Tag Archives: wisdom

Sai Inspires (Tamil Translation): 25th September 2013

Bhagavan Sri Sathya Sai Baba

We must have the awareness of the relative value of things; the discrimination between the real and relatively real. The gifts of reason and conscience must not be wasted through neglect. Your story should not be a repetition of that of the woodcutter, who was given a huge sandalwood forest as a reward, but, who out of sheer ignorance of the value of the trees, burnt the trees and sold them as charcoal at so much per bag! You ignore the Divinity that you really are and waste the opportunity to unfold it. Ignorance (ajnana) is imported from outside; what is native to you, what is within is wisdom (Jnana).

– Divine Discourse, October 14, 1964

பொருட்களின், பிற பொருட்களுடனான ஒப்பீடு பற்றிய விழிப்புணர்வு, அதாவது நிலையானவற்றிற்கும் நிலையில்லாதவற்றிற்கும் இடையேயான பகுத்தறிவு நமக்குத் தேவை. பகுத்தறிவு மற்றும் மனசாட்சி ஆகிய ஆற்றல்கள் உதாசீனத்தினால் வீனாக்கப்படக் கூடாது. ஒரு மாபெரும் சந்தனக் காட்டினை பரிசாகப் பெற்ற ஒரு விறகு வெட்டி, எவ்வாறு தன் அறியாமையால், அம்மரங்களின் மதிப்பை உணராமல், அவையனைத்தையும் எரித்து, கரியாக்கி, ஒவ்வொரு மூட்டைக்கும் விலை பேசினானோ, அவ்வாறு உங்கள் கதையும் இருந்து விடக் கூடாது! உங்கள் உண்மை இயல்பான தெய்வீகத்தை மறந்து, அதனை வெளிப்படுத்தாமல் வீணாக்குகிறீர்கள். அஞ்ஞானம் வெளியிலிருந்து உள்ளேற்றப்படுகிறது. உங்கள் உண்மை நிலையான ஞானம் உங்களுள் உள்ளது.

– தெய்வீக உரை, அக்டோபர் 14, 1964

Sai Inspires (Tamil Translation): 30th November 2012

https://i0.wp.com/media.radiosai.org/sai_inspires/2012/uploadimages/SI_20121130.jpg

When the seven colours of the spectrum come together, the effect is ‘no colour’; when they stand apart, the seven colours can be separately identified. The betel nut is brown, betel leaf is green and the chunnam (slaked lime) is white, but when you chew these three together, your tongue becomes red. When the three blades of a ceiling fan revolve fast enough and no blade is separately noticeable, they give cool comfort. So too only when the different qualities of Sathwa, Rajas and Thamas are unrecognisably integrated, one can be happy. When the three gunas are equated in saadhana (spiritual practice), the result is peace. The lamp is the sathwa guna, the wick is the thamo guna and the oil is the rajo guna. When all the three are integrated, they give the light of wisdom, which illumines.

– Sathya Sai Speaks, Volume VI, Chapter 27

நிறமாலையின் ஏழு வர்ணங்களும் ஒன்றாகக் கூடினால், வர்ணமே இல்லாமல் போகிறது. ஆனால், அவை தனித் தனியாக இருந்தால், ஏழு வர்ணங்களையும் தனித் தனியாகக் காணலாம். பாக்கு பழுப்பு நிறத்திலும் (ப்ரௌன்), வெற்றிலை பச்சை நிறத்திலும், சுண்ணாம்பு வெள்ளை நிறத்திலும் உள்ளன. ஆனால் இம்மூன்றையும் நீங்கள் ஒன்றாகச் சேர்த்து மென்றால், உங்கள் நாக்கு சிவப்பாகிவிடும். மின்விசிறியின் மூன்றுத் தகடுகளும் சேர்ந்து ஒரு தகடு கூடத் தனியாகத் தெரியாதவாறு வேகமாகச் சுற்றினால், அது குளுமையான சுகத்தை அளிக்கும். அதே போல, சத்வ, ரஜோ, தமோ குணங்கள்  தனித் தனியாகப் புலப்படாதவாறு ஒன்று சேர்க்கப்பட்டால், ஒருவர் சந்தோஷமாக இருக்கலாம். இம்மூன்று குணங்களும் ஆன்மீக சாதனையில் ஒன்று சேர்க்கப்பட்டால், அமைதி கிட்டும். விளக்கு சத்வ குணமாகும், திரி தமோ குணமாகும், எண்ணெய் ரஜோ குணமாகும். இம்மூன்றும் ஒன்று சேர்க்கப்பட்டால், ஒளிர்விக்கும் ஞான ஒளியை அவை அளிக்கும்.

– சாயி அருளமுதம், பாகம் 6, அத்தியாயம் 27

Sai Inspires (Tamil Translation): 12th November 2012

If you want to light a lamp, you need four things – a container, oil, a wick and a match box. If any one of these is lacking, you cannot light the lamp. Similarly, to light the lamp of spiritual wisdom in your heart, you need – the container of detachment, wick of one-pointed concentration, matchstick of wisdom and the oil of devotion. Of these, the spirit of detachment (vairagya) is crucial. Detachment means absence of body attachment. The sense of possessiveness (mamakara) and the ego-feeling are the causes of this raga (disease). Eradicate this disease of attachment through the process of self-enquiry. When you realise the impermanence of the body and all the sensory experiences, you will naturally acquire detachment (vairagya). Discharge all your duties as an offering to God and treat your body solely as a God-given instrument for the purpose of serving others.

– Divine Discourse, 9 November 1988

நீங்கள் ஒரு விளக்கை ஏற்ற விரும்பினால் உங்களுக்கு நான்கு பொருட்கள் தேவைப்படுகின்றன – ஒரு கொள்கலன் (அகல்), எண்ணெய், ஒரு திரி மற்றும் ஒரு தீப்பெட்டி. இவற்றில் ஏதாவதொன்று இல்லையெனினும் உங்களால் விளக்கை ஏற்ற இயலாது. அது போல, ஆன்மீக ஞானம் எனும் விளக்கை உங்கள் இதயத்தில் ஏற்றுவதற்கு, பற்றின்மை எனும் கொள்கலனும், ஒருமுகச் சிந்தனை எனும் திரியும், ஞானம் எனும் தீக்குச்சியும், பக்தி எனும் எண்ணெய்யும் உங்களுக்குத் தேவைப்படுகின்றன. இவற்றில், பற்றின்மை எனும் உணர்வு (வைராக்கியம்) மிகவும் அத்தியாவசியமானதாகும். பற்றின்மை என்றால் உடல் மேல் பற்று கொள்ளாமல் இருப்பது என்று பொருள். மமகாரம் மற்றும் அஹங்காரம் தான் இராகம் எனப்படும் நோய்க்குக் காரணமாகின்றன.சுய விசாரணை மூலம் இந்த நோயினைப் போக்குங்கள். இவ்வுடல் மற்றும் அனைத்துப் புலன் சார்ந்த அனுபவங்கள் ஆகியவற்றின் நிலையற்ற தன்மையை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் இயல்பாகவே பற்றின்மை (வைராக்கியம்) பெறுவீர்கள். உங்கள் அனைத்துக் கடமைகளையும் கடவுளுக்கு அர்ப்பணிப்பாகச் செய்து, பிறருக்குச் சேவை செய்யும் பொருட்டு, ஒரு கருவியாக உங்கள் உடலைக் கடவுள் அளித்துள்ளார் என்று கருதுங்கள்.

– தெய்வீக உரை, 9 நவம்பர் 1988

Sai Inspires (Tamil Translation

For food to taste good, you need to add salt to it. But only when you place a morsel of the food on your tongue you get to know if it has enough salt in it or not. So too only when you have moved about in the world and participated in its activities abiding by a moral code, you discover that, without the salt of jnana (wisdom), it does not taste good; if you take it with a pinch of this salt – the knowledge that you are not the body but the Indweller; that you are but the witness of the ever-changing panorama of Nature – then you will be happy and peaceful.

– Divine Discourse, April 19, 1965

உணவு ருசியாக இருப்பதற்கு நீங்கள் அதனில் உப்பைச் சேர்க்க வேண்டும். ஆனால் ஒரு கவளம் உணவை உங்கள் நாவின் மேல் வைத்தால் தான் போதுமான அளவு உப்பு உள்ளதா இல்லையா என்று உங்களுக்குப் புலப்படும். அது போல, நீங்கள் உலகில் வாழ்ந்து, நெறிமுறைப்படி அவற்றின் செயல்களில் ஈடுபட்டால், ஞானம் எனும் உப்பு இல்லையென்றால், அது ருசிக்காது என்று கண்டுகொள்வீர்கள்; நீங்கள் இந்த தேகமல்ல, அதனுள் உறைபவர், என்றும் மாற்றமடைந்து கொண்டிருக்கும் இயற்கைக்கு ஒரு சாட்சியே என்கிற ஞானம் எனும் உப்புடன் இதனை எடுத்துக் கொண்டால் நீங்கள் ஆனந்தமாகவும் அமைதியாகவும் இருப்பீர்கள்.

– தெய்வீக உரை, ஏப்ரல் 19, 1965

Sai Inspires (Tamil Translation): 26th April 2012

The goal of every life is knowing the Supreme, that is, attaining liberation; there can be no second aim. You are endowed with life, not for the purpose of building bungalows, acquisition of estates, accumulation of wealth, addition of progeny, earning of titles or ascent into higher rungs of social life. One’s greatness does not depend on these. The sweetest success in life lies in the winning of permanent bliss and perennial escape from grief and agitation. You are children of immortality. The heritage of immortality must be recognised and experienced; it must be won back. The bonds of name and form are temporary and must be removed. They are not genuine natural characteristics of the individual soul. Escape from grief and joy for a brief period of time is not a sign of real liberation. Real wisdom consists in recognising that you are pure bliss; bliss that persists from the past into the present and the future.

– Geetha Vahini, Chapter 14

ஒவ்வொரு வாழ்க்கையின் நோக்கம் கடவுளை அறிதலே, அதாவது மோக்ஷம் அடைதலே ஆகும், வேறொரு இரண்டாம் நோக்கம் இருக்க முடியாது. மாளிகைகள் கட்டுவதற்கோ, எஸ்டேட்களை வாங்குவதற்கோ, செல்வம் சேர்ப்பதற்கோ, குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கோ, பட்டங்கள் சம்பாதிப்பதற்கோ அல்லது சமூகத்தின் உயர்ப் படிகளுக்கு ஏறுவதற்கோ உங்களுக்கு இந்த வாழ்க்கை கொடுக்கப்படவில்லை. ஒருவரின் பெருமை இவற்றைச் சார்ந்தில்லை. வாழ்க்கையின் இனிமையான வெற்றி நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற்று, துன்பம் மற்றும் கலக்கத்திலிருந்து நிரந்தரமாக தப்பிப்பதே ஆகும். நீங்கள் அமரத்துவத்தின் குழந்தைகள். அமரத்துவத்தின் பாரம்பரியத்தை ஏற்று அனுபவிக்க வேண்டும். அதனை மீண்டும் பெற்றாக வேண்டும். பெயர் மற்றும் உருவத்தின் மேலுள்ள பற்றுதல்கள் நிரந்தரமற்றவை. அவை களையப்பட வேண்டும். ஜீவாத்மாவின் உண்மையான இயல்பு இவை இல்லை. இன்ப துன்பங்களிலிருந்து சிறிது நேரம் மட்டுமே தப்பித்திருப்பது உண்மையான மோக்ஷத்தின் குறியீடு இல்லை. உண்மையான ஞானம் என்பது, முற்காலத்திலும், தற்காலத்திலும், பிற்காலத்திலும் நிலைத்து நிற்கும் நிர்மலமான ஆனந்தம் தான் நீங்கள் என்பதனை உணர்வதே ஆகும்.

– கீதா வாஹினி, அத்தியாயம் 14

6th March 2012

உண்மையான கழிவிரக்கம் (தான் செய்த குற்றங்களை எண்ணி வருந்துவது) மட்டுமே உங்கள் பாவத்தை புனிதமாக மாற்றப் போதுமானது. கடவுள் மிகுந்த அருளுடன் அந்த கழிவிரக்கத்தை ஏற்றுக்கொண்டு அவரது ஆசிகளைப் பொழிகிறார். ஞானம் உதிக்கும் வரையிலும் பாவச் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கொள்ளையன் இரத்னகாரன், அந்த கழிவிரக்கத்தால் தான் புனிதன் ஆனான் இல்லையா? அவன் (இராமாயணம் என்கிற இதிகாசத்தை இயற்றிய) வால்மீகி மகரிஷியாக மாறினான் இல்லையா? அவனது சரித்திரம் கழிவிரக்கத்தின் மதிப்பிற்குச் சான்றாக விளங்குகிறது. பாவத்தின் விளைவிலிருந்து விடுபட்டால் மட்டும் போதுமா என நீங்கள் கேட்கலாம். புண்ணியத்தின் விளைவுகளையும் விட்டுவிட வேண்டும் அல்லவா? ஆமாம், அவ்வாறே செய்யவேண்டும். தனது வழியின் குறுக்கே வரும் அனைத்தையும் எவ்வாறு கர்ஜிக்கும் காட்டுத்தீ சாம்பலாக்கிவிடுமோ, அவ்வாறே வலிமையான ஞானத்தீயும் அனைத்து பாவங்களையும் புண்ணியங்களையும் விழுங்கி அழித்துவிடும்.

– கீதா வாஹினி, அத்தியாயம் 11

15th February 2012

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்: அர்ஜுனா! மனிதர்கள் அவர்களுடைய “தான்” எனும் தன்மையாகிய என்னை வணங்கி நாடுவதை விட்டுவிடுகின்றனர்! என்னை அடைவதற்கு அவர்கள் தவிப்பதில்லை; ஆனால் பொய்யான, நிலையில்லாத சிறிய குறிக்கோள்களையே நாடுகின்றனர். உடனடியாக பலன்கள் கிடைக்கவேண்டும் என்ற ஆசையே இப்படிப்பட்ட விந்தையான போக்குக் காரணம். இங்கே, இப்போதே கிடைக்கக்கூடியவற்றையே, புலன்களால் கிரஹிக்கக் கூடிய உருவத்துடன் கூடியவற்றையே மனிதர்கள் நாடுகின்றனர். அவர்கள் அற்பமான இன்பங்களால் ஈர்க்கப்படுகின்றனர். மேலும் மனிதர்களுக்கு பொதுவாக தேவையான அளவிற்கு பொறுமை இருப்பதில்லை. அவர்கள் கண்ணினால் பார்க்கக்கூடிய உடலிற்கு (ஸ்தூல சரீரத்திற்கு) பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஞானத்தை அடைவதே உண்மையான உள்முக வெற்றி. அதை நீண்ட கடினமான போராட்டத்தின் மூலமே பெற முடியும். ஆன்மீக நாட்டமுள்ள சிலர்தான் தெய்வீகத்தை நாடுகிறார்கள். அப்படிப்பட்ட ஞானிகள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு செயலையும் அவரது (தெய்வத்தின்) கட்டளையை நிறைவேற்றுவதாக எண்ணி அவரது அருளைப் பெருவதற்கான சாதனம் எனக்கொள்ள வேண்டும்.

– கீதா வாஹினி (அத்தியாயம் 9)