade, fruits that rot, leaves that dry or water that evaporates.

– Divine Discourse, September 30, 1965

கடவுளிடம் வருகையில் இலையோ, மலரோ, பழமோ அல்லது நீரோ (பத்ரம், புஷ்பம், பலம், தோயம்) கொண்டு வருமாறு  பகவத் கீதை பரிந்துரைக்கிறது. பெரியோர்கள் மற்றும் முனிவர்களிடம் செல்கையில் ஒருவர் வெறுங்கையுடன் செல்லக் கூடாது என்றும் உரைக்கிறது. ஆனால், ஆண்டவன் இவற்றை விரும்புவதில்லை. நீங்கள் ஒரு பொருளைப் பெற விழையும்பொழுது, அதற்கு நிகரான விலையைச் செலுத்தத் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் தெய்வீகத்தை நாடினால், தெய்வீகமான ஏதோவொன்றை காணிக்கையாக்குங்கள். பிரேமை, சாந்தி, தர்மம் மற்றும் சத்யம் ஆகியவை தெயவீகமானவை. இவையனைத்தையுமோ அல்லது இவற்றில் ஏதாவதொன்றோ என்னிடத்தில் எடுத்து வாருங்கள். நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த அன்பளிப்பை ஏற்றுக்கொள்வேன். கடவுளுக்கு வாடிவிடும் மலர்கள், அழுகிவிடும் பழங்கள், காய்ந்துவிடும் இலைகள் அல்லது ஆவியைப் போகும் நீர் ஆகிவற்றை மட்டுமே கடவுளுக்குக் காணிக்கையாக்காதீர்கள்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 30, 1965