Tag Archives: Younger Children

Sai Inspires (Tamil Translation): 15th February 2013

The mother spends more time tending the sick child; she asks the older children to look after themselves but feeds the infant with her own hands. That does not mean that she has no love towards the grown-ups. So too, do not think that because God does not ostensibly shower attention on a person, that he or she is not receiving God’s Love and Grace. In God’s view, there is no one senior or junior amongst devotees. Note this also – in this Avatar (Divine Incarnation), the wicked will not be destroyed; they will be corrected, reformed, educated and led back to the path from which they have strayed. The white-ant infested tree will not be cut; it will be saved.

– Sathya Sai Speaks, Vol I, MahaShivarathri, 1955

அன்னை நோய்வாய்ப்பட்ட குழந்தையை கவனிப்பதில் தான்  அதிக நேரம் செலவழிப்பாள்; மூத்த குழந்தைகளைத் தம்மைத் தாமே பார்த்துக் கொள்ளும்படி கூறுவாள். ஆனால் சிறு குழந்தைக்குத் தன் கையாலேயே உணவளிப்பாள். அது வளர்ந்தவர்களிடம் அவளுக்கு அன்பில்லை என்பதனால் இல்லை. அதே போல, ஒரு மனிதரின் பால் கடவுளின் கவனம் அதிகமாக இல்லாததால் அவருக்குக் கடவுளின் அன்போ அருளோ இல்லை என்று எண்ணாதீர்கள். கடவுளின் பார்வையில், பக்தர்களில் யாரும் மூத்தவரோ இளையவரோ அல்ல. இதனையும் கவனியுங்கள் – இந்த அவதாரத்தில் தீயவர்கள் அழிக்கப்படமாட்டார்கள்; அவர்கள் திருத்தப்படுவார்கள், மறுமலர்ச்சியூட்டப்படுவார்கள், கற்பிக்கப்பட்டு, அவர்கள் விலகி வந்த பாதையில் மீண்டும் இட்டுச் செல்லப்படுவார்கள். கறையானால் பாதிக்கப்பட்ட மரம் வெட்டப்படாது; காப்பாற்றப்படும்.

– சாயி அருளமுதம், அத்தியாயம் 1, மஹாசிவராத்திரி, 1955