Sai Inspires (Tamil Translation): 12th June 2012

The epic Ramayana was sparked off by two little incidents involving two minor characters – the resentment of Kaikeyi’s maid Manthara and the lust of Ravana’s sister, Surpanakha. Be aware that a tiny spark of these two inimical qualities desire and anger (kama and krodha), is sufficient to destroy peace and joy in your life. Weed them out before they destroy you. Work hard to clear your mind from of all its likes and dislikes. If you succeed in restraining their flow towards the objective world, your senses will be rendered ineffective. Once you accomplish the extinction of the mind, these evil qualities cannot harm you and you will remain in joy and peace. Sensory activity is the warp as well as the woof of the mind. When that ceases, the mind vanishes – it starves and dies.

– Divine Discourse, March 17, 1966

இராமாயணம் இரண்டு சிறிய பாத்திரங்கள் சம்பந்தப்பட்ட இரண்டு சிறு சம்பவங்களால் தான் பொறி தட்டித் துவங்கியது – கைகேயியின் பணியாளான மந்தரையின் கோபத்தாலும், இராவணனின் தங்கை சூற்பனகையின் காமத்தாலும். சிறு பொறிகளான இவ்விரண்டு தீங்கு விளைவிக்கும் குணங்களான ஆசை மற்றும் கோபம் (காமம் மற்றும் க்ரோதம்) ஆகியவையே உங்கள் வாழ்வின் அமைதியையும் மகிழ்ச்சியையும் அழிப்பதற்குப் போதுமானவை என்பதனை உணருங்கள். அவை உங்களை அழிக்கும் முன்னரே அவற்றைக் களைந்துவிடுங்கள். உங்கள் மனதினை ஆசைகள் மற்றும் வெறுப்புகளிலிருந்து சுத்தப்படுத்துவதற்கு கடினமாகப் பாடுபடுங்கள். நீங்கள் அவற்றின் போக்கு பௌதிக உலகின்பால் செல்வதைத் தடை செய்வதில் வெற்றியடைந்தால், உங்கள் புலன்கள் செயலிழந்து போகும். உங்கள் மனதை அணைப்பதில் நீங்கள் வெற்றி கொண்டால், இந்தத் தீய குணங்கள் உங்களுக்குத் தீங்கு விளைவிக்காது, நீங்கள் மகிழ்ச்சியிலும் அமைதியிலும் நிலைத்திருப்பீர்கள். புலன்களின் செயல்பாடு மனதின் பாவும் உண்டையுமாக இருக்கிறது. அது நிற்கும்போது, மனம் மறைந்துவிடும் – அது பசியினால் வாடி இறந்துவிடும்.

– தெய்வீக உரை, மார்ச் 17, 1966

Leave a comment